பூர்விக வீடு வாஸ்து

பழைய வீடுகளை மாற்றியமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வாஸ்து வழிமுறை

 

பூர்விக வீடு வாஸ்து
பூர்விக வீடு வாஸ்து

பழைய வீடுகளை மாற்றியமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வாஸ்து வழிமுறைகள்

 

பழமையான கட்டிடத்தின் வடகிழக்குப் பகுதியை சரி செய்யும் பொழுது கண்டிப்பாக தடைகள் மற்றும் விபத்து ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் அதிகம்.ஆகவே மிகுந்த எச்சரிக்கை அமைப்போடு வடகிழக்கில் கவனம் இருக்க வேண்டும். பழைய வீட்டில் தென் கிழக்கு பகுதியை சரி செய்யும் பொழுது உடன்பிறந்தவர்கள் உறவில் பிரச்சினை ஏற்பட்டு வேலை செய்வதில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

 

தென் மேற்பகுதியில் பழைய வீடுகளை மாற்றம் செய்ய  இடிக்கும்போது, புதுப்பிக்கும்போதும் அல்லது புதிய கட்டிடங்களை உருவாக்கும் போது பணம் சார்ந்த தடைகளை ஏற்படுத்தும். இதனால் செய்ய விடாமல் தடுக்கும்.

 

வடமேற்கு பகுதியில் பழைய வீடுகளை மாற்றியமைக்கும் போது, அந்த இடத்தின் உரிமையாளருக்கு  உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு தடைகளை கொடுக்கும்.

பிரம்மஸ்தான பகுதியை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு செய்ய வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அதிகம். சில நேரங்களில் அகால மரணங்கள் கூட ஏற்படககூடிய சூல்நிலையை உறுவாக்கும்.

 

ஆக மேற்கூறிய பதிவுகள் அனைத்தும் எனது வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவ பதிவுகளே ஆகும். அனுபவ ரீதியில் நான் குறிப்பிடுவது என்னவென்றால் ஒரு வீட்டை மாற்றி அமைக்கும் போதும், புதுப்பிக்கும் போது ஒரு கொத்தனார் அல்லது நண்பர்கள் பேச்சையோ மற்ற ஒருவருடைய பேச்சைக் கேட்காமல், வாஸ்துவில் ஆழ்ந்த அறிவுடைய   வாஸ்து நிபுணரின் அறிவுருத்தவோடு செய்வது நல்லது.

error: Content is protected !!