யுகாதி பண்டிகை வாழ்த்து

#பங்குனி_31
#Apri_13
மங்கள வாரம்

யுகாதி பண்டிகை வாழ்த்துக்கள்.எனக்கு வாஸ்து ரீதியாக பழக்கமான அனைத்து
தெலுங்கு, கன்னட சொந்தங்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள்.

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு யுகாதி ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஜோதிட ரீதியாக குரு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளின் அதிபதியாகவும் செவ்வாய் தெலுங்கு தமிழ் மராட்டியம் ஆகிய மொழிகளின் அதிபதியாகவும் நமது ஜோதிடம் கூறுகிறது.

தெலுங்கு பேசுபவர்கள் மற்றும் ஆந்திர மக்கள் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்து இருப்பார்கள். ஒல்லியான தேகம், முரட்டுதனம் கடின உழைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படுவது, அதிக காரம் மிகுந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவது செவ்வாயின் காரக குணங்களாகும்.

அதேநேரம் கன்னட மொழி பேசுகிற மக்கள் சாத்வீகமானவர்களாகவும் இனிப்பு மற்றும் நெய் சேர்த்த காரம் குறைந்த உணவு உண்பவர்களாகவும் பருத்த தேகமுடையவர்களாகவும் இருக்கின்றனர்.

தெலுங்கு வருடப்பிறப்பு எந்த தினத்தில் வருகிறதோ அந்த தினத்தின் கிரகம் அந்த வருடத்தின் ராஜாவாக அமைவார். இந்த வருடம் யுகாதி   மங்கள வாரம் பிறந்துவிடுவதால் அந்த வகையில் தமிழ் வருட பிலவ வருடத்தின் ராஜாவாக செவ்வாய் பகவான் அமைந்துள்ளார்.இதுதான் தமிழ் தெலுங்கு ஒற்றுமை.

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.

தெலுங்கு மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.

உகாதி பச்சடி

உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா என அழைப்பர்.

உகாதி பண்டிகையான இன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் அருந்த நல்ல பலனை வருடம் முழுவதும் எதிர் பார்க்கலாம்.

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச |

சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||.

மேலும் விபரங்களுக்கு,

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995