Pooja Room Vastu Tips

லட்சுமி தேவி ஆசிகளை பெரும் ரகசியம்

லட்சுமி தேவி ஆசி
லட்சுமி தேவி ஆசி

 

 

 

 

 

 

 

   அலைமகள் என்பதை விட லட்சுமி என்ற சொல்லை கேட்டவுடன் நம் மனதுக்குள் வருவது ஒரு பெண் சகல செல்வதுடன் அமர்ந்து இருப்பது அல்லது நிற்பது போன்ற உருவம்கள் தான்.மேலும் வசீகர முகத்தை உடைய பெண்ணை கண்டால் லட்சுமி போல இருக்கிறாள் என்றும் சொல்வதை நாம் கேட்டது உண்டு.ஆனால் உபாசகர்கள் பார்வையில் லட்சுமி தேவி என்பவள் மோகனத்திற்கும் வசியத்திற்கும் உண்டான சக்தி என்பார்கள்.

 

பல வியாபாரிகள் என்னிடம் பேசும் பொழுது கடந்த சில மாதம்களாக வியாபாரத்தில் தொய்வு பணப்புழக்கம் இல்லை என்பதால் ஒரு சோதிடரை ஆலோசித்தோம் அவர் அஷ்டமச்சனி தாக்கம் எதிரிகளின் தொல்லை பொறாமை பாதிப்பு போன்றது துவங்கிய காலம் என்பதால் சனிக்கு பரிகாரம் செய்து கொள்ளவும் என்ற சொன்னபடி செய்தும் பணப்புழக்கத்தில் முன்னேற்றும் இல்லை என்றார்.
இவரை போல பலர் பணப்புழக்கம் இல்லை மேன்மை பெறவில்லை என்று சில தாந்த்ரீக நபர்களின் ஆலோசனை படி வெள்ளிக்காசை பதித்த மண்ணில் துளசி அல்லது பணத்தாவரம் வளர்த்தால் மிகுந்த செல்வம் சேரும் என்று வளர்ப்பது செல்வம் பெருக யாகம் என்று கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மற்றும் சுதர்ஸன ஹோமம் செய்வது பணப்பெருக்கத்தை எதிர்பார்ப்பது.
சில நபர்கள் தொழில் கூடத்தில் பலிபூசைகள் செய்வது கல் உப்பை பணப்பெட்டியின் அருகில் வைப்பது பாதரச மணிகளை பணப்பெட்டியில் போட்டு வைப்பது சிலர் பலவிதமான மூலிகை வேர்களை கடையின் முகப்பில் கட்டி வைப்பது போன்றசெயல்கள் அவர்களுக்கு பாதிப்பை தந்து வளர்ச்சியை குறைக்கும் என்று அவர்கள் அறிவது இல்லை.
எனது ஆலோசனை எடுத்துக்கொண்ட ஒரு வியாபார நண்பர் தொழிலில் பணமுடக்கம் ஏற்பட்டபின் கடையில் அமரும் இடத்தை மாற்றினார்.சாமிபடம்களை மாற்றினார் பின்பு அவருடைய பணப்பெட்டியை மாற்றினார் அதன் அருகில் கல் உப்பை கிண்ணத்தில் வைத்தார் மேலும் தினமும் வாசலில் மஞ்சள் நீர் மற்றும் கோமியத்தை தெளித்தார் இப்படி பலதரப்பட்ட வழிகளில் தன் தொழில் ஏதாவது ஒரு நிலையில் மாற்றம் ஏற்படாதா?என்று அவர் செய்வதை கவனித்த நாம் அவரிடம் ஏன் இடத்தை மாற்றி அமர்ந்து உள்ளீர்கள் என்றதும் மேற்கு வாசலான இந்த கடைக்கு வடக்கு பார்த்து அமருவது லாபம் என்று ஒரு சோதிடர் சொன்னார் என்றார்.
பலர் வந்து போகும் தொழிலை செய்ய ஒரு கட்டிடத்தை தேர்வு செய்யும் பொழுது ஒன்று,மூன்று வாசல் படி கொண்ட கட்டிடமும் கிழக்கு
கடைகளுக்கு தெற்கு நோக்கி அமர்ந்து கொள்வதும் தெற்கு கடைகளுக்கு கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்வதும் மேற்கு கடைகளுக்கு வடக்கு நோக்கி அமர்ந்து கொள்வதும் வடக்கு கடைகளுக்கு கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்வது என்று சொல்வதற்கு காரணம் வலது கைகளை பயன்படுத்த என்று புரிந்து கொள்ள வேண்டும் .

 

தாங்கள் கடையின் அம்சத்தை மாற்றிக்கொண்டே இருப்பதற்கு காரணம் என்ன? என்று கேட்ட பொழுது பணம் முடங்கிவிட்டது பல லட்சங்களை பார்த்த என் கண்களும் கைகளும் இன்று வெற்றிடத்தை காண்கிறது.பிட்சை எடுக்கும் நிலைக்கு வந்து விடுவோமோ என்ற பயம் பலவிதமான சோதிடர்கள் ஆலோசனை மந்திரவாதிகள் ஆலோசனைகளை என்று மனம் கேட்க துவங்கிவிட்டது என்று வருத்தப்பட்டார்.
பிறஉயிர்களுக்கு அன்பை பகிராமல் வாழ்வது ஒரு விதம் அதைவிட பாப செயலான தன் உற்றார் உறவினருக்கு சுற்றத்தாருக்கு அன்பை பகிராமல் வாழ்ந்து மடிந்த இறுகிய மனம் கொண்ட உயிர்களை மறுபிறவியில் ஊராரிடம் அன்பை யாசகம் பெற்று வாழவேண்டும் என்றே அவர்கள் பிச்சைக்காரர்களாக பிறப்பு கொள்வார்கள் என்று சாஸ்திர நூல்கள் சொல்கிறது.அன்பை பொருளாக அல்லது உணவாக உடைகளாக தானமும் தர்மமும் செய்து எவர் பெருமாளின் கடமைகளை செய்வார்களோ அவர்களிடம் அலைமகள் ஆட்கொண்டு ஆசிகள் கொடுப்பாள் என்பதனை விளக்கவே பெருமாளின் இதயத்தில் லட்சுமி தேவி இருப்பதாக உருவம்கள் செய்யப்பட்டன.பிட்சை எடுக்க முற்பிறவி கருமம்கள் அனுமதிக்க வேண்டும்.
தாங்கள் குறைகள் என்பது பல லட்சங்களை சம்பாதித்த பொழுது அந்த பணத்தை மரியாதையாக அல்லது மதிப்புடன் நடத்தி சேமித்து வைத்தாலோ செலவு செய்தாலோ அவைகள் உங்களை விட்டு செல்லாது என்று புரிந்து கொள்ளவேண்டும் என்றேன்.
இவரை போல பலர் பணம் வரும்பொழுது அவைகளை மரியாதையுடன் நடத்துவதில்லை அவைகளை மதிப்பது இல்லை மேலும் பணத்தை சம்பாதித்து கொள்ளலாம் மனிதர்களை சம்பாதிக்கமுடியுமா என்று நட்புக்கும் சிலர் உறவுகளுக்கும் பணத்தை இழக்கிறார்கள்.
தர்மம் செய்யும் பொழுதும் தர்மபடி வாழும் பொழுதும் செல்வம் பெருகும் என்பது உண்மை அதை அளந்து தர்மம் செய்யுங்கள் என்று சொல்லப்படுகிறது.
வடக்கு மாநிலத்து வியாபாரிகள் பலர் எனக்கு தொழில் மூலம் பழக்கம்.அவர்கள் தெய்வவழிபாட்டில் இனிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பலவகையான இனிப்புகளை வழிபாட்டில் படைத்தது வழிபட்டு பகிர்ந்து பிரசாதமாக உண்பார்கள்.இதைப்பற்றி நாம் அவர்களிடம் கேட்ட பொழுது இனிப்பு செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியருக்கு மிகவும் பிடித்த உணவு இவைகளை படைத்தது தூபம் காண்பிக்க லட்சுமி தேவி அருள் கிடைக்கும் என்பதால் தீபாவளி நிறைவு பெற்று துவங்கும் அம்மாவாசை தினம் லட்சுமி பூசைகள் செய்து வியபார தொடர்புள்ள நபர்களுக்கு நாம் இனிப்புகளை தருவோம் என்றார்.

 
ஒவ்வொரு மனிதனுக்கும் தச ஜீவன கர்ம வருமானம் உண்டு என்றும் ஒழுக்கம் மதித்தல் தூய்மை தர்மம் நேர்மை போன்ற நிலைகள் நம் மனதில் துவங்கினால் தச ஜீவன வருமானத்தை நாம் அடையலாம் என்று ஆசான் அகத்தியர் கூறுவார்.ஆனால் நாம் அதைப்பற்றிய ஆராய்ச்சியோ விழிப்போ இல்லாமல் தான் ஏதோ ஒரு ஜீவனத்தில் துவங்கி உழன்று வாழ்வை துவங்குவோம்.

