மேல்நிலை தண்ணீர் தொட்டி/ Vastu for Overhead Tank

நண்பர்களுக்கு வணக்கம். மேல்நிலை தண்ணீர் தொட்டி அதன் அளவு என்பது முக்கியம். மனம் போன போக்கில் அதன் அமைப்பை ஏற்படுத்துவது தவறு. மிக பிரம்மாண்டமான அமைப்பில் தண்ணீர் தொட்டி இருப்பதும் தவறு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல வேலை செய்ய ஆரம்பித்துவிடும். மேல்நிலைத் தொட்டியில் அளவு என்பது ஒரு வீட்டில் ஐந்து நபர்கள், ஆறு நபர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், ஒரு நபருக்கு 500 லிட்டராக தண்ணீர் அளவு இருக்க வேண்டும். அதற்கு மேலாக தண்ணீர் இருக்கும் அமைப்பில் தொட்டி அமைப்பது தவறு.அப்படி இருந்தால் வீட்டில் வசிக்கும் மனிதர்களின் உடலில் நீர் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்தும். ஆகவே அதன் உயரமும், அகலமும், நீளமும், மனையடி கணக்கு அளவுகளில் வரவேண்டும்.