மனிதர்களுக்கு சித்த பிரமை

ஆன்மீக இரகசியம்:

ஒரு சில இல்லங்களில் இருக்கும் இருக்கும் மனிதர்களுக்கு சித்த பிரமை பிடித்தது போல இருப்பார்கள். இதற்கு காரணம் பயண வழியில் செல்லும் பொழுது ஒரு சில ஆவிகள் இவர்கள் உடலில் புகுந்து விடும். அது அவர்களுக்கே தெரியாது. அதனால் எந்த வேலையும் ஓடாது. எந்த இடத்திலும் அவர்கள் வந்து சரியான நடவடிக்கை அவருடைய வயதுக்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கும் பொருந்தாத செயல்களைச் செய்வார்கள். இப்படிப்பட்ட ஆவிகள் என்பது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஆக இருக்கலாம். அப்படி இருக்கின்றபோது ஹோமங்களும் யாகங்களும் செய்து எல்லா ஆவிகளையும் நாம் விரட்ட முடியாது. அதற்கு ஒரு குறுக்கு வழி இறைவழிபாடு தான். அந்த வகையில் வராகி வழிபாட்டுக்கு துருக்கர் ஆவி கட்டுப்படும். பைரவருக்கு கிருத்துவ ஆவி கட்டுப்படும். அது சார்ந்த ஆலய வழிபாடுகள் இந்த பிரச்சினையில் இருந்து ஒருபைசா செலவில்லாமல் வெளிவர முடியும்.

வாஸ்து ரகசியம்:

ஏற்கனவே ஒரு இல்லம் இருந்து கிராமப்புற பகுதிகளில் விவசாய பண்னை இடங்களில் குடி இருக்கும் பொழுது, மேற்கே வீட்டை கட்டலாமா? என்றால் கண்டிப்பாக கட்ட கூடாது. ஆனால் ஏற்கனவே இருக்கும் வீட்டிற்கு கிணறு தவறான திசையில் இருக்கும்பொழுது, மேற்கே ஒரு இல்லத்தை கட்டினால் மட்டுமே புதிய இல்லத்தை கட்டினால் மட்டுமே அந்த கிணறு வடகிழக்கு பகுதிக்கு வரும் என்றால், நிச்சயமாக மேற்குப்புறம் நீங்கள் பயணம் செய்து வீடு கட்டலாம். இந்த இடத்தில் மேற்கு, தெற்கு போகக்கூடாது என்று முடிவு செய்து, தவறான கிணறு இருக்கின்றபோது, தவறான இடத்தில் வீடு கட்டும் போது, அது தவறான வீடாக செயல் பட உங்களுடைய பிறவிகர்மா உங்களை இயக்குகிறது என்று அர்த்தம்.