காலிமனையை வாங்க

காலிமனையை வாங்கும் போது வாஸ்து

 

காலிமனையை வாங்க
காலிமனையை வாங்க

 

 

 

 

 

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆக மனைவி அமைவது மட்டுமல்ல, மனைவியுடன் சேர்ந்து வாழ்கின்ற வீட்டை நல்ல அமைப்பாக அமைப்பதூ கூட இறைவன் கொடுத்த வரம்தான் என்பேன்.அந்தவகையில் திருமண நிகழ்வுக்காக வரன் தேடும்போது எப்படி பத்து பொருத்தங்களில் அதிகபட்சம் ஐந்திற்கு மேற்கொண்டு இருக்கும் போது திருமணம் செய்ய முடிவு செய்கின்றோமோ அதுபோல, காலிமனை வாங்கும் போது கவனமாக வாஸ்து விதிகளை பின்பற்றி வாங்கினால் நல்ல அற்புதமான பலன்களை பெறமுடியும்.

 

 

காலிமனையை வாங்கும் போது,வாங்க கூடிய இடம் என்பது தெற்கே உயர்ந்து வடக்கே தாழ்ந்து இருக்கவேண்டும். இதைப் போலவே மேற்கு உயர்ந்து, கிழக்கு தாழ்வான அமைப்பில் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் நைருதி உயர்ந்து ஈசான்யம் என்று சொல்ல கூடிய வடகிழக்கு தாழ்ந்த அமைப்பாக இருப்பது தனிச்சிறப்பு கொண்ட மனையாக அமையும்.
மாறாக, கிழக்கு உயர்ந்து மேற்கு சரிவாக இருந்தால், குடும்பத்தில் உள்ள முதல் ஆண் மக்களின் வாழ்வில் பலவீனப்படுத்துவதுடன் பொருளாதாரச் சீரழிவைத் தரும்.உடல் சார்ந்த நோய்களை ஏற்படுத்தி மருத்துவ செலவுகளை கொடுக்கும்.

 

மனைகளை அமைக்கும் போது,8×8 என்றோ அல்லது 9×9 என்றோ பெருக்கும் போது, அதன் விடை என்பது முறையே, 64 ,மற்றும்81 என்று வரும் . இதுவே நமது சாஸ்திரம் சதுர மனை என்று சொல்கிறது. ஆகவே சதுர அமைப்பில் இருக்கும் மனை முதல் தரமானது. செவ்வக வடிவ மனையில் வீடு கட்டினாலும் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இதனை இரண்டாவது கணக்காக வைத்துக்கொள்ள வேண்டும்.இடங்கள் எப்படி இருந்தாலும்,வீடு கட்டுவதற்கு முன்பாக கட்டிடம் கட்டும் பகுதியை முடிந்த வரை செவ்வகமாக அல்லது சதுரமாக மாற்றிக் கொள்வது நல்ல பலனைத் தரும். மீதமுள்ள இடத்தை கழித்து நமது சுற்றுசுவரில் இணைக்காமல் காலியிடமாக விடுதல் நலம்.

 

நமது இடத்துக்கான சாலைகள் அமைப்பு

மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் சாலைகள் இருக்கும் மனை,வடகிழக்கு ஈசான்ய மனை என்கிறோம்.. இது அனைத்துச் சிறப்புகளும் கொண்ட மனையாக சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. சிவபெருமானின் முக்கிய மூர்த்தங்களில் ஒன்றான ஈசான மூர்த்தியின் அருளை தரக்கூடிய, குபேர சம்பத்துடன் கூடிய, இந்திர போகத்தை அருளக்கூடிய பாக்கியத்தை தரும் மனைகளாகும்.
அதேபோல கிழக்கிலும், தெற்கிலும் சாலை அமைப்பும் நல்லதே.இங்கே குடியிருப்பதை விட வர்த்தக விற்பனை கூடங்கள் அமைப்பது நல்லது.இந்த விதி வடக்கு மற்றும் மேற்கு சாலைகள் இருக்கும் இடத்திற்கும் பொருந்தும். இதுபோ மற்ற இடங்களில் சாலைகள் வரும் போது ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது.

