தூங்கும் முறை பற்றி வாஸ்து

மனிதன் தூங்கும் முறை பற்றி வாஸ்து சாஸ்திரமும் என்ன சொல்கின்றது

மனிதன் தூங்கும் முறை பற்றி வாஸ்து என்ன சொல்கின்றது

மனிதன் தூங்கும் முறை பற்றி சித்தர்களும் நமது வாஸ்து சாஸ்திரமும் என்ன சொல்கின்றது என்பதனைப்பற்றி பார்ப்போம்.மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகமுக்கியமான ஒன்றுதான் தூக்கம்.இது மனித உடலின் புதிய செல்கள் உற்பத்திக்காக உடல் தூக்கம் என்கிற முக்கிய விசயமாக ஓய்வு கொடுக