மனை சகுன சாஸ்திரங்கள்

காலி மனை வாங்கும் போது நிமித்தம் சார்ந்த சகுன சாஸ்திரங்கள்

மனை சகுன சாஸ்திரங்கள்
மனை சகுன சாஸ்திரங்கள்

 

 

 

 

 

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இற்றைய வாஸ்து கட்டுரையில் காலி மனை வாங்கும் போது நிமித்தம் சார்ந்த சகுன சாஸ்திரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒரு காலி மனையை வாங்குவதற்காக செல்கின்றீர்கள் அல்லது, அது சார்ந்த நிகழ்வுக்காக பயணப்படும்போது ஒரு சில பிரசன்ன ஆகர்சன பிரபஞ்ச சக்திகள், ஒரு சில விஷயங்களை நமக்கு உணர்த்தும். அதனை தெரிந்து கொண்டால் இந்த மனை நமக்கு பலனை அளிக்குமா? அளிக்காதா? என்பதனை தெரிந்து கொள்ளலாம். இதனை சகுனம் என்றும் அழைக்கலாம்.அல்லது நிமித்தம் என்றும் அழைக்கலாம்.அல்லது பிரபஞ்ச சக்தியின் விழிப்புணர்வு சமிக்ஞைகள் என்று கூட சொல்லலாம்.
ஆகவே மனை வாங்க பயணப்படும்போது, திருமணக் கோலத்தில் புதுமண தம்பதிகள் எதிர்படுவது மற்றும், பெண் மற்றும் மாப்பிள்ளை அழைப்பு சார்ந்த நிகழ்வுகள், நாதஸ்வர மற்றும் , வீணை ஓசைகள் கேட்பது, ஆலய மணிகளின் ஒலிகள் கேட்பது, ஆலயங்களில் பூஜைகள் நடந்து கொண்டிருப்பது , பசுமாடுகள் கூட்டங்களாக வருவது, சுமங்கலிப் பெண்கள் கூட்டமாக வருவது, தம்பதிகள் இணைந்து வருவது, பசுவும் கன்றும் நம்மை கடப்பது, நாய்கள் சந்தோஷமாக விளையாடுவது, பூஜை பொருட்களைக் கொண்டு செல்லக்கூடிய மனிதர்கள் இதில் வருவது, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பது,சாஸ்திரம் சார்ந்த ஜோதிடர்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரிகள் எதிர்படுவது, அதேபோல கர்ப்பிணிப் பெண் குழந்தை பேறுக்காக செல்வது, சலவை தொழிலாளர்கள் பார்ப்பது அவர்கள் அழுக்கு துணிகளை சலவை செய்து கொண்டு செல்வது, அவர்களின் வாகனமான பஞ்சகல்யாணி கண்ணில் பார்ப்பது ,

 

இறைவனின் தெய்வீக உ திருவீதி உலா எதிரில் வருவது, கல்லூரி செல்லும் கன்னிப் பெண்களை கூட்டமாக பார்ப்பது, தண்ணீர் குடம் எடுத்து வரும் பெண்களை பார்ப்பது,பேரிளம்பெண் மகளிர்கள் சந்தோஷமாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது, புரோகித கூட்டங்களை பார்ப்பது, நாதஸ்வர இசை குழுவினரை எதிரில்பார்ப்பது , பூமாலை கொண்டுவருவது ,பூக்கூடை கொண்டுவருவது, வியாபாரம் செய்யக்கூடிய மனிதர்களை எதிரில் பார்ப்பது, குழந்தைப் பேறு முடிந்து அதனுடைய இல்லத்திற்கு எடுத்து வரும் மகளிரை பார்ப்பது. வங்கிக்கு பணம் கொண்டு செல்வதும் வங்கியிலிருந்து பணம் எடுத்து வருவதுமான நபர்களை பார்ப்பது , அதேபோல கிரகப்பிரவேசம் இல்லங்களை கடந்து செல்வது, திருமணம் நடக்கும் போது அம்மண்டபங்கள் வழியாக செல்வது, குழந்தைகளுக்கு பூணூல் கல்யாணம் செய்யும் நிகழ்வுகளை தரிசித்து விட்டு செல்வது, மற்றும் திருமணத்திற்கு சென்று அதன் வழியாக செல்வது, அல்லது திருமண நிகழ்வுகளை பார்ப்பது,ஆக மேற்கூறிய நிகழ்வுகளை தரிசித்து விட்டு மனை சார்ந்த நிகழ்வுகளை செய்யும் வகையில் இயற்கையான முறையில் நடந்தால், அந்த மனையில் நல்ல பாக்கியமாக வாழக்கூடிய சிறப்பினை கொடுக்கும் என்பது திண்ணம்.

