மனிதரின் சில வகை

மனிதரின் சில வகை

மனிதரின் சில வகை
மனிதரின் சில வகை

 

 

 

 

 

 

 

மனிதரின் சில வகைகளாகப் பார்க்கலாம்

1. நேரத்தை மதிக்காதவர்கள்,

2. நேரத்தை வீனாக்குபவர்கள்,

3. நேரத்தை கொல்பவர்கள்,

4. நேரத்தை காசாக்கியவர்கள்,

5. நேரத்தை சேர்த்தவர்கள்,

6. நேரத்தை உபயோகிப்பவர்கள்,

7. நேரத்தை உயர்த்தியவர்கள்,

8. நேரத்தைபுகழாக்கியவர்கள்,

9. நேரத்தை இல்லாதவர்கள்,

10. நேரத்தை வியாதியாக்கியவர்கள்.

நேரம் காலம் என்பது நாம் பிறந்ததும் உடனே இறைவன் நம் கையில் கொடுத்தனுப்பிய சொத்து நம்முடன் ஆயுள் வரை வரும் ஆருயிர் நட்பு,துணைவி பலரும் நம்மிடம் இப்படி ஒரு ஆயுதம்,ஒரு செல்வம்,ஒரு நண்பன்,ஒரு மனைவி உடனேயே ஒட்டியிருப்பது தெரியாமலே குருடராக இருப்பார்.

சோம்பலிலும் மடியிலும் உண்டு உறங்கி ஓய்ந்து கிடப்பார்.மற்றும் ஒருவர் வீணான விரயமான பொழுது போக்குகளில் பொன்னான நேரங்களை புண்ணாக்கி அழிகிறான் கிடைப்பதறகரிய “பொழுதுகளை”போக்குவதற்கு படாதபாடு படுகிறார்.

தேங்காயை உடைத்து உண்ணத் தெரியாத நரிபோல உருட்டிக் கொண்டிருக்கிற பலனில்லாத விசயங்களில் உழல்பவர்கள் ஆயுளெனும் அற்புத பொக்கிஷங்களை அரிக்க விடுபவர் பலர் தான் விளையாடுவதை விட்டு விட்டு அடுத்தவர் ஆடுவதை மகிழ்பவர் பலர் அடுத்த குழு இன்னும் ஆபத்தானது,

பொழுது போக்குகிறேன் என்று திட திரவ வாயுப் பொருட்களில் நீச்சலடித்து தன் பொழுதை மட்டுமல்ல உயிரையும் கொல்பவர்கள் பலர்.

இப்படி ஒவ்வொரு குழுவும் போட்டி போட்டு பொழுது போக்குவதில் யார் தேவலை என்று சொல்ல முடியாத அளவில் வாழ்கிறார்கள்.

சரி இதுவரை கால நேரத்தை கற்பழிப்பவரைப்பார்த்தோம் ஆனால் அதை எப்படி சரிவர பராமரிப்பது?

தனிமனிதனுக்கும்

குடும்பத்துக்கும்

சமுதாயத்துக்கும்

தேசத்துக்கும் ஏன் உலகத்துக்குமே.

உருப்படும்படியான பொருளாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆறாவது பூதமான

நேரம் என்ற ஆற்றலை கையில் பிடித்து

நிரந்தரமான பயனுள்ள பொருளாக மாற்ற மனிதரால் முடியும்

எங்கு தொடங்குவது? எப்படி தொடங்குவது?

இதற்கு எறும்பு செய்யும் உபதேசம் சிறந்தது

அது எதுவும் சொல்வதில்லை தானே செய்து காட்டுகிறது

நேரம் என்பது ஒரு செல்வம்,பொன் போன்றது

நேரம் என்பது ஒரு ஆயுதம்,சக்திவாய்ந்த ஆற்றலுள்ளது

நேரம் என்பது ஒரு ஞானம்,மதிப்பீடு இல்லாத அரிய அறிவு

சிறிய வயதிலிருந்து இந்த செய்திகள் யாவும் நம் உடலோடு உயிரோடு வளர்ச்சியோடு பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த செல்வத்தை,ஆற்றலை,ஞானத்தை சிரைத்து சீரழிக்கும் சில வியாதிகள் அவை தவிர்க்கப்பட வேண்டும்.

