
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.முயற்சி என்னும் தாரக மந்திரத்தை நாள்தோறும் உபயோகிப்பவர்களுக்கு வாழ்கையில் எந்த கஷ்டங்களும் இல்லை மனிதன் என்பதே முயற்சியின் மொத்த உருவம் மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை
நீங்கள் பலமுறை முயற்சி செய்தால் ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். அதாவது அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
சாதாரண எறும்புகளே கல்லையே தேய்க்கும்போது மனிதர்கள் முயன்றால் மலையையே சாய்க்கலாம்.
எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பது பழமொழி.
பறவைகள், விலங்கினங்கள், பூச்சியினங்கள் போன்ற பலவும் மனிதனுக்கு வாழ்வியல் கற்றுத்தருகிறது. சில ஞானம் போதிக்கிறது. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்- என்ற பாடல் வரிகளைப் போல் மனிதனின் எத்தனையோ படைப்புகளின் பின்னால் பறவை, விலங்கினம், பூச்சியினம் போன்றவை வழிகாட்டியாக அமைந்ததுண்டு. சமூக கட்டமைப்பை, எடுத்துக்கூறும் எறும்புகளின் வாழ்வியல். அதேபோல் தேனீக்களின் உழைப்பை நாம் பார்த்து அதுபோல இடம் விட்டு பறந்தால் நமக்கு தேவையானது கிடைத்து விடும். இப்படி எத்தனையோ பூச்சியினங்கள் கூட, நமக்கு வழிகாட்டும் தகுதி பெற்றவையே.
பயணமே பறவைகளின் அடையாளம். பறவைகளில் பல மேப் இல்லாமல் வான்வெளியில் பல்லாயிரம் மைல்கள் கடந்து இலக்கை நோக்கி வந்து செல்கின்றன. வாழ்நாள் முழுதும் ஆண்டுதோறும் இத்தகைய நீண்ட பயணங்கள் நடைபெறுகிறது. பறவையின் பயணம் தலைமுறை தலைமுறையாக தொடருகிறது.நாமும் இடைவிடாது பயணப்படும் போது வெற்றி நமது கைகளில் தவழும்.
முயற்சி என்ற விதைகளை விதைத்துக்கொண்டே இரு. நிச்சயம் ஒரு நாள் ஏதாவது ஒரு விதையிலிருந்து வெற்றி எனும் கனி கிடைக்கும். முயற்சிகள் தோல்வியடைவது குறித்து மனம் கலங்காதே. முயற்சிக்காமல் சும்மா இருப்பதைவிட, முயற்சிசெய்வதே மேலானது.”வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவளாமல் வெற்றியை அடையும்வரை முயன்று வெற்றி வாகை சூடுவோம்…
வாழ்க்கை என்னும் சொல்லின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் இணைந்தால் வாகை என்று நமக்கு நம்பிக்கை தருகிறதே !
வெற்றி வாகை சூட முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெறுவோம்…வாருங்கள் நண்பர்களே பெட்டியை எடுங்க பயணப்படலாம்.
மேலும் விபரங்களுக்கு,
மீண்டும் ஒரு அற்புதமான தகவலுடன் சந்திப்போம்.
பிரபஞ்ச சக்திகளுக்கும் இறைசக்திகளுக்கும் இதனைப் படிக்கும் உங்களுக்கும் எனது
அன்புகலந்த நன்றிகளுடன்,
#அருக்காணி_ஜெகன்னாதன்
வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
whatsapp 9965021122
www.chennaivasthu.com