 
அதேபோல யாரிடமிருந்து மனை வாங்கினால் அதிர்ஷ்டம் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று பார்க்கும் பொழுது, கல்லூரி மற்றும், பள்ளி சார்ந்த அறிவைப் போதிக்கும் மனிதர்களிடம் இடங்களை வாங்கும்பொழுதும், ஆன்மீக துறையில் இருக்ககூடிய மனிதர்களின் இடத்தை வாங்கும் பொழுதும், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும், செல்வம் படைத்தவர்கள் மற்றும், தம்பதிகளாக 80 வயது கடந்து வாழ்கின்ற மனிதர்களின் நிலங்களை வாங்குவதும், அதேபோல அரசு கொடுக்கும் பட்டா மனைகள் மற்றும், செல்வ செழிப்புடன் வாழ்ந்த பிறகு அவர்கள் வேறு இடம் செல்கிறார்கள் அல்லது, அடுத்த கட்டமாக ஒரு பெரிய வீட்டிற்கு இடம்பெயர்கிறார்கள் என்று இருக்கக் கூடிய மக்களின் மனையை வாங்குவது.

அதேபோல குடும்பம் சார்ந்த திருமண செலவுகளுக்காக,அல்லது அருகில் உள்ள நகருக்குச் செல்கின்றார்கள் அல்லது, திருமணத்திற்காக ஒரு இடத்தை விற்பனை செய்கின்றனர்.மற்றும் கல்வி சார்ந்த மேல் படிப்பிற்காக ஒரு இடத்தை விற்பனை செய்கின்றனர். அல்லது மனை விற்பனை செய்யும் நபர்கள் தொழில் தொழில் தொழில் செய்கிறார்கள் , அதாவது வீடு கட்டுவதற்காக விற்கும் மனைகள் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட மனைகளை வாங்கும் பொழுது நல்ல அதிர்ஷ்டகரமான பலன்களை கொடுக்கும்.ஆக எதுவாக இருந்தாலும் ஒரு ஆலோசனை எடுத்து கொண்டு செய்வது நலம்.
அதேபோல யாரிடம் மனைகளை வாங்கக்கூடாது என்று பார்க்கும் பொழுது , நீதிமன்றத்தில் வழக்கு வழியாக விற்பனைக்கு வரும் மனை, மிகப்பெரிய கொலை குற்றம் மற்றும்,வேறு தகாத செயல் செய்து அதற்கு தண்டனை பெற்றவர் நபர்களின் இல்லங்களை வாங்குவதும், கோவில் நிலத்தில் இல்லத்தை கட்டியிருநத மனை மற்றும், கோயில் சார்ந்த காலி நிலம் விற்பனைக்காக பிரித்து பிடிக்கக்கூடிய மனிதர்களின் மனைகளையும் எக்காரணம் கொண்டும் வாங்கக் கூடாது.

 

