வரவேற்பறை வாஸ்து/வரவேற்பு அறை வாஸ்து | Hall vastu tips in Tamil

வரவேற்பறை என்பது சூரிய ஒளி படாத வரவேற்பு அறையாக இருப்பது அது வரவேற்க தக்க வாஸ்து கிடையாது. அப்படி ஒளி மற்றும் வெளிச்சம் இல்லாமல் இருந்து பிரயோஜனம் கிடையாது. அறையை முழுவதும் அடைத்து விட்டு குளிர்ந்த அறையாக ஏசி மிசின் போட்டுக்கொள்வது என்பது கூட முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம். அப்படி ஏசி வேண்டும் என்று சொன்னால், வடக்கிலும், கிழக்கிலும் ஒரு ஜன்னலை திறந்து வைத்து, ஏசி ஓட விட்டு விடுங்கள். அதற்கு ஆகும் மின்சார கட்டணத்தையும் பணத்தையும் அந்த வீடு வழங்கிவிடும். கட்டிடம் கட்டும் இன்ஜினியர்கள்,மேஸ்திரிகள்,ஆர்கிடெக்ட் மற்றும், கட்டட உரிமையாளர்கள் உள் அலங்காரங்களில் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஒளிக்கும், வெளிச்சத்துக்கும் கொடுப்பதில்லை. அப்படி கொடுக்காத போது அந்த வீட்டில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை வேகம் குறைந்து, நோயின் வேகம் அதிகரிக்கும்.

=======================

கொரோனா சார்ந்த எனது பதிவு

கொரோனா இந்துவா முஸ்லிமா ஆணா பெண்ணா குழந்தையா முதியவரா என்ன இனம் என்ன நாடு என்ன மொழி எதுவுமே பார்ப்பதில்லை… இது நாம் பயப்பட வேண்டிய நேரமல்ல… எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்… நிதானமாக யோசித்து நம்மை நாமே பாதுகாப்பாக சேனிடைஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது நலம்…

ஏனெனில் பதினான்கு நாட்கள் மட்டும் உயிர் வாழும் உயிர்கொல்லி கிருமி அதன் பிறகு அழிந்து விடும். நம் ஊரில் நாட்டில் இருந்து விரட்ட அரசாங்கம் சொல்லும் கொஞ்ச காலம் கடைபிடிப்போம்.

நாம் ஸ்டேஜ் 3 க்கே போக வேண்டாம். நாம் இந்தியர்கள். புத்திசாலிகள். என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று நாமும் உணர்ந்து நம் ஒவ்வொருவரும் தனிமையில் இருப்போம். இந்த ஒரு புத்திசாலித்தனமான முடிவு நம் சரித்திரத்தையே மாற்றக் கூடியது. உலகமே கொரோனாவால் சுருண்டு கிடந்த போது இந்தியர்கள் மட்டும் அதை வென்று நின்றார்கள் என்று நாளைய சரித்திரம் பேசட்டும்…

அன்புள்ளம் கொண்ட எனது வாஸ்து வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். நமது அரசாங்கம் கூறியுள்ள கால அவகாசம் வரை எனது வாஸ்து பயணங்கள் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருக்காது. ஆகவே அவசர வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் online மூலமாக இணையத்தில் உங்களோடு இணைந்து உங்கள் இடம் சார்ந்த விடியோ காணொலி காட்சி மூலமாக உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்கும் முடியும் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.

என்றும் வாஸ்து சார்ந்த சமுகப்பணியில்
ARUKKANI JAGANNATHAN
தமிழக முதன்மை வாஸ்து நிபுணர்
whatsapp 9965021122