வாஸ்துப்படி வீட்டின் ஜன்னல் அமைப்பு.

 

வாஸ்துப்படி வீட்டின் ஜன்னல் அமைப்பு.
வாஸ்துப்படி வீட்டின் ஜன்னல் அமைப்பு.

வீட்டிற்கு ஜன்னல் அமைப்பின் பலன்கள் எனும்போது ஓரு வீட்டிற்கு தலைவாசல் மற்றும் உள்வாசல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதனைப்போலவே ஜன்னல்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. ஒரு வீட்டிற்கு காற்று அமைப்பை கொடுக்கும் வெண்டிலேட்டர்கள்.  ஒரு வீட்டிற்கு கண்கள் என்றால்,ஒரு வீட்டின் மூச்சுக்காற்றாக இருப்பது ஜன்னல்களே ஆகும். ஆக ஒவ்வொரு திசைகளிலும் இருக்கும் ஜன்னல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வீட்டின்  வடக்கு ஜன்னல் என்பது ஒரு இல்லத்தில் கட்டாயமாக வடகிழக்கு பகுதியில் வடக்கு சுவற்றில் மற்றும் கிழக்கு சுவரில் வரவேண்டும்.  இந்த ஜன்னல் கடந்து அதன் மேற்கு புறத்தில் மற்றும் கிழக்கில் தெற்கு புறத்தில்  வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு வேண்டுமானால் அதிகப்படியாக வைத்து கொள்ளலாம். இல்லையெனில் வாஸ்து அமைப்புக்காக தேவைகள் கிடையாது.

அந்தவகையில் வடக்கு ஜன்னல் என்பது வீட்டின் ஆண்களின் வருமானத்தை உறுதிபடுத்தும் இடம் ஆகும்.கிழக்கு ஜன்னல் என்பது வீட்டில் ஆரோக்கியமான வாழ்க்கை வழங்கும் ஜன்னல் ஆகும். எனவே வடக்கு மற்றும் கிழக்கு ஜன்னலை வருடம் முழுவதும் ஏன் அந்த வீட்டின் மனையடி அமைப்பு சாஸ்திரத்தில் ஒரு மனைக்கு என்ன வயது உள்ளதோ அதாவது ஆயுள்காலம் சொல்லப்பட்டு உள்ளதோ அதன் காலம் வரை இரவுபகல் எல்லா நேரமும் திறந்து இருக்க வேண்டும். 
 ஆக  ஜன்னல்கள் இல்லாத வீட்டில் குடியிருப்பதும் மிகப்பெரிய தவறு ஆகும். இதனால் வீட்டில் வருமானம் பாதிக்கப்படும். பல இடங்களில் இதன் காரணமாக பெண்களின் வருமானம் அதிகமாகி அந்த வீட்டில் ஆண்கள் அடிமைபோல வாழும்சூல்நிலையை கொடுக்கும்.கண் பார்வை கோளாறுகள் உள்ள குழந்தை பிறப்பதற்கு துணை புரியும்.    மற்றும் உதடு கிழிந்த மற்றும் காது  கேளாத நிலை உள்ள குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. 
வடக்கு மற்றும் கிழக்கு இரண்டு பகுதி ஜன்னல்களுமே மிக முக்கியமானது. கொசு வருகிறது என்றால் வலைகளை போட்டு கொள்ளுங்கள். கொசு வரக்கூடாது என்று மூடி வைக்க பட்ட வீடுகள் மற்றும் ஜன்னல் இருந்தும் எப்பொழுதுமே மூடிவைத்தவர்கள் வீட்டிலும் ஜன்னல்கள் இருக்காத அமைப்பில் என்ன கெடுதலான பலன்களையே கொடுக்கும். 

vastu for windows in house
vastu for windows in house

வடக்கு மற்றும் கிழக்கு ஜன்னலுக்கு அடுத்த படியாக வடமேற்கு மற்றும் தென்கிழக்கில் ஜன்னல்கள் மேற்கு சுவரின் வடக்கிலும், தெற்கு சுவரின் கிழக்கிலும் கட்டாயம் ஜன்னல்கள் வேண்டும். இதில் வடமேற்கில் எப்பொழுதும் திறப்பாய் இருக்க வேண்டும். தென்கிழக்கில் தேவை படுகின்ற போது திறக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.
வீட்டிற்கு தென் கிழக்கில் கிழக்கு பகுதியில் வரக்கூடிய ஜன்னல் சமையல் அறையில் வடகிழக்கில் வரவேண்டும்.இங்கு ஜன்னல் வருவதால் அந்த வீட்டின் பெண்கள் எப்பொழுதுமே  இயற்கையான தன்மையுடன்  இருந்து அடுத்த தலைமுறையை அதாவது குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் வளர்ப்பார்கள்.
  வீட்டிற்கு தெற்குமற்றும் மேற்கு பகுதிகளில் வரக்கூடிய ஜன்னல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. தென்மேற்கு படுக்கை அறையில் வரக்கூடிய ஜன்னல்கள் மட்டும் அந்த அறையில் தென்மேற்கு பகுதியில்  இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்த அறையில் தெற்கு புற கிழக்கிலும்,மேற்கு புற வடக்கிலும் வருவதில் தவறு எதுவும் கிடையாது. அதனை இரவில் திறந்து பகலில் மூடி விடுவது வாஸ்துபடி நல்லது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)