
வடக்கு ஏன் அதிக’ இடங்கள்
நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்.வாஸ்து ரீதியாக ஏன் வடக்கு மற்றும் கிழக்கு அதிக இடங்களை விட வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பூமி உருவாகி நிலைபெற்று இருப்பதற்கு காரணம் சூரியனே. சூரியனில் என்று சொன்னால் இந்த பூமி உள்ளது. அறிவியல் துறையில் முன்னேற முன்னேற மனிதர்கள் தன்னையும் தன் குடும்பத்தையும் இயற்கை சார்ந்த நிகழ்வுகளில் பாதுகாத்துக்கொள்ள கட்டிடங்களை கட்டினார்கள். அந்த வகையில் அது சார்ந்த சாஸ்திரத்தை வாசஸ்தலம் அல்லது, வாஸ்து என்கின்ற பெயரில் அழைத்தார்கள்.
ஒரு இடம் என்பது கிழக்கு-மேற்கு நீளம் உள்ள இடம் சாஸ்திரத்திற்கு முதல் தரமாக உள்ள மனையாக அங்கம் வகிக்கிறது இதனை ஆண் மனை என்றும், தெற்கு வடக்கு நீளம் உள்ள மனைகளை பெண்மனை என்றும் அழைத்தார்கள்.
சூரிய ஒளி காலை நேரத்தில் ஒரு இல்லத்தின் முன்பு அல்லது, ஒரு இல்லத்திலோ படும்போது அதன் தாக்கம் கண்டிப்பாக அங்குள்ள உயிர்களின் மீதும் இருக்கும். அந்த வகையில் நமது மனைக்கு அல்லது இல்லத்திற்கு கிழக்கு புறங்களில் உயரமான மரங்கள் இருந்தால் சூரியனின் ஒளி நம்மீது படாது தடுக்கப்படும்.
ஏன் ஒரு இல்லத்திற்கு வடக்கு பகுதியில் அதிக இடைவெளி இருக்க வேண்டும் அதன் நோக்கம் என்ன என்று பார்க்கும்போது, இதுவும் சூரிய சக்தியின் தனிமையை உணரத் தான். சூரியன் வடக்கில் பயணப்படும் ஆறு மாத காலத்தை உத்தராயணம் என்றும், தெற்கில் இருக்கும் ஆறு மாத காலத்தை தட்சாயண காலம் என்றும் நமது முன்னோர்கள் கூறுகிறார்கள். அதாவது டிசம்பர் 21 இல் இருந்து ஜூன் 20 வரையிலும் உத்தராயண காலம் என்றும், ஜூன் 21 லிருந்து டிசம்பர் 20 வரையிலும் தட்சாயண காலம் என்றும் நமது அறிவியல் கூறுகிறது. தமிழ் முறைப்படி தை மாதம் ஒன்றாம் தேதியை உத்தராயணம் என்று சொல்லுகின்றோம் . ஆகவே தட்சாயண காலத்தில் எழுச்சி பெறக்கூடிய பல நோய்கள் உத்தராயண காலத்தில் அடங்கும் என்பது நமது முன்னோர்கள் கூற்று.
ஆகவே திருமண நிகழ்வுகள் வீடு கட்டுதல் போன்ற செயல்களை உத்தராயண காலத்தில் தொடங்கினால் நன்மை உண்டாகும்.இதனை தான் வாஸ்து கூறுகிறது. இதற்கு காரணம் உத்தராயணத்தில் சூரியனுக்கு வலிமை. இதனைத்தான் பீஷ்மர் கூட உத்தராயணம் வரை இருந்து கண்ணபிரான் உத்தரவின்படி ஆசானாக இருந்து, உத்தராயணம் ஆரம்பமான பிறகு எல்லையற்ற சக்தியுடன் பிரபஞ்ச சக்தியில் கலந்து விட்டார் என சாஸ்திரங்கள் கூறுகிறது. இதனைத்தான் பீஷ்ம ஏகாதசி கூட கொண்டாடுகின்றோம். ஆகவே உத்தராயண காலத்தில் சூரிய ஒளியை தேவைக்கேற்ற நாம் பெற வேண்டும் என்ற நோக்கில் தெற்கை விட வடக்கில் அதிக காலி இடம் இருக்க வேண்டும் என்பது வாஸ்து சாஸ்திர அனுபவமுள்ள நிபுணரின் கருத்து.
ஆகவே வீடாக இருந்தாலும் சரி தொழிற்சாலையாக இருந்தாலும் சரி வடக்கு என்பது அதிக இடங்கள் வேண்டும். மீண்டும் வேறு வாஸ்து சார்ந்த கருத்துகளோடு சந்திப்போம். நன்றி வணக்கம்.