மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 | Mithuna rasi guru peyarchi palangal 21 -22

chennai astro

2021-2022 குருபெயர்ச்சிபலன்கள் வரிசையில், மிதுனராசி சார்ந்த மக்களுக்கு எந்த மாதிரி பலன்களை குருபகவான் கொடுப்பார் என்பதை தெரிந்து கொள்வோம். அஷ்டமத்துச் சனியின் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருந்த மிதுன ராசி மக்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அதி அற்புதமான பலன்களைத் தரும் நிகழ்வு நடக்கும். இதுவரை 8-ஆம் இடத்தில் இருந்த குரு சொல்லமுடியாத  கஷ்டங்களை கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டம் என்பது மாறி, உங்களுடைய ராசிக்கு பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் இடத்திற்கு செல்லும் பொழுது அதி அற்புதமான பலன்களை வழங்குவார். தர்மசிந்தனை, கோயில் வழிபாடு, கோயில் சார்ந்த தலைமைப்பதவி, இப்படி பல பொது சேவை சார்ந்த சங்கங்கள் சார்ந்த, மதிப்பு மரியாதை உங்களுக்கு கூடும். இதுவரை வெளிநாடு போகாமல் இருந்து, போகவேண்டும் என்ற எண்ணம் ஆசை நிறைவேறக்கூடிய காலகட்டமாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு இருக்கும்.

இதுவரை நண்பர்கள், உறவினர்கள், வேலை செய்யும் இடங்களில், குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் , எதிரிடை பலன்களாக இருந்தது இனிமேல் விலகி, நல்ல பலன்களை இந்த காலகட்டம் உங்களுக்குக் கொடுக்கும். ஆகவே ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள், என்கிற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, கண்டிப்பாக உங்களுக்கு பொருந்தும். இதுவரை பிரிந்திருந்த தம்பதிகள், கணவன் மனைவி உறவுகளில் நல்ல நிலைகளில் இல்லாதவர்கள் இப்பொழுது இணையக் கூடிய , சந்தோசமாக வாழக்கூடிய  நிகழ்வுகள் கண்டிப்பாக உங்களுக்கு நடக்கும். அதேபோல கல்வி சார்ந்த துறைகளில் வெற்றியை தர கூடிய காலகட்டமாக இருக்கும். மேல்நிலை கல்வி படிக்கின்ற மக்கள், வெளிநாடு கல்வி படிக்கின்ற மக்கள், அந்த வாய்ப்பை தொடங்குகின்ற காலமாக வருகின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும். ஆக மொத்தத்தில் மக்களுக்கு  அற்புதமான வாழ்க்கை வாழ வைக்கும் குருபெயர்ச்சியாக மிதுனம் சார்ந்த ராசிக்கு இருக்கும். நன்றி வணக்கம்.

எனது வீடியோவை பார்க்க: https://youtu.be/gbub1Q9zV-0