வாஸ்துப்படி வீடு கட்டுவது எப்படி

வாஸ்து பார்த்து வீடு கட்டுவது
வாஸ்து பார்த்து வீடு கட்டுவது

 

 

 

 

 

 

பல நபர்களுக்கு சொந்த வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அப்படி கட்டக்கூடிய வீடு வாஸ்துப்படிதான் கட்டுகிறோமா என்ற கேள்வியும் நிறைய பேரிடம் உண்டு.அல்லது வாஸ்து என்பது தெரியாமலேயே கட்டக்கூடிய மக்களுக்கு நிறையபேர் உண்டு

வாஸ்துப்படி நீங்க கட்டபோகுமிடம் 50% சரியாக இருந்தால் உங்களுக்கு பயன்படும். இடம் தவறாக இருந்தால் என்னதான் வாஸ்து நிபுணரின் உதவியால் வீடு கட்டினாலும் வளர்ச்சி என்பது கிடையாது. நாம் வீடு கட்டுமிடம் மனிதன் வசிக்க தகுந்த இடமாகவும், இயற்கை இடர்பாடுகள் எதுவும் இல்லாமல் இருக்கிறதா,சாலைகளின் அமைப்பாக தெருகுத்து, தெருபார்வை, மேடு, பள்ளம், உச்சம் நீச்சம் போன்றவைகளை பார்த்து இடத்தை தேர்தெடுப்பது மிக அவசியம்.

பஞ்சபூத சக்திகளின் கலவையை நீங்கள் கட்டக்கூடிய கட்டிடத்தில் சரியாக பொருத்தி அதனுடைய பலனை அனுபவிப்பதே வாஸ்து. அதாவது பஞ்சபூதங்களான நீர் நிலம் காற்று அக்னி ஆகாயம் என்கிற சக்திகளை,அதற்குண்டான இடத்தில் சரியாக பொருத்தி அதன் நன்மைகளை அனுபவிப்பதே வாஸ்து.

இது ஒரு அற்புதமான தொழில்நுட்ப சாஸ்திரம் ஆகும். இந்த டெக்னாலஜியை உபயோகித்துக் கொண்டவர்கள் தன்னுடைய வாழ்வில் மிக உன்னதமான வாழ்க்கை வாழ்வார்கள்

வாஸ்து பார்த்து வீடு கட்டுவது என்பது நீங்கள் ஒரு சிறந்த அனுபவமிக்க டாக்டரை அணுகி உங்களுக்கு மருத்துவம் பார்த்து கொள்ளும் கதை. எனவே வாஸ்து பார்த்து வீடு கட்டினால் நன்மைகள் பல ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.உங்கள் கட்டிடத்தை நீங்களே வாஸ்து பார்த்து அமைப்பது என்பது மருந்து கடையில் மருந்து வாங்கி நோயை குணப்படுத்துவதை போன்ற செயல் ஆகும். இதனை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.