Vastu_Awareness_Tips
வாஸ்து பலன் வீட்டு உரிமையாளருக்கா? அல்லது வீட்டில் வாடகைக்குகுடியிருப்பவருக்கா?
வாஸ்து குறைபாடுகள் வாடகைக்கு இருக்கும் வீட்டிலும் ஒருவருக்கு பாதிப்பை கொடுக்குமா என்பதனை இக்கட்டுரை வழியாக பார்க்கலாம்.மனிதர்களாகிய நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வாகனங்களை பயன்படுத்துகிறோம். அந்த வாகனம் நம்முடைய வாகனமா அல்லது #வாடகை வாகனமா என்பது நமக்கு முக்கியம் கிடையாது.அந்த வண்டியின் சாலையில் செல்லக்கூடிய திறன் மற்றும் அதன் பாதுகாப்பு நிலை என்பதும் அதன் வசதி அம்சங்கள் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம் ஆகும்.நாம் பயணம் செய்யும் போது வண்டி பாதையில் செல்லும் போது ஏற்படும் விபத்து சார்ந்த நிகழ்வுகள் வாடகை வாகனம் அல்லது சொந்த வாகனம் என்று பார்க்காமல் வண்டியில் பயணம் செய்பவர்கள் மீதே பாதிப்பினை ஏற்படுத்தும்.
ஆக #வாடகை_வீடோ #சொந்த #வீடோ அந்த வீட்டில் யார் வசிக்கின்றார்களோ அவர்கள் தான் அந்த வீட்டின் வாஸ்து சார்ந்த நன்மை மற்றும் தீமை சார்ந்த பாதிப்பை #அனுபவிப்பார்கள்.வாடகை வீட்டில் பொது மக்களாகிய ஒவ்வொருவரும் இந்த வாஸ்துவின் அடிப்படைகள் மற்றும் வாஸ்து விதிகள் தெரியாத காரணத்தால் பல பேரால் வாடகை வீட்டின் வழியாக நல்ல வாழ்க்கையை இழந்து வாழ்கிறார்கள்.ஆக இனிமேலாவது வாடகை வீட்டிற்கு சென்றாலும் தவறு கிடையாது.
நன்கு வாஸ்துவின் வழியில் ஆராய்ந்து வாஸ்து பலம் பொருந்திய நல்ல வீட்டில் குடியேறி பிரமாதமான நிம்மதியான வாழ்க்கை வாழ்வது சிறப்பு.நீங்கள் எந்த வாடகை வீட்டுக்கு சென்றாலும்,வாஸ்துவில் உள்ள முதல் விதியான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஜன்னல் மற்றும் கதவுகள் இருக்கும் படியான இல்லங்களை தேர்ந்தெடுத்து செல்வது #நல்ல_வாழ்க்கை வாழ்வதற்கான பாதையை ஏற்படுத்தி கொடுக்கும்.