அதேபோல அரசாங்கம் வழங்காது அரசாங்கத்தை ஏமாற்றி குடியிருக்கும் இடம். வெளிநாட்டில் வசிக்கும் மனிதர்களை ஏமாற்றி அவர்களின் இடம். அதேபோல ஒரு நோய் காரணமாக ஒருவர் விற்பனை செய்யும் இடம். மற்றும் மனநிலை சரியில்லாத மனிதர்களை ஏமாற்றி வாங்கிய கூடிய இடம். மற்றும் குடும்பமே வேண்டாம் என்று சந்நியாச வாழ்க்கை வாழ்ந்து வாழ்ந்த ஒரு நபருடைய இடம். மற்றும் பெண் சாபம் மற்றும் முன்னோர் சாபம் பெற்ற மனை. மாந்திரீகர்கள் வாழ்ந்த மனை. சுடுகாடு இருந்து மாற்றி விற்பனை செய்த மனைகள். அதேபோல ஆடு கோழி வெட்டக்கூடிய மனைகள். இந்த மாதிரி அமைப்புள்ள மனைகளை வாங்கும் பொழுது கட்டாயமாக எதிர்மறை ஆற்றல் மிகுந்து இருக்கும். அப்பொழுது ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணை கொண்டு இந்த மாதிரி இடங்களை வாங்குவது சாலச் சிறந்தது.
நிமித்தங்கள் என்று சொல்லக்கூடிய சகுனங்கள் என்று சொல்லக்கூடிய நாம் ஒரு மனைக்கு செல்லும் பொழுது எந்த மாதிரி எதிர்மறை செயல்களை ஒரு பிரபஞ்ச சக்தி உணர்த்தும் போது நாம் புரிந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த மனை வாங்கும் நடவடிக்கை தள்ளிப்போட வேண்டும். அது சார்ந்த எதிர்மறைச் செயல்கள் எவை என்று பார்ப்போம்.
நீங்கள் இடத்தைப் பார்க்க செல்லும் போது, வாங்கச் செல்லும் பொழுது, ஏதாவது தகராறுகளும், சண்டைகளோ சச்சரவுகளும் நடந்து கொண்டிருக்கும் பொழுது நீங்கள் அந்த காரியத்தை தள்ளிப் போட வேண்டும் . மற்றும் கைம்பெண்கள் எதில் வரும்போது இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் எக்காரணம் கொண்டும் கைம்பெண்களை நாம் குற்றம் சொல்லக்கூடாது. இவர்கள் வழியாக இறைவன் நமக்கு ஒரு சில விஷயங்களை, நீங்கள் தள்ளிப் போடுங்கள் என்று அவர் கடவுளாக வந்த நமக்கு உணர்த்துகிறார். என்று உணர்ந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட காலங்கள் நீங்கள் இந்த இடம் மனை வாங்க கூடிய செயலை தள்ளி போடவேண்டும். எக்காரணம் கொண்டும் அந்த அது சார்ந்த மக்களை குற்ற உணர்வோடு பார்க்கக்கூடாது.அது மிகப்பெரிய பாவம். அடுத்ததாக நாய்கள் தெருக்களில் சண்டை கொண்டிருப்பதும்,பெண்கள் தலைவிரி கோலத்தில் அல்லது. தலைவிரி கோலத்தில் பெண்களை பார்ப்பது. மற்றும் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள் எதிரில் பார்ப்பது. எலும்புத் துண்டுகள் மற்றும் கருவாடு காய்ந்து கொண்டிருக்கும் இடங்களைப் பார்த்துக் கொண்டு செல்வது. ஒரு துக்க செய்திகள் காதில் விழுவதும் , சலவைத் தொழிலாளி அழுக்கு மூட்டை எடுத்துக்கொண்டதில் வருவதும், கருமார் அவருடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அதில் வருவதும், காவலர் குற்றவாளியை விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதும், ஒரு இயற்கை சார்ந்த மரங்கள் சாய்ந்து கிடைக்கக்கூடிய ஒரு நிகழ்வுகளும், எதிர்பாராத விதமாக நாம் செல்லும்போது ஒரு விபத்து சார்ந்த காட்சிகளை பார்ப்பதும்,ஆக மனை வாங்க செல்லும் பொழுது அல்லது ஒரு இல்லத்தை வாங்க செல்லும் போது இந்த மாதிரி காட்சிகளை பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட காலம் அந்த காரியத்தை தள்ளிப்போட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் அந்த காரியத்தில் தொடங்குவது சாலச்சிறந்தது மீண்டும் வேறொரு வாஸ்து சார்ந்த கருத்துக்கள் வழியாக சந்திப்போம் நன்றி வணக்கம்.

error: Content is protected !!