
மனிதர்களுக்கு ஏற்படும் வென்புள்ளி மற்றும் வேறுவிதமான தோல் வியாதிக்கு வாஸ்து காரணமா?
மனிதர்கள் வசிக்கின்ற இல்லம் சொந்தமாக இருந்தாலும், அல்லது வாடகைக்கு இருந்தாலும், வாஸ்து படியான விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்று தான்.அதாவது வாஸ்துவின் விதிகள் எப்போதும் எந்த இடத்திலும் பேசும்.அந்தவகையில் ஒருசில வாஸ்து குறைபாடுகள் ஒரு இல்லத்தில் இருக்கும் நபர்களுக்கு நோய்களை உண்டு பண்ணும் .அப்படிப்பட்ட நோய்களில் மிகப்பெரிய அளவில் நோய் உள்ள மனிதர்களின் மனதை பாதிக்கக்கூடிய ஒருசில நோய்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட மனதை பாதிக்கும் வகையில் முதலிடத்தில் இருப்பது தோலின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் தோல் வெள்ளை நிறம் குறையும் நோய் ஆகும்.
தோல் நிறம் குறையும் மூன்று முக்கியமான நோய் வகைகள் உள்ளன.
விட்டில்லிகோ
போஸ்ட் இன்பிளமேடரி ஹைபோபிக்மெண்டேஷன் ( காயத்திற்குப்பின் தோலின் நிறத்தில் ஏற்படும் நிறக்குறைவு) மற்றும்
அல்பினிசம்
விட்டில்லிகோ என்பது பாதிக்கப்பபட்ட தோலின் நிறம், மற்ற பகுதியைவிட குறைவாக/ மாறுபட்டு/ வெளிர்தது காணப்படுதலாகும். தோலில் உள்ள மெலனோசைட் குறைதலே இதற்கு காரணம்.
விட்டில்லிகோ, நம் உடலில் உள்ள நிறமூட்டும் செல்களை அழிக்கும் நோய் அல்லது செல்களை செயல்பட முடியாத நிலைக்கு கொன்டுசெல்லும். இதனால் தோலின் நிறத்தை ஏற்படுத்தும் பொருளின் அளவு குறைகிறது. இதனை டிபிக்மெண்டேஷன் என்பர். இதனால் தோலில் பால் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் ஏற்படுகிறது.
லியுகோடெர்மா என்பது விட்டில்லிகோ என்பதின் மறு பெயர் ஆகும். ‘லியுகோ’ என்றால் வெள்ளை நிறம் என்பது, மற்றும் ‘டெர்மா’ என்பது தோலினை குறிக்கும் சொல்லாகும்.
விட்டில்லிகோ ஏற்படக் காரணங்கள் யாவன?
தோலிலுள்ள மெலெனோசைடுகள் சேதமடைவதினால் அல்லது இறப்பதின் விளைவாக விட்டில்லிகோ ஏற்படுகிறது.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையானது மெலெனின் எனும் நிறத்தை கொடுக்கும் பொருளினை ஒரு வேற்றுப்பொருள் என இனம் கண்டு அழித்துவிடுவதே இதற்கு காரணமாகும்.
இயற்க்கைக்கு மாறாக செயல்படும் நரம்பு செல்கள் நச்சுப் பொருட்களை உண்டுபண்ணும். இவை மெலெனோசைட்டுகளை சேதப்படுத்தும்
மெலேனோசைட்டுகள் தானாகவே அழித்துக்கொள்ளும் தன்மை
போஸ்ட் இன்பளமேட்டரி ஹைபோபிக்மெண்டேஷன் என்பது சிலவகை காயங்கள் (உதாரணம் தீக்காயம்) ஏற்பட்டு ஆறின பின்னர் அந்த பகுதியில் ஏற்படும் தோலின் நிறம் மாற்றம் ஆகும். நிறம் வெளறிய தோல் பகுதியில் தானாகவே பழைய நிறம் சில நேரங்களில் ஏற்படகூடும்.
அல்பினிசம் என்பது ஒரு அரிதான மற்றும் உடற்குரோமோசோம்கள் மூலம் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை தோல் நோய். அல்பினிசத்தில், தோலில் உள்ள மெலெனோசைட் எனப்படும் செல்கள் இருக்கும். ஆனால் அவை மெலெனின் எனப்படும் வண்ணச்சுரப்பினை சுரப்பதில்லை ( எனவே உடல் முழுவதும் சிவப்பு கலந்த பால் போன்ற வெள்ளை நிறத்தோல் காணப்படும்).
மேற்கண்ட மூன்று முக்கிய தோல் வெளிர்தல் வகைகளை தவிர்த்து, இன்னும் ஒரு பொதுவான தோல் நிறம் குறையும் நோய் – பிட்டிரியாஸிஸ். இதிலும் தோலின் நிறம் வெளிர்ந்து காணப்படும்.
ஆக ஒருவருக்கு தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வருகிறது என்றாலே நீண்ட நாட்களாக வீட்டில் சூரிய ஒளி பற்றாக்குறையாக உள்ளது என்பதே முதல் காரணமாகும். போல் ஒருவர் சாதரணமாக அதிக கிட்டபார்வை அல்லது தூரப்பார்வை அதிமாக இருந்து அதிக திடமான சோடாபுட்டி கண்ணாடி என்று சொல்லுகிற அமைப்பில் கண்ணாடி போட்டிருந்தாலும் சரி, அவரின் இல்ல அமைப்பில் கிழக்கு பகுதியில் சூரிய வெளிச்சம் இல்லாமல் போய் விடுகிறது.
ஒரு வீட்டின் கிழக்கு பகுதி முழுவதும் கட்டிடம் இருக்கும் அமைப்பு , இரண்டு வீடுகளுக்கு இடையே கிழக்கு புறத்தில் சுற்றுச்சுவர் இல்லாத அமைப்பு,கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் இருந்தும் திறக்க முடியாது கட்டிடங்கள் ஒட்டி இருப்பது. அப்படியே இடம் இருந்தாலும் ஜன்னல்கள் திறக்கும் போதும் வான்வெளி பகுதிகள் தெரியாத படி பக்கத்தில் கட்டிட அமைப்பு இருப்பதும் வாஸ்து ரீதியாக தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு துணை போகின்றன.
மேற்படி குறிப்பிடும் படியான வாஸ்து அமைப்பு இல்லாமல் இருக்கும் இல்லத்தில் வசிக்கும் மக்கள் வேறு நல்ல இல்லத்திற்கு குடியேறுவது நல்லது.தற்காலிகமாக இருக்கும் போது தினமும் காலை ஆறு மணியில் இருந்து ஆறு முப்பது வரை காலை சூரிய தரிசனமும் ,தினமும் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வதும் போன்ற பிரச்சனையிலிருந்து ஓரளவுக்கு இந்த நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
கிழக்கு மூடிய அமைப்பு அல்லது அடைப்பட்ட அமைப்புள்ள வீட்டில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறை பெளர்ணமி நன்னாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவதோ அல்லது, பெளர்ணமி அன்று இரவு இரண்டு மணிவரை திறந்து இருக்கும் ஆலய தரிசனமும் ஒரளவுக்கு துணைபுரியும். செல்வது சிறப்பாகும்.