மனைக்கு எங்கே அதிக எடை உள்ள பொருள்களை வைக்க வேண்டும்?

vastu for weight
vastu for weight

வாஸ்து அமைப்பில் எடை அளவுகள்.

கடைக்கு சென்று ஒரு பொருள் வாங்குகின்றோம் என்றால்,அந்த பொருளை எடை போட்டு மட்டுமே கடைக்காரர் நமக்கு கொடுப்பார்.அதில் எடை அதிகம் இருந்தால் அவருக்கு லாபத்தில் குறையும் நமக்கு குறைந்தால் நாம் கொடுக்கும் பணத்திற்கு பொருள் வராது.இது அனைத்து இடங்களுக்கும் பொறுந்தும்.

இயற்கை எல்லா உயிரினங்களையும் சம எடை அமைப்பில் தான் படைத்துள்ளது.உதாரணமாக மனிதனின் உருவத்தை நாம் எடுத்துக்கொண்டால்,தலை, உடல், கால்கள், ஒரே அளவுள்ள அமைப்பில் இருக்கிறது. அதாவது தலை ஒரு பாகம்,உடல் இரண்டு பாகம்,கால்கள் நான்கு பாகம்,ஆக 1:2:4 என்னும் விகிதத்தில் தான் மனித உடல் இருக்கின்றது.அதுபோலவே மற்ற உயிரினங்களும் அந்த அமைப்பில் தான் உள்ளன.இதில் மாறுபாடு இருந்தால் உயிரினங்களின் உடல் விகாரமாகி விடும்.

அதுபோலவே நமது வீடும் சரியான எடை அமைப்பில் இருக்க வேண்டும். அந்தவகையில் நமது வீட்டின் தெற்கு மேற்கு திசைகள் நமது உடலின் முதுகு போல ஆகும். இந்தப்பகுதியில்அதிக எடைகளை வைக்க வேண்டும்.அங்கு எவ்வளவுக்கு எவ்வளவு அதிக எடையை ஏற்றுகின்றோமோ அவ்வளவுக்கு நல்லது.வடக்கு மற்றும் கிழக்கு,சார்ந்த பகுதிகளில் மிகக்குறிப்பாக வடகிழக்கு வடக்குவாயு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் அதிக எடை அமைப்புக்கள் இருக்கக்கூடாது.

ஒவ்வொரு அறையின் வடகிழக்கு பகுதிகள் மற்றும் மொத்த வீட்டின் வடகிழக்கு பகுதி,வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு காம்பவுண்ட் சுவர்கள், எந்த நிலையிலும் அதிக எடையுள்ள அமைப்பில் இருக்க கூடாது.பீரோ மற்றும் சோபா,மேஜை போன்ற அதிக எடையுள்ள பொருள்களை அந்தந்த அறைகளில் தென்மேற்கு பகுதியில் வரும் அமைப்பில் வைத்து கொள்வது சிறப்பு.

3000 சதுர அடியில் கட்டும் மிகப்பெரிய வீடாக இருந்தாலும்,300 சதுர அடியில் கட்டும் மிகச்சிறிய வீடாக இருந்தாலும்,சம எடை என்பது மிகமிக முக்கியம். இந்த இடத்தில் மேற்கு தெற்கு பார்த்த அமைப்பில் கட்டும் வீடுகளுக்கு மொத்த வீட்டிற்கு எடை அமைப்பு என்பது மிகமிக முக்கியம்.இந்ததிசை வீடுகளை கட்டும் போது நல்ல வாஸ்து தெரிந்த நிபுணர்கள் ஆலோசனையுடன் செய்வது சாலச்சிறந்தது.
எடை அமைப்பை பொறுத்தவரை வாகனங்களில் அதன் லோடிங் கெபாசிடி என்ன இந்த வாகனத்தில் இத்தனை டன் மட்டுமே ஏற்ற முடியும்,காரில் பயணம் என்பது குறுகிய தூரத்து பயணத்திற்கு 5 நபர்கள் சாத்தியம். அதுவே நெடுந்தூர பயணம் என்றால் 4 நபர்கள் மட்டுமே சாத்தியம்.இதனை நாம் உதாசினபடுத்தி பயணப்பட்டால் பயணமே நமக்கு சுமையாகி விடும்.
மேலும் கடலில் பயணப்படும் கப்பலாகட்டும் மீன் பிடிக்க செல்லும் சிறிய படகாக இருந்தாலும்,அதன் சம எடை என்பது முக்கியம். அதன் எடைக்கு மேல் சரக்கு ஏற்றினால் கப்பல் மூழ்கிவிடும்.இந்தவிதி நாம் குடியிருக்கும் வீட்டிற்கும் பொறுந்தும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment