ராசிக்கு எந்த திசையில் வாசல்

ராசிக்கு எந்த திசையில் வாசல்

vastu awareness article.

இனிய உறவாக இருக்க கூடிய நெஞ்சார்ந்த நண்பர்களுக்கு வணக்கங்கள்.

இன்றைய வாஸ்து இன்றைய வாஸ்து விழிப்புணர்வு கருத்துக்கள் விளைவாக ஒரு சில முக்கிய விளக்கத்தினை கட்டுரை வழியாக காண்போம். இன்றைய மக்கள் புதிய வீடு கட்டும் பொழுது தலைவாசல் எங்கு வைப்பது என்ற கேள்வி நிறைய மக்களிடையே உண்டு.என்னைப் போன்ற #வாஸ்து_நிபுணர் அல்லது #ஜோதிட_நிபுணர்களிடம் இக்கேள்வியை நிறைய மக்கள் கேட்கிறார்கள். ஏன் என்னிடம் பல நேரங்களில் வாஸ்து விஷயமாக ஒரு இடத்தில் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் பொழுது இந்த ஒரு கேள்விக்காக அதிக #தொலைபேசி #அழைப்புக்கள் எனது #செல்லிடப்பேசி க்கு வரும்.

அதாவது எனது ராசிக்கு எந்த திசையில் #வாசல் வைப்பது, நான் #ரிஷப_ராசி எனது மனைவி எனது #மனைவி #சிம்மராசி என்னுடைய மகள்கள் இருவர். ஒருவர் #கன்னி_ராசி மற்றொருவர் #மீனம் ஆக இதற்கு நான் என்ன செய்வது? யாருடைய ராசிக்கு முதன்மைப்படுத்தி வாசலை வைப்பது? இப்படி பல கேள்விகள் பலருக்கும் இருக்கும். அதனை தீர்த்து வைப்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

ராசிக்கு எந்த திசையில் வாசல்
ராசிக்கு எந்த திசையில் வாசல்

 

 

 

 

 

 

      உங்கள்_வீடு எந்த திசையை பார்த்து இருக்கிறதோ அந்த திசைக்கு முதலில் முதன்மைப்படுத்தி வாசல் வையுங்கள். அந்த வகையில் உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய நபர்களின் ராசி ஒத்து வந்தால் வைத்து கொள்ளுங்கள். சரி ஒத்துவரவில்லை அடுத்து என்ன செய்வது? இந்த இடத்தில் #மேற்கு மற்றும் #தெற்கு_வாசல் வீடாக இருந்தால் அதற்கு கிழக்கு மற்றும் வடக்கு கட்டாயம் இரண்டாவது வாசல் என்பது வேண்டும் இது ஒரு வகை.

இந்த எனது வீடு கிழக்கு அல்லது வடக்கு பார்த்து இருக்கின்றதே என்று சொன்னால் உங்கள் ராசிக்கு எடுத்து வந்த திசையில் வாசல் வைத்து இல்லத்தை அமைத்துக் கொள்ளலாம்.சரி நண்பர்களே ராசிகளுக்கு எப்படி #தலைவாசல் வைக்க வேண்டும் என்கிற விஷயத்தை சொல்லி விட்டேன்.இனி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்த திசையில் இருக்கும் வாசல் ஒத்துவரும் வரும் என்பது பற்றிய ஒரு விளக்கத்தையும் உங்களுக்கு கொடுக்கின்றேன். இதனை விட மிக மிக முக்கியமாக ஒரு விஷயம் இருக்கிறது அதனை இக்கட்டுரையின் முடிவில் தெரிவிக்கின்றேன்.

#மேசம்,#சிம்மம்,#தனசு ராசிக்காரர்களுக்கு கிழக்கு வாசலை முதன்மைப்படுத்தி வைக்கலாம். ரிஷபம் #கன்னி மற்றும் மகரம் இம்மூன்று ராசிக்காரர்களுக்கு தெற்கு பார்த்த வாயில் சிறப்பைத் தரும். அதே போல மேற்கு வாசல் வேண்டும் என்பவர்கள் #மிதுனம் மற்றும் #கும்பம் #துலாம் ராசிகள் ஒத்துவரும். அடுத்ததாக கடகம் விருச்சிகம் மற்றும் மீன ராசி மக்களுக்கு வடக்கு பார்த்த வாசல் வாழ்வை மேல்நோக்கி நகர்த்தும்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு வாஸ்து நிபுணரை துணையாக வைத்துக் கொண்டு உங்களுடைய #செல்போன் மூலமாக திசைகளை பார்க்காமல் அவருடைய #திசைகாட்டி கருவி கொண்டு ஒருவரின் திக்கற்ற வாழ்க்கையை திசையுள்ள வாழ்க்கையாக நிர்ணயம் செய்து, (ஏனெனில் செல்போனில் திசை பத்து டிகிரி தவறாக காட்டும்) அல்லது சாலை எங்கு இருக்கிறது? அந்த சாலையின் #ஓட்டம் எப்படி இருக்கிறது? அந்த:ஓட்டத்தின் வழியாக இருக்கக்கூடிய சாலையின் தெரு பார்வைகள் மனைகளுக்கு தவறை வழங்குகிறதா? நன்மையை வழங்குகிறதா? என்பதனை தெரிந்து கொண்டு மனையை ஒரு 7 டிகிரிகள் திருப்பி வைத்து வீட்டை அமைத்து, அதே திசைகளுக்கு பொருந்துமாறு எந்த திசை வடகிழக்கு நோக்கி இருக்கிறதோ அத்திசையில் ஒரு வாயில் வைப்பது மிக அற்புதமான வாழ்க்கையை கொடுக்கும். இதனால் உறவு சார்ந்த பணம் சார்ந்த நிகழ்வுகளில் பெரு வெற்றி கொடுக்கும் விதமாக அந்த மனையில் இருக்கும் இல்லம் விளங்கும். மறந்து விடாதீர்கள் நண்பர்களே இந்த இடத்தில் ராசிக்கு வாயில் என்பதனை விட நல்ல திசையை பார்த்து இருக்கக்கூடிய வகையில் வாயில் வைப்பது தான் சாலச்சிறந்தது.ராசிக்கு வாயில் என்கிற விஷயத்தை இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆக வீட்டில் நான்கு ஐந்து நபர்கள் இருப்போம். இந்த நான்கைந்து பேர்களில் எந்த ராசியில் யாருக்கு வைத்தால் சிறப்பு என்ற தேவையில்லாத குழப்ப நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். ராசிக்கு வாயில் என்பது எனது அனுபவ அறிவின் படி இரண்டாம் பட்சம் தான்.மீண்டும் மற்றொரு தகவலோடு சந்திப்போம்.நன்றி வணக்கம்.

மீண்டும்
அற்புதமான தகவலோடு சந்திப்போம்.நன்றி கலந்த வணக்கத்துடன்,

என்றும் பிரபஞ்ச
சக்திகளின் துணையாக,
#chennai_vasthu jagannathan.
(best #Vastu_Consultant_in_tamilnadu)
#தொலைபேசி_9965021122

வாஸ்து மற்றும், ஜோதிடம் சார்ந்த ஆன்மீக தகவல்களுக்கு தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்து நிபுணர் தரும் அற்புத தகவல்கள்.

https://www.youtube.com/channel/UC3KjEZnqsYjATSGpzhvScrg

www.chennaivasthu.com

error: Content is protected !!