மனித வளர்ச்சிக்கு உதவும் வாஸ்து

மனித வளர்ச்சிக்கு உதவும் வாஸ்து

நமது ஒவ்வொரு வளர்ச்சிக்கும் வாஸ்து மறைமுகமாக உதவுகிறது என்பது ஆன்மிக நம்பிக்கை.பஞ்சபூத ஆற்றலை ஒருமுகப்படுத்தி நன்மை தரும் ஆற்றலாகத் தருவதே வாஸ்துவின் வேலை. வாஸ்து சாஸ்திரத்தின்படி, உருவான வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். மனைக்கு அதிர்ஷ்ட திசைகளின் அம்சத்தை உணர்ந்து அதன்படி நமது வீடுகளை அமைத்தால் அந்த குடும்பம் ஆரோக்கியத்துடன், வளமாக, செல்வச் செழிப்புடன் வாழ முடியும்.

 

வாஸ்து சாஸ்திர விதிப்படி ஒரு இல்லம் அமைய வேண்டும் என்பது வாஸ்து நிபுணர்களின் அறிவுறுத்தல்.இதெல்லாம் சரிதான். வாஸ்துபடி நிலம் வாங்கி, வாஸ்துபடி வீட்டின் வரைபடம் வரைந்து அதன்படியே வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து யோகம் சரியாக அமையலாம். நகரத்தில் வாழும் மத்தியத் தர மக்கள் பலரும் சிறுகச் சிறுக பணம் சேர்த்து புறநகர்ப் பகுதியில் குறைந்த விலையில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட அல்லது வடிவமைப்பு செய்யப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்கும்போது வாஸ்து எப்படி பார்ப்பது? ஜன்னலை மாற்றுவது, அறைகளை மாற்றுவது எல்லாம் சாத்தியம் இல்லையே என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். எங்களுக்கும் எழுந்தது. அதனால் அடுக்கு மாடி குடியிருப்பில் வாஸ்து பார்ப்பது எப்படி? தோஷமில்லாத வீடுகளை தேர்வு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

‘வாஸ்து தொடர்பான சிக்கல்கள் எழாமல் இருக்க நீங்கள் கட்டுவதற்கு தயாராக இருக்கும் நிலையிலேயே உங்கள் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை தேர்வு செய்யலாம். அதாவது வீடு கட்டுவதற்கு முன்பே அந்த கட்டிட வடிவமைப்பாளரிடம் பேசி உங்கள் வாஸ்து ராசிக்கேற்றபடி அறைகள், ஜன்னல், கதவுகள் அமைக்க சொல்லலாம். இதுவே எளிதானது. ஆனால் பலருக்கு என்று கட்டப்படும் குடியிருப்பு வீடுகளில் தனியாக உங்களுக்கு மட்டும் அமைப்பது சிரமமாக இருக்கலாம். எனவே குறைந்த பட்ச வாஸ்து விதிகளை கடைபிடித்து உங்கள் வீடுகளை அமைக்க சொல்லலாம்.

 

மற்றொன்று ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகள் தான் தேடுகிறீர்கள் என்றால், ஒன்றுக்கு பத்து வீடுகளை பார்த்து வாஸ்து விதிகளுக்கு எந்த அடுக்கு மாடி குடியிருப்பின் மனை ஏற்றவாறு இருக்கும் வீட்டை தேர்வு செய்யலாம்.அதன்படி நீங்கள் தேர்வு செய்யும் வீடு வடக்கு, கிழக்கு பக்கங்களில் காற்றும், ஒளியும் புகுமாறு ஜன்னல், கதவுகள் கொண்டிருக்க வேண்டும்.கூடுமானவரை உங்கள் வீடு செவ்வகம், சதுரம் என்ற ஒழுங்கான அளவில் அமைந்திருக்க வேண்டும். தலைவாசல் வடமேற்கு அல்லது தென்கிழக்கு பகுதிகளில் இருக்க வேண்டும். தென்கிழக்கில் சமையலறை, தென்மேற்கில் குடும்பத்தினர் உபயோகிக்கும் படுக்கையறை இருக்க வேண்டும். தென்கிழக்கில் வாசல் இருந்தால் வடமேற்கில் கழிவறை அல்லது வரவேற்பறையும், வடமேற்கில் வாசல் இருந்தால் தென்கிழக்கில் கழிவறை அல்லது வரவேற்பறை இருக்க வேண்டும். வடகிழக்கில் உள்ள அறை படிக்கும் அறையாக அல்லது குழந்தைகள் உபயோகிக்கும் அறையாக இருக்க வேண்டும்.பூஜை அறை வடக்கு, கிழக்கு திசை பார்த்து  இருக்க வேண்டும். தனியாக பூஜை அறை இல்லாவிட்டால்  சமையலறை, படுக்கையறை அலமாரிகளில் தெய்வ படங்களை வைத்து வணங்கலாம். ஆனால் வழிபடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் திரை போட்டு மூடி விடவேண்டும்.

 

கணபதி மற்றும் திருமகளின் படங்கள் அல்லது சிலைகள் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். லட்சுமி குபேரன் அல்லது சொர்ணாகர்ஷண பைரவர் படங்கள் வைப்பது நல்லது. பூஜை அறைக்கு இருபக்கமும் வெளிப்புறமாக திறக்கும் கதவுகள் இருக்க வேண்டும். அதில் மணிகள் அமைந்து ஒலிப்பது நல்ல அதிர்வுகளை வீட்டுக்குள் கொண்டு வரும். ஸ்வாமி படங்கள் வெளியே ரோட்டை பார்த்தபடி மாட்டக்கூடாது. இவ்வாறு அமைந்த அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டை பார்த்து வாங்குவதே நல்லது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் வாஸ்து நிபுணர்களை அணுகி சில ஆலோசனை செய்யலாம்.

வாஸ்து பரிகாரத்துக்காக நீரூற்றுகள், பொம்மைகள், தாவரங்கள் வைப்பது எல்லாம் அவரவர் மனம் சம்பந்தப்பட்ட நம்பிக்கை. அப்படி வைப்பதானால் கிழக்கு, வடக்கு திசைகளில் பறக்கும்குதிரை, ஆமை,காசு வாயில் வைத்திருக்கும் தவளை, சிரிக்கும் புத்தர், காற்றில் ஒலிக்கும் மணிகள் போன்றவைகளை வைக்கலாம். காற்று வீசும் வடமேற்கு திசையில் சிறிய நீரூற்றுகளை வைக்கலாம். உங்கள் கண் பார்வையில் படும் இடத்தில் பணம் என்னும் மிஷினை வைக்கலாம். உங்கள் படுக்கையறை, படிக்கும் அறை பக்கமாக பசுமையான சிறிய செடிகள் தொட்டிகளில் வைக்கலாம். இது உங்களை உற்சாகப்படுத்தி நல்ல அதிர்வுகளை உருவாக்கும்.

 

சூரியனின் சக்தி தான் வாஸ்துவின் அடிப்படை என்பார்கள். அதன்படி நல்ல வெளிச்சம் வரும்படி உங்கள் வீடுகளை ஒழுங்குபடுத்துங்கள்’ என்றார்.நல்லது! மனதுக்கு நல்ல எண்ணங்களை உருவாக்கும் மூட ந

ம்பிக்கையற்ற விஷயங்களை பின்பற்றலாம் தான்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
#chennaivasthu,#chennaivastu