நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இருக்காதீர்கள். நாட்டின் நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.
ஒரு கட்டத்தில் அனைத்து மனிதர்களும் ஏழைகளே.ஆகவே ஏழையாக இருக்கும் காலத்தில் உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் என்பது ஒரு சக்தியல்ல. அது கடந்து போவதற்கு ஒரு பாதை தெய்வபக்தியே உண்மையான சக்தி.
இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக இந்த பூமிக்கு விட்டு செல்ல வேண்டும் என்கிற லட்சியத்துடன் வாழுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன்.செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அதே சமயம், செல்வம் இருக்காத காலம் என்று ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இருந்நு இருக்கும். அதாவது வறுமை வரும் காலத்தில் பணியாத துணிவு வேண்டும்.
கடின உழைப்பு இல்லாமல், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் கடின உழைப்பு வேண்டும். பனி என்றும், மழை என்றும், காற்று என்றும், வெயில் என்றும் மனிதனைத் தவிர எந்த உயிரினமும் பார்ப்பது கிடையாது.அதுபோல நாமும் வாழும் போது நமது வெற்றி பயணம் என்பது எளிதானது.