வாஸ்துப்படி கிணறுகள்

well for vastu
well for vastu

vastu for well

வீட்டில் தண்ணீருக்கு   உண்டான பகுதியான வடகிழக்கில் மட்டுமே ஆழ்துளை கிணறு மற்றும், கிணறு அமைப்புகள் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு  நன்மைகள் நடக்கும். ஒரு வீட்டில் மற்ற வேறு திசைகளில் போர்வெல் அல்லது கிணறு போன்ற அமைப்புகள் இருந்தால் எப்படிப்பட்ட தவறான பலன்கள் நடக்கும் என்பதனை  பார்ப்போம்.
தென் கிழக்கு கிணறு மற்றும் ஆழ்துழாய் கிணறு இருக்கும் போது எந்தமாதிரி பிரச்சனைகளை கொடுக்கும் என்றால்,குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு  மற்றும் இரண்டாவது மூன்றாவது குழந்தைகளுக்கு கெட்ட பெயர் வர காரணமாகி தவறான குழந்தைகளாக உறுவாகி விடுவார்கள். பெண்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள் இதனால் மருத்துவ செலவுகள் குறிப்பாக பெண்களுக்கு வயிறு சம்பந்தமான நோய்களை உண்டு பண்ணும்.வீட்டின் பெண் குழந்தைகளுக்கும் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
தென் மேற்கு கிணறு இருந்தால் எந்த தவறுகளை உண்டு பண்ணும் எனும்போது,வீட்டிற்கு உட்பகுதி மற்றும் வெளிப்புற பகுதியில் தென் மேற்கில் எங்கு ஆழ்துளை கிணறு மற்றும் கிணறு போன்ற அமைப்புகள் வந்தாலும் தவறே. இதனால் கெடுதலான பலன்களே தவிர நன்மை எதுவும் கிடையாது இதனால் பணம் சம்மந்தபட்ட பிரச்சினை வருதல் மற்றும் உடல்ரீதியான அதிகப்படியான பாதிப்பு ஆண்களுக்கு  ஏற்படுத்தும்.திடீரென அகால மரணம் ஏற்படுதல். மர்ம பகுதிகளில் பிரச்சனை ஏற்படுதல் கிணற்றில் ஆற்றில் மூழ்கி இறத்தல் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை   தொழில் நஷ்டம் ஏற்பட்டு தொழில் படிப்படியாக தொழில் காணமல் போவது, ஆண்களுக்கு பெண்களால் தவறான தொடர்பு ஏற்பட்டு அவப்பெயர் உண்டாகுதல்போன்ற பிரச்சனைகள் உண்டாக்கும்.
வடமேற்கில் கிணறு மற்றும் ஆழ்துழாய் கிணறு இருந்தால் எந்தவிதமான பாதிப்பு ஏற்படுத்தும் எனும்போதுவீட்டிற்கு மொத்த இடத்தில் வீட்டின் உள்ளே மற்றும் சரி வீட்டிற்கு வெளிப்புறத்திலும் சரி வட மேற்கு பகுதியில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு போன்ற அமைப்புகள்  இருப்பது பற்றி பார்க்கலாம். பணம் வெளியே கொடுத்து வராமல் போவது மனநலம்  கெடுதல் ஆகி மனநோய்க்கு ஆளாகுதல்.  வீட்டில் இருக்கும் வயதுக்கு வந்த பெண்கள் வீட்டை விட்டு காதல் திருமணம் செய்வதன் மூலமாக பெண்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுதல் செல்வம் குறைந்து வறுமை ஏற்படுதல்.நல்லவர்களாக இருந்தாலும் வெளி உலகத்தில் கெட்டவனாக சித்தரிக்கப்படுதல்,

well for vastu
well for vastu

ஒரு இடத்தில் தவறான இடத்தில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு இருக்கின்ற போது அதனை உடனடியாக மூடிவிட்டு வடகிழக்கு பகுதியில் ஒரு கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைப்பது மட்டுமே வாஸ்து அமைப்பில் சரியானது ஆகும்.
நமது இடத்திற்கு பக்கத்து வீட்டில் உள்ள கிணறு அமைப்புகளின் பாதிப்பு ஏற்படடுத்தாத வண்ணம் முதலில் நமது வீட்டிற்கு நான்கு புறகும் சுற்றுசுவர்கள் அவசியம் வேண்டும்.அதுவும் அது எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதனை நான் நேரில் பார்க்கும் போதுமட்டுமே சரியான வாஸ்து தீர்வுகளை உங்களுக்கு வழங்க முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)