 
வடக்கு இந்தியர்களின் கலாச்சாரத்தில் நான் அவர்கள் ஜீவனத்தில் இந்த தூய்மை ஒழுக்கம் மதித்தல் தர்மம் போன்றதை காண்கிறேன்.வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அல்லது தங்கத்தை பெற்று பணம்கொடுப்பவர்கள் சில நெறிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதையும் தர்மத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதையும் நாம் காண்கிறோம்.நம் வழக்கத்தில் வீட்டில் தூய்மையற்ற நிலை மற்றும் சோம்பலை நாம் தவிர்க்கவில்லை வணிகத்தில் தர்மத்தை நாம் முறையாக கடைபிடிப்பது இல்லை.
செல்வம் வளத்திற்கு உண்டான முக்கியமான ரகசியம்களில் நம் இருப்பிடத்தை தூய்மையாக வைத்து கொள்ளுதல் மனதை உற்சாகமாக வைத்து கொள்ளுதல் சோம்பலை தவிர்த்தல் ஈன்ற பணத்தை மதிப்புடன் வைத்தும் மரியாதையாக நடத்துதல் நம்முடைய பணத்தை பெருக செய்யும்.
இந்த நெறிகளை பற்றி நாம் பிறருக்கு தெரிவிக்கும் பொழுது அவர்கள் பணத்தை மதிப்புடன் மரியாதையாக எப்படிஉபயோகிப்பது என்று கேட்பது உண்டு.சில நெறிமுறைகளை நாம் தொழிலும் வீட்டிலும் கடைபிடித்து நடைமுறை படுத்தினால் போதுமானது
அவைகள் ..
பணத்தில் எச்சில் தொட்டு எண்ணுவது அப்படியே பணப்பெட்டியில் வைப்பது அல்லது நாம் எண்ணி பிறரிடம் தருவது.
உடலில் உதிர்ந்த வேர்வை அவைகளில் படிவது அல்லது அப்படி பதிந்த பணத்தை மற்ற பணத்துடன் சேர்ப்பது.
மாமிசத்தை தொட்ட கைகளால் பணத்தை பெற்று அதை மற்ற பணத்துடன் சேர்ப்பது.
பணத்தில் எழுதுவது கிழிப்பது இடது கைகளால் கொடுப்பது.
ஏதேனும் பொருள் வாங்கும் பொழுது பணத்தை வீசி எரிவது.
பணத்தை மடித்தோ கசிக்கியோ வைப்பது போன்ற தூய்மையற்ற செயல்களில் பணத்தின் மேன்மைகள் வீட்டிலும் தொழில்கூடத்திலும் குறையும் என்பது நியதி.
இதுபோல பணத்தை செலவு செய்யும் பொழுது கணக்கை நெறிப்படுத்தி செலவு செய்வது.எவர் பணம் கேட்டாலும் உடனே தராமல் அவர்கள் வறியவர்களா வலியவர்களா என்பதனை கவனித்து தரவேண்டியது.
பணத்தின் முதல் சேமிப்பை பெண்களின் மூலம் துவங்குவது.
பணப்பெட்டி அல்லது நாம் பயன்படுத்தும் பண முடிப்புகளில் வெற்றிடமாக இல்லாமல் வைத்து கொள்வது
பணத்தை ஒருவரிடம் பெறும்பொழுது மனதில் வரவேண்டும் எண்ணியவாறு பெறுவது போன்றநிலைகள் மரியாதையான செயல்கள் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இங்கே ஒரு விவரத்தை கவனிக்க வேண்டும் நாம் தூய்மையும் மதிப்பும் கடைபிடிக்கலாம் கொடுப்பவர் எப்படி என்றும் பணத்தில் எச்சிலோ மாமிசபசைகளோ புகை துகள்களோ கழிவுகளோ இருப்பது நமக்கு தெரியாது.இதற்க்கு நாம் மாவிலை மல்லிகை துளசி செண்பக பூ போன்ற மலர்களை பணப்பெட்டியில் அடிக்கடி சேர்க்க பலவிதமான தோஸம்கள் விலகும்.
ஒரு சில சோதிட நூலில் வெள்ளியுடன் கூடிய அஷ்டமியை குபேர காலம் என்றும் பெருமாளையும் லட்சுமியையும் அர்ச்சித்து தரிசிக்க தரித்திரம் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.பொதுவாக செல்வத்திற்கு லட்சுமி தேவியை குறிப்பிடுவது வழக்கம் குபேரனை சேர்ப்பது பற்றிய கருத்தை நாம் தேடிய பொழுது வயிறு பெருத்த உருவம் உள்ளவர்கள் செல்வத்தை அருளும் சக்தி உள்ளவர்கள் என்று சிவநாடிகளை படிக்கும் பொழுது அறிந்து கொள்ள முடிந்தது.சீனர்கள் பெரிய வயிறு உடைய சிரிக்கும் சாதுவை மற்றும் நீரில் இருக்கும் பெரிய வயிறு மீன் மற்றும் பெரிய வயிறு உடைய தவளை போன்ற உருவத்தை தாங்கள் இருப்பிடத்தில் வைத்து கொண்டால் அல்லது வளர்த்தால் செல்வம் பெருகும் என்று வைத்து கொள்வார்கள்.
வடக்கு இந்தியர்கள் பெரிய வயிறு உடைய விநாயகரை வழிபட்டு குபேர தன்மையும் லட்சுமி ஆசிகளை பெறுவதும் வைணவர்கள் குபேர அம்சமாக இருக்கும் அழகிய சிங்கபெருமாளை வழிபட்டு செல்வ வளத்தை பெருக்கிக்கொள்வதையும் நாம் காண்கிறோம்.ஆசானின் அருளால் லட்சுமி தேவி ஆசிகளை பெரும் ரகசியம்களை கடந்த சில நாட்களாக உங்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.எல்லாம் வல்ல ஈசன் அருளை அனைவரும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

 

error: Content is protected !!