வடகிழக்கு இழுத்த அமைப்பில் வீடு கட்டலாமா?

ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு சதுரம் செவ்வகம் என்கிற விதி மிக மிக முக்கியம். ஒரு வீடு என்பது வாஸ்து புருஷ மண்டல கற்பனை உருவமாக நம்முடைய முன்னோர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது . அதனை உடைக்கும் விதமாக ஜன்னல் என்பது ஆடம்பரமாக அழகாக சதுரம் செவ்வகம் அமைப்பிற்கு விடுபட்டு ,வெளியே இழுத்து ஒரு சதுரமாகவோ ஒரு வளைந்த அமைப்பாகவோ, வட்ட வடிவிலோ அமைப்பது என்பது மிகமிகத் தவறு. ஜன்னல் வேண்டுமானால் கெண்டிலிவர் அமைப்புப்படி இழுத்த அமைப்பில் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் கட்டிடத்தையும் இழுத்துவிடுவது அவர்களுடைய வாழ்நாளை குறைப்பதில் இழுத்து விடுவதற்கு சமம். அப்படிப்பட்ட வீடுகளில் வசிக்கும் யாரோ ஒருவருக்கு மனித உடலுக்கு அப்பாற்பட்டு திசுக்கள் விருத்தியாகும் நோயை கொடுத்து விடுகிறது என்பது திண்ணம்.