
ஆயாதி வாஸ்துவில் அம்சபலன்கள்
இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் வாஸ்து சோடச மனைப் பொருத்தத்தின் வம்ச பொருத்தத்தின் பலன்களை பார்ப்போம்.
ஒரு இல்லத்திற்கு வம்ச பொருத்தம் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் வசிக்கின்ற மக்களை வம்சாவழியாக சிறப்புடன் வாழ வைக்கும். அந்த வீட்டில் உள்ளவர்களை எதற்காகவும் மற்றவர்களை சார்ந்து வாழாத ஒரு தனித்திறமையான வாழ்வு கிடைக்கும்.
வம்ச பொருத்தம் என்பது நான்கு வகைப்படும். அந்த நான்கு வகைகளுக்கும் நின்கு விதமான பலன்கள் உண்டு.அவைகள் எனும்போது ஆட்சி வம்சம், அளிக்கும் வம்சம்,உழைக்கும் வம்சம், அதிகார வம்சம் என நான்கு வகைகளாக பிரிக்கலாம். இதனையே பழந்தமிழர் நான்கு வகையாக பிரித்திருந்தனர்.
ஒரு வீட்டின் வெளிப்புற நீள அகலங்களை ஒன்பதில் பெருக்கி நான்கில் வகுக்க வரும் மீதி என்பது நான்கு எண்ணிக்கை உள்ளாக மட்டுமே வரும் அதன் பலன்களை உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.
1.ஆட்சி வம்சம்:
மிகுந்த அதிகாரம் மற்றும் புகழோடு வாழ்வார்கள். இந்த பொருத்தம் அரசியல் துறையில் இருப்பவர்களின்இல்லங்களில் இருந்தாக வேண்டும்.
2.அதிகார வம்சம் :
இதன்பலன் ஒரு மிகப்பெரிய வேலைக்கு மற்றும் அரசு துறை சார்ந்த வேலை வாய்ப்பில் இருப்பவர்களில் இல்லம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
3.அளிக்கும் வம்சம் :
இந்த பொருத்த அமைப்பில் வீடு கட்டாயமாக இன்று வியாபாரம் மற்றும் பெறுந்தொழில் நிறுவனங்களை வைத்து நடத்துகின்ற மக்களின் இல்லங்களை கட்டாயமாக இந்த பொருத்தம் பொறுந்தும் அமைப்பில் அமைக்க வேண்டும்.
4.உழைக்கும் வம்சம் :
இந்த பொருத்தத்தை தவிர்க்க வேண்டும். இந்த பொருத்தம் அமைந்த இல்லங்களில் வசிக்கும் மக்கள் என்றும் வறுமை உள்ள மக்களாக மாற்றி விடும்.வருகின்ற வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியாக உள்ள வாழ்வாக இருக்கும்.
ஆக வம்சாவழியாக வம்சத்தோடு மக்கள் வாழ வேண்டும் என்றாலே கட்டாயமாக வாஸ்துவின் மனையடி சாஸ்திர அமைப்பில் அம்ச பொருத்தம் பொறுந்தும் வீடாக இருக்க வேண்டும். மீண்டும் வேறு பொருத்தம் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:jagan6666@gmail.com