மிகப் பெரிய கஷ்டங்கள் தீர்வு

மிகப் பெரிய கஷ்டங்கள் வாழ்நாளில் ஒரு மனிதனுக்கு வருகிறது. அந்த கஷ்டத்திற்கு தீர்வு எதனை செய்தாலும் அக்கஷ்டம் விலகவில்லை எனில் ஒரு சூட்சுமமான வழிபாடு இருக்கிறது. ஒருவரை பெற்றதாய் அந்த மனிதர் கர்ப்பத்தில் இருக்கும்போது எந்த தெய்வத்தை அந்த தாய் வணங்கினார்களோ, அந்த தெய்வம் ஒருவருடைய உடலில் அவருக்கு தெரியாமல் அவரை இயக்கிக் கொண்டிருக்கும். ஆக அந்த தெய்வம் எது என்று தெரிந்து கொண்டு, உங்கள் கஷ்ட காலத்தில் வணங்கும் பொழுது உங்களுடைய கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும். அது அவர்களுடைய குலதெய்வமாக இருக்கலாம் அல்லது, இஷ்ட தெய்வமாக இருக்கலாம்.

வாஸ்து ரகசியம்:

ஒரு இல்லம் தனிப்பட்ட முறையில் இருக்கிறது .அல்லது ஊருக்கு உள்ளாக இருக்கிறது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் அந்த இல்லத்திற்கு தென்மேற்கு பகுதியிலும் , வடகிழக்குப் பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு உள்ளாக அதாவது கண்களுக்கு தெரியும் படியாக ஒரு சுடுகாடு, இடுகாடு இருக்கும் பொழுது நிச்சயமாக வாஸ்து குற்றமாக இருக்கும். ஆக அப்படி இருக்கின்ற போது அதனை தெரியாத அமைப்பில் பாதைகளையும் இல்லங்களையும் மாற்றும் பொழுது நிச்சயமாக நன்மைகள் கிடைக்கும்.அதுவே வடமேற்கு தென்கிழக்கு இருந்தால் பெரிய தவறாக இருக்காது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.