மார்கழி விழா நாள் 21

மார்கழி 21

January_5

மார்கழி_திருவிழா நாள்: 21

ஆண்டாள்_நாட்சியார் பாசுரம்21

ஏற்ற_கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக

திருப்பள்ளி எழுச்சி பாடல் – 1(21)

மாணிக்கவாசகர் அருளிய #திருவெம்பாவையின் 21 பாடல்கள் முடிவடைந்துவிட்டது. தன்னை ஆட்கொண்ட, திரு #பெருந்துறையில் உறையும் இறைவனுக்காக, மாணிக்கவாசகர் பாடியருளிய 10 #திருப்பள்ளியெழுச்சி பாடல்களை மார்கழியின் இறுதி 10 நாட்களுக்கு பாட வேண்டும். எல்லாம் வல்ல அவனை வணங்கி, இன்று தொடங்கலாம்.

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு

ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பாடல் விளக்கம்:

உயிர்களுக்கு முதல்வன் நீ, எங்கள் வாழ்வுக்கும் முதல்வன் நீ. உன்னை மலர்களால் அர்ச்சித்து, உன் திருமுகத்தில் காண்கின்ற அந்த அழகிய புன் முறுவலைப் பார்த்து மகிழ்ந்து வணங்குகிறோம். சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் அவற்றுக்கு பொருத்தமான மலர்களைத் தூவி வழிபடும்போது, உன்னுடைய திருமுகத்தில் எமக்கு அருள் புரியவென மலர்கின்ற அழகிய புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து, உன்னடிகளைத் தொழுகின்றோம். எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

astrology numerology astro_vastu
#chennai_vasthu #erode_vastu

tamilnadu_vastu #coimbatore_vastu

Tiruppur_vastu

#Karur_vastu
Namakkal_vastu
salem_vastu
#tamil_daily_calender vasthu,vastu_tips

வாஸ்து ஜோதிடம் எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்

வாஸ்து_காலண்டர்

vastu_calendar

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

2009 முதல் மயன் வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள் வாஸ்துவோடு பயணம்

Andal_Vastu 2015 first batch training expert

ஆண்டாள்வாஸ்துவின் 2015 முதல் #வாஸ்துவகுப்பில்பயிற்சி எடுத்த #வாஸ்துநிபுணர்)

2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்