டயகனல்( Diagonal) மார்க்கிங்

மூலைமட்டம் பார்ப்பது எப்படி?

மூலைமட்டம் பார்ப்பது எப்படி?

திசைகள் சந்திக்கும் இடமே மூலை ஆகும். அந்த வகையில் எதிரெதிர் திசைகள் அளக்கும் போது ஒரே அளவாக இருந்தால் மட்டுமே மூலை மட்டம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.அதனை எப்படி சரிபார்த்து வீடு கட்ட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.

 

முதலில் மூலைமட்டம் பார்க்க ஒரு மனையின் நான்கு திசைகளின் அளவுகள் ஒரே அமைப்பாக வரவேண்டும். அதற்கு பிறகு கோணம் என்று சொல்லக்கூடிய மூலைகள் 90° செங்கோணத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லாது 100 °விரிந்த அமைப்பு அல்லது 85° உள்குறுகிய அமைப்பாக இருந்தால் மூலை மட்டத்தை வாஸ்து விதிகளுக்கு உட்பட்ட சதுர செவ்வக அமைப்பிற்கு கொண்டு வரமுடியாது.மனைக்கு தென்மேற்கு மூலையில் தெற்க்கில் இருந்து வடக்கில் ஒரு நீளமான நூலினை நமது மனையின் எல்லைவரை கட்டிக்கொள்ள வேண்டும். அந்த நூலில் தென்மேற்கு மூலையில் இருந்து 4 மீட்டர் அளந்து மார்க் செய்ய வேண்டும். அடுத்து மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி 3 மீட்டர்கள் அளவு எடுத்து மார்க் செய்ய வேண்டும். இந்த இரண்டு அளவுகளையும் குறுக்கே அளக்கும் போது 5 மீட்டர்கள் அளவகாக வரவேண்டும்.

 

 

அப்படி வரவில்லை எனில் எந்த பக்கம் நமது திசைகாட்டிக்கு பொருந்தும் அமைப்பாக இருக்கிறதோ அநாத பகுதியில் மட்டும் நூலினை நகர்த்தி சரி செய்து கொள்ள வேண்டும்.அந்த அளவு 5மீ உள்ளே அல்லது வெளியே சென்றாலும் சரியாக இருக்கும் அமைப்பிற்கு மாற்றம் செய்தால் மட்டுமே சரியானது ஆகும்.அதன் பின்னர் வடக்கு பார்த்த வீடாக இருந்தால் தென்கிழக்கு பகுதியில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் மேற்கூரிய தென் மேற்கு பகுதியில் என்ன வேலைகளை செய்தீர்களோ அதனை இங்கு செய்து அதேபோல் 5 மீ அளவு இருப்பதாக அமைத்து கொள்ள வேண்டும். இப்போது இதன் வடக்கு பகுதி அதாகவே மூலை மட்டத்தில் வந்து விடும்.

 

இதுவே கிழக்கு பார்த்த வீடாக இருந்தால் வடமேற்கு வியு மூலையில் இந்த வேலைகளை செய்ய வேண்டும்.இப்போது இதன் எதிர் எதிர் பகுதிகளை அளக்கும் போது ஒரே அளவாக வரவேண்டும். அப்படி வரவில்லை எனில் மீண்டும் மூலை மட்டத்தை சரிபார்த்து மீண்டும் அளந்து சரிசெய்து கொள்ள வேண்டும்.இதனை கடைக்கால் நிலையில் இருந்து வீடு பூச்சு வேலை முடியும் நிலைவரை சரிபார்த்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் பூச்சு வேலையில் கவனமாக இருந்து இணை திசை பகுதிகளில் ஓடினை ஒட்டி நூல் கட்டி பூசுவது சிறப்பு.

 

சில இடங்களில் தென் மேற்கு பகுதியில் மூலைமட்டம் வராத பட்சத்தில் அதிக இடங்களை கழித்து விட்டு விடுவார்கள்.அது வாஸ்து அமைப்பில் மிகப்பெரிய குற்றமாகும்.அப்போது வடகிழக்கு பகுதியில் அதக இடங்களை கழித்து விடும் அமைப்பில் மூலைமட்டத்தை குறிக்க வேண்டும்.ஒரு இல்லத்தில் மூலைமட்டம் என்பது மிகவும் பெரிய வேலை ஆகும். இதில் தவறு நடந்தால் வாஸ்து அமைப்பில் மிகப்பெரிய குற்றமாகி விடும்.இதில் கவனக்குறைவாக செயல்பட வேண்டாம்.சில இடங்களில் வடகிழக்கு பகுதியில் கொஞ்சம் இழுத்த அமைப்பாக இருக்க வேண்டும் என்று ஒருசிலர் அமைத்து விடுவார்கள். இதனாலும் மூலைமட்டம் கிடைக்காது போய்விடும். இதுவும் மிகவும் தவறு.இந்த மூலைமட்டம் என்கிற வாஸ்து விதி வீட்டில் உள்ள சுற்றுச்சுவர்கள் மற்றும் மாடியில் உள்ள அறைகளுக்கும் பொறுந்தும் படி அமைக்க வேண்டும்.

நிருதி மூலை 90 டிகிரி,

வாஸ்து சாஸ்திரம்  பார்ப்பது  சரியா,

CIVIL  BASIC   IDEAS

மீண்டும் வேறு வாஸ்து சார்ந்த பதிவின் வழியாக சந்திப்போம்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
#chennaivasthu,#chennaivastu

error: Content is protected !!