
பூஜை அறைகள்
பூஜை அறைகள் என்பதே ஒரு சில மன குறைகளை இறக்கி வைக்கும் இடமாக ஒரு வீட்டில் உள்ளது.அப்படிப்பட்ட இடத்தை தவறான அமைப்பில் வைக்கும் போது நடிகர் சிவாஜிகணேசன் ஐயா அவர்கள் நடித்த படத்தின் வசனம் போல ஆகிவிடக்கூடாது. அதாவது தண்ணீர் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காய்ந்து விட்டால்,அந்த நதி யாரைப் பார்த்து ஆறுதல் அடையும் அன்பது போல ஒருவரின் வாழ்க்கை ஆகிவிடக்கூடாது.
அந்தவகையில் பூஜை அறைகள் என்பது ஒரு வீட்டில் ஈசானமூலைப்பகுதியிலும்,நைருதி மூலை சார்ந்த பகுதியிலும் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. எக்காரணம் கொண்டும் படுக்கைஅறையில் நுழைந்து பூஜை அறைக்கு போவது போன்ற அமைப்புக்கள் கூடாது.
பூஜை அறைகளுக்கு கோபுரம் கட்டுவது மற்றும், கழிவறைகளை ஒட்டி பூஜை அறைகளை அமைக்கும் போது இரண்டு சுவர்களை போட்டு இடையில் சந்து போன்ற அமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற தவறுகளை செய்ய கூடாது. இந்த இடையே உள்ள சந்து ஒரு வித பிரச்சனையை அந்த வீட்டில் ஏற்படுத்தும். அப்படி அமைக்க முடியவில்லை என்றால் ஒரு சரியான இடத்தில் செல்ப் போன்று அமைத்து கொள்வது நல்லது.
எந்திரம் வேண்டுமானால் வைத்து கொள்ளுங்கள். அது உங்கள்னாநம்பிக்கை மற்றும் எல்ல மந்திரங்களும் உண்மை.அனைத்து மந்திரங்களையும் நமது சைவ மதத்தின் பத்தாம் திருமுறையில் திருமூலப் பெருமானால் கூறப்பட்டுள்ளது. தகடுகளை வீட்டில் எங்கும் பதிக்க வேண்டாம்.அதனால் எந்தவித பிரயோசனமும் கிடையாது.
ஒவ்வொரு வீட்டிலும் காசி அன்னபூரணி சிறிய அளவிலான உருவம் மற்றும் காமாட்சி விளக்கோ,அல்லது கஜலட்சுமி விளக்கோ வேண்டும். இந்த இரண்டு விளக்கு மற்றும் அன்னபூரணி சிலா உருவங்கள் உங்களுக்கு சரியான அமைப்பில் வைக்கும் போதும் வழிபாடு செய்யும் போதும் உங்களுக்கு நல்லது நடக்கும். அதனால் அன்னபூரணி அமைப்பில் தினமும் ஒரு விசயம் செய்ய வேண்டும். அதேபோல காமாட்சி விளக்கு மற்றும் கஜலட்சுமி விளக்கு இந்த இரண்டு விளக்குகளை ஒரு சரியான முறையில் வைக்க வேண்டும். இதனை நான் நேரில் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் சரியான விளக்கங்கள் கூறி வருகின்றேன்.
வழிபாடு தவறான முறையில் இருக்கும் போது மனிதர்கள் பின்னால் செல்வோம்.வழிபாடு சரியாக இருந்தால் இறைவனின் பின்னால் செல்வோம்.இது சரியான பூஜை அறை இருந்தால்தான் நடக்கும்.சாமி படங்களில் பூ கிய விடக்கூடாது அப்படி காய்ந்தால் நமது பணவிசயத்தில் சிரமம் கொடுக்கும்.

கடவுள் நமக்கு கொடுப்பார் என்கிற முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்ய வேண்டும். இந்த இடத்தில் நான் ஒன்றைக்குறிப்பிட்டு சொல்கின்றேன். கடவுளும் வாஸ்துவும் ஒன்றுதான். இரண்டையும் கண்ணால் பார்க்க முடியாது. ஆக வாஸ்துபடி வீடு இருந்தால் மட்டுமே உண்மையான தெய்வ வழிபாடாக இருக்கும்.இல்லையென்றால் தெய்வ வழிபாடும் ஒரு சம்பரதாயங்கள் போல ஆகிவிடும்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:
jagan6666@gmail.com
Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)