வாஸ்துவின் சக்தி

வாஸ்துவின் சக்தி

வாஸ்துவின் சக்தி

Living with peace of mind
வாஸ்துவின் சக்தி

 

 

 

 

 

 

 

 

ஒரு சக்தியை மற்றொரு சக்தியால் அளிக்க முடியாது.அப்படி அளிக்கும் போது அது மற்றொரு சக்தியாக மாறிவிடும். எடுத்துக்காட்டாக நெருப்பை ஏற்படுத்தினால் அதில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அது வாயு சக்தியாக மாற்றம் அடைகிறது. அதுவே நெருப்பை நாம் அணைப்பதற்காக நீரை ஊற்றும் போது, மண்சக்தி ஆகிய கரியாக மாறி விடுகிறது.ஆக எந்தவொரு சக்தியும் அழிவதில்லை.அது வேறு சக்தியாக மாற்றம் அடைகிறது. அதனை சரியான விகிதத்தில் நாம் உபயோகப்படுத்தும்போது அந்த சக்தியின் வழியாக வளமான வாழ்வு வாழமுடியும். இதனையே நமது முன்னோர்கள் வாஸ்து சாஸ்திரம் என்று குறிப்பிட்டனர்.

நுர்,நிலம், காற்று, அக்னி, ஆகாயம் என்கிற பஞ்சபூத சக்திகளின் வழியாகவே இந்த உலகம் இயங்கி வருகிறது. தண்ணீர் என்கிற சக்தி சூரியனை கொண்டு வெப்பம் அடைந்து காற்றில் கரைந்து மீண்டும் குளிர்ந்த நிலைக்கு காற்று மூலமாக மாறி மீண்டும் மழையாக பூமியில் இறங்குகிறது. ஆக அன்றாட மனித வாழ்விற்கு இந்த பஞ்ச பூதங்களின் கூட்டு களவியே உதவியாக இருக்கிறது.

அந்தவகையில் நாம் வசிக்கும் இல்லத்திலும், இந்த சக்திகளை ஒன்றுடன் இணைத்து பிணைத்து இல்லத்தை அமைக்கும் போது அவ்விடத்தில் இந்த பஞ்ச பூதசக்திகள் அங்கு வசிக்கும் மக்களின் மனநிலையில் மற்றும் உடல்நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அம்மனிதர்களை இயங்கவைக்கிறது.

இந்த இடத்தில் நமது ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடக்கும் போது மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும்.அதாவது எட்டாம் இட மற்றும் பனிரண்டாம் இட தொடர்புடைய கிரகங்களின் தசா புத்தி நடக்கும் போது ஜாதகத்தின் வழியாக நல்ல நேரம் நடக்கும் என்றால் கட்டாயமாக நடக்காது. ஆகவே ஜாதகத்தில் பலன் என்பது நல்ல தசாபுத்தி நடக்கும் போது மட்டுமே நாம் நினைக்கும் எண்ணங்களை செயல் படுத்தி வெற்றி பெற முடியும். அதனையே பரிகாரம் மூலமாக தவறான பலன் கொடுக்கும் கிரகத்தின் பலனை மாற்றி விட முடியும் என்பதும் வீண் முயற்சி என்றுதான் சொல்லுவேன்.

இதனை விடுத்து பஞ்ச பூத சக்தியை வாஸ்து என்கிற பெயரில் நீங்கள் நிலைநிறுத்தி நீங்கள் வாழும் போது மிக அற்புதமாக வாழ்க்கை அதாவது நீங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ முடியும். ஏன் நவகிரகங்களில் தாக்குதல் கூட அந்த இல்லத்தில் வசிக்கும் மக்களை தாக்காது. ஏனெனில் பஞ்ச பூதங்களும் நவகிரகங்களும் ஒரே சக்தி என்றுதான் சொல்லுவேன்.