வடமேற்கு தென்கிழக்கு நல்ல வாஸ்து விதி

வாஸ்து இரகசியம்:

பெண் என்பவர்கள் சண்டைக்கு எதிரானவர்கள். ஒரு நாட்டில் ஏற்படும் போரின் வேதனை வலி என்பது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். மகாபாரத கதையில் கூட வெற்றியின் பக்கம் பாஞ்சாலியும், தோல்வியின் பக்கம் காந்தாரியும் பிள்ளைகளைப் பறிகொடுத்து சம வேதனைகளில் இருந்த தாய்மார்கள். மனித சமூகம் வேட்டைச் சமூகமாக இருந்து அதை விவசாய சமூகமாக மாற்றிய பெருமை பெண்ணிற்கே சேரும். நாடோடிகளாக இடம் விட்டு இடம் பெயர்ந்து திரிய பெண் விரும்பவில்லை. இன்றும் விவசாயம் சார்ந்த நாற்று நடுவது முதல் அருவடை வரை பெண்களின் செயலே அதிகம்.

ஆக அப்படிப்பட்ட பெண்களை ஒவ்வொரு ஆண்களும் போற்ற வேண்டும். எந்த வீட்டில் பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அந்த வீடு சிறப்பு பெறும் என்பது எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த ஒரு மிகப்பெரிய அனுபவ ஆராய்ச்சி ஆகும்.ஒரு பெண் சிறப்பு பெற்றால்தான் அந்த குடும்பம் சிறப்பு பெறும். அந்த வகையில் ஒரு வீட்டில் வடமேற்கு தென்கிழக்கு நல்ல வாஸ்து விதிகளுக்கு பொருந்தி வரவேண்டும். வடமேற்கு தென்கிழக்கு பல்லங்கள் பெண்களின் வாழ்வியலில் நிலைகுலையச் செய்யும். #tondiarpet vastu  #thiruvottiyur vastu