யார் பெயரில் இடம் இருக்க வேண்டும்?

பெண்கள் பெயரில் நிலம் வாங்குவது சிறப்பா
பெண்கள் பெயரில் நிலம் வாங்குவது சிறப்பா
பெண்கள் பெயரில் நிலம் வாங்குவது சிறப்பா
வாஸ்துவின் நன்மையை பெறுவது குடியிருப்பவரா ? (அ) வீட்டின் உரிமையாளரா
வாஸ்துவின் நன்மையை பெறுவது குடியிருப்பவரா ? (அ) வீட்டின் உரிமையாளரா

நன்மை , தீமை யாருக்கு ?

நாம் ஓரிடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்ல வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். அந்த வண்டியானது சொந்த வண்டியா..? அல்லது வாடகை வண்டியா என்பது நமக்கு முக்கியமல்ல. அந்த வண்டியில் பாதுகாப்பு அம்சங்கள் எப்படி இருக்கிறது, என்பதுதான் நமக்கு முக்கியம். வண்டியில் பயணம் செய்யும்பொழுது ஏற்படும் நன்மை தீமை , வண்டியில் உள்ளவர்கள் மீதே தாக்கத்தை ஏற்படுத்தும். வண்டியின் உரிமையாளர் மீதோ , வண்டிக்குரிய நிறுவனத்தின் மீதோ எந்தத் தாக்கத்தையும் அந்த வண்டி ஏற்படுத்தாது.

அதுபோன்றுதான் வாடகை வீடே சொந்த வீடோ அந்த வீட்டில் யார்குடியிருக்கிறார்களோ அவர்கள் மீதுதான் பலன் அமையும்.

யாருக்கு பலன்

வீட்டின் உரிமையாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அடிநிலம் அதாவது இடம் யாருடையதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் மீது அமைந்த வீடுகளில் குடியிருப்பவர்கள் மீது மட்டுமே வாஸ்துவின் பலன்கள் அமையும்.

பொது மக்களாகிய நாம் இந்த வாஸ்துவின் அடிப்படைகள் மற்றும் விதிகள் தெரியாத காரணத்தால் பல பேரால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம்.

பெண்கள் பெயரில் நிலம் வாங்குவது சிறப்பா .... ?

சூரியன் ஆண் வடிவம், பூமி பெண் வடிவம் இது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. சூரியன், பூமி இவைகள் மட்டுமே உயிரினங்கள் வாழ மிக முக்கியமான காரணம்.

அடிப்படையில் பூமி, பெண் வடிவம் என்பதால் எந்த நிலம் வாங்கினாலும் பெண்கள் பெயரில் வாங்குவது சிறப்பு. மற்றொரு வகையில் பெண்கள் பெயரில் நிலம் அமைவதால் பொதுவாகவே ஆண்களுக்கு ஆயுள் கூடும்.