 

கட்டிடம் கட்டும் போது கவனிக்க வேண்டிய ஆயாதி மனை கர்ப்பம்

வீட்டின் நீளத்தையும் அகலத்தையும் 12 அங்குலத்தில் பெருக்கி வரும் தொகையை 34 அங்குலத்தில் வகுக்க வேண்டும். அங்கு தொகையை எட்டால் வகுத்து வரும் மீதியை கொண்டு வீட்டின் வாஸ்து பலன் அறியலாம். மீதி பூஜ்யம் வந்தால் காக்கை கர்ப்பம். அதன் வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.

மீதி ஒன்று வந்தால் அது த்வஜ கர்ப்பம். வீட்டில் செல்வம் செழித்தோங்கும். மீதி இரண்டு வந்தால் அதற்கு பெயர் தூம கர்ப்பம், வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மீதி மூன்று வந்தால் சிம்ம கர்ப்பம். நோய்கள் அண்டாது ,செல்வம் விரைவாக சேரும். நான்கு வந்தால் நாய் கர்ப்பம். குடும்பத்தில் அனைவரும் வியாதியால் பாதிக்கபடுவார்கள்.

ஐந்து வந்தால் அதற்கு பெயர் பசு மனை என்று சொல்லக்கூடிய ரிசப கர்ப்பம். வாழ்க்கையில் முன்னேற கடுமையாக போராட வேண்டி இருக்கும். ஆறு வந்தால் அதற்கு பெயர் கழுதை கர்ப்பம். வீட்டில் ஏதாவது கவலை வந்து கொண்டே இருக்கும். பணம் சம்பாதிக்க படாத பாடு பட வேண்டி இருக்கும். மீதி ஏழு வந்தால் அதற்கு பெயர் யானை கர்ப்பம் சொகுசான வாழ்கை கிடைக்கும். ஆக ஓரு மனையை அமைக்கும் போது கர்ப்பம் இல்லாமல் மனை அமைக்கக்கூடாது.

ஆக ஒரு மனையில் வீடு கட்ட தொடங்கும் போது,மிகவும் முக்கியமான விதியாக மனையின் வடிவம் மற்றும் மனைக்கு வரும் சாலைகள் சார்ந்த விதிகள்,மற்றும் மனையின் ஆயாதி மனையடி வாஸ்து சாஸ்திர அமைப்பில் மனைக்கு கர்ப்பம் என்கிற பொருத்தம் பொருந்தி வரும் மட்டுமே அமைக்க வேண்டும். அப்படி இல்லாது அமைப்பது தவறு.

 

vasthu consultant in Ariyalur,
vasthu consultant in Chennai,
vasthu consultant in Coimbatore ,
vasthu consultant in Dharmapuri,
vasthu consultant in Dindigul,
vasthu consultant in Erode ,
vasthu consultant in Kancheepuram,
vasthu consultant in Kanyakumari,
vasthu consultant in Karur,
vasthu consultant in Krishnagiri,
vasthu consultant in Madurai,
vasthu consultant in Namakkal ,
vasthu consultant in Perambalur,
vasthu consultant in Pudukottai,
vasthu consultant in Ramanathapuram
vasthu consultant in Salem,
vasthu consultant in Sivaganga,
vasthu consultant in Thanjavur,
vasthu consultant in The Nilgiris ,
vasthu consultant in Theni ,
vasthu consultant in Thiruvallur,
vasthu consultant in Thiruvannamalai,
vasthu consultant in Thiruvarur,
vasthu consultant in Thirunelveli,
vasthu consultant in Tiruppur,
vasthu consultant in Trichy ,
vasthu consultant in Tuticorin,
vasthu consultant in Vellore,
vasthu consultant in Villupuram,
vasthu consultant in Virudhunagar,

 

error: Content is protected !!