1.வீணாக்கி விரயமாக்குவது.

2.திட்டமில்லாது மனம் போன போக்கில் செயல்படுவது

3.வாய்ப்பு,சந்தர்ப்பம், நேரம்வரும்போது தவறவிடுவது

4.தாமதம் எனும் இழிவான பழக்கத்தில் வீழ்வது

5.காலம் நேரம் பார்ப்பது

6. நாளை,அபுறம் என்று தள்ளிப்போடுவது

7.அர்த்தமில்லாத பரபரப்பில் நேரத்தை சித்ரவதை செய்வது

8.உண்டு உறங்கி சோம்பிக்கிடப்பது

9.பலனில்லாத பயனில்லாதஅற்பச் செயல்களில் பொழுது போக்குவது

10.தீய பழக்கங்களில் நேரத்தையும் வாழ்வையும் அழிப்பது.

இந்தக் “காத்திருப்பது” என்பது ஒரு துருபிடித்த வியாதி

நேரம் பார்ப்பது

தள்ளிப்போடுவது

தாமதப்படுவது அது பெற்ற பிள்ளைகள்

நீ வான வில்லுக்காக காத்திருக்கலாம்

அது உனக்க்காக காத்திருக்காது

நாம் என்னும் படுக்கையை விட்டு எழவில்லை என்று

சுற்றும் சூர்யனும் பூமியும் நின்று கொண்டிருக்காது

காலம் உனக்காகக் காத்திருக்காது உன்

காலடிச் சுவடுகள் கூட வராது என்பார் கவிஞர்

நல்ல காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பவரால் ஒரு

நல்ல கார்யமும் நடக்காது

காலம் போனால் திரும்புவதில்லை

காசுகள் நம் உயிரைக் காப்பதில்லை

காலன் என்ற கொடுங்கோலன் அவன்

கனப் பொழுதும் காத்திருப்பதில்லை

ஆன்றோர் அறிஞர் அனைவரும்

காத்திருப்பது தாமதப்படுத்துவது

தவிர்க்கப்பட வேண்டியது என கோபத்துடன் எச்சரிக்கை செய்கிறார்கள்.

நினைவுக்கு வரும் நல்ல யோசனை கூட

ஈ பறக்கும் நொடியில் மறந்து விடுகிறதே

சரியான செயல் செய்ய

எல்லா நேரமும் சரியான நேரம் தானே

எந்நாளை விடவும் இன்னாள் நன்னாள் தானே

நன்றே செய்,இன்றே செய்

உடனே இப்போதே என துரிதப்படுத்துகிறார்

ஏன்?

தள்ளிப்போடுவது,தாமதப்படுத்துவது

நேரம் பார்ப்பது,காத்திருப்பது,

தாமதம்,என்ற கிளைகள் யாவும்

சோம்பல்,அச்சம், நம்பிக்கையின்மை என்ற‌

பெற்றோர் பெற்றெடுத்த பிள்ளைகள்.

தள்ளிப்போடுவதும்,தவிர்ப்பதும் பிரச்னையை தீவிரப்படுத்தும்

நாளை பார்க்கலாம் என்ற மனோபாவமே

அனைத்து பிரச்னைகளின் பிறப்பிடமாகிறது

தள்ளிப்போடும் ஒரு சிறிய செயல் கூட‌

நாளை நம‌க்கு தொல்லை தரும் நோயாகக் கூடும்

வெயில் வரும் போது கூரையைப் பழுது பார்த்து விடு என்பார்

இப்பொழுது இல்லையென்றால்

எப்பொழுதும் இல்லையென்று எச்சரிக்கின்றார்

பகலில் விளக்கு போல‌

காலம் தவறிய கார்யம் பயன்படாது

பருவத்துக்கு முன்பு நட்டாலும்

பின்பு நட்டாலும் பயன் தராது

ஒரு நிமிடம் தாமதமாக போய் தோற்று தவிர்பதை விட‌

ஒரு மணி நேரம் முன்னால் போவது அவமானமாகாது

தாமதம் என்ற வியாதிக்கு அடுத்தது

நேரத்தை விரயமாக்குவது

மற்றும் சோம்பல் என்ற தொற்று வியாதிகள்

ஒரு நொடி நேரத்தை உபயோகம் இல்லாது

வீணடிப்பவன் வாழ்வின் மதிப்பீடு அறியாதவன்

அன்று காலத்தை நான் வீணாக்கினேன்

இன்று காலம் என்னை வீணாக்கிவிட்டது எனப்புலம்புப‌வர்பல‌ர்

நேரம் என்பது ஒரு நல்ல ஆசிரியராக நமக்கு கற்பிக்கிறது

ஆனால் கற்கத்தவறுபவர்களை இரக்கமின்றி கொன்றுவிடுகிறது

நமது அரிய நேரம் பறவை போல் இறக்கை கட்டி பறக்கிறது

பயனின்றி விரயமாக்கும் ஒவ்வொரு நொடியும்

மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாக வரலாறு பதிவு செய்யும்

நமது நேரத்தை வீணாக்குவது விட‌

அடுத்தவர் நேரத்தை வீணாக்குவது அதை விடக் குற்றமாகும்

சிலர் அறைக்குள் வந்தால் பயனுள்ளது

பலர் அறையை விட்டுச் சென்றால் அதை விட நல்லது

தாமதம், நேரத்தை விரயம் செய்வது

போன்ற தீமைகளுக்கு ஆதாரமாக இருப்பது

நேரத்தின் அருமை அதன் பயன் பற்றிய அறியாமையே

காலம் பொன் போன்றது என்று பல்லாயிரம் பேர்

திருப்பி திருப்பி சொன்னாலும் எவரும் அதை கண்ணாக மதிப்பில்லை

நமது பெரிய பொக்கிஷங்களிலேயே

விலை மதிப்பில்லாத அரிய செல்வம் நமது நேரமே

நேரம் என்பதை பலரும்

காலில் கட்டிய விலங்கு என பரிதவிக்கிறார்

அதை கையில் கிடைத்த ஆயுதமென பயிற்சி எடுத்தால்

தோல்வி கிடையாது

உண்மையில் சரியான படி திட்டமிட்டு விரயமில்லாது உபயோகமாக‌ பயன்படுத்தினால் நமது தேவைக்கு அதிகமாகவே நேரம் கிடைக்கிறது நேரத்தை திறமையாக உபயோகித்தவர் எவரும் தோற்றுப் போனதில்லை.

ஒவ்வொரு நொடியும் நமது இறுதி நேரம் என்பது போல முக்கியம் கொடுத்து செயல்பட வேண்டும் மனோவியாதிகளில் மிகவும் தீவிரமானது சோம்பல் எனும் நோயே

சூரியன் எழுந்த பின்னும் எழாதவன் வாழ்வும் விடியாமலே போகிறது முப்பொழுதும் உண்டு உறங்கி முடமாகி மீடமாக சாவதற்கா பிறந்தோம்

ஒவ்வொரு நொடியும் விழிப்போடு செயல்படுவோம் .

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

chennaivastu
2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.

chennaivasthu,
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.

 

vasthu consultant in chennai,
best vasthu consultant in chennai,
famous vasthu consultant in chennai,
vasthu consultant fees in chennai,
top vasthu consultant in chennai,
vasthu consultant chennai tamil nadu,
vasthu consultants in chennai,
vasthu consultant fee chennai,
good vasthu consultants in chennai,
vasthu shastra consultant in chennai,
best vasthu consultant chennai tamil nadu,
vastu in chennai,
vastu consultant in chennai,
vastu fish in chennai,
vastu specialist in chennai,
vastu shop in chennai,
vastu course in chennai ,
vastu classes in chennai,
vastu products in chennai,
vastu shastra in chennai,
vastu temple in chennai,

error: Content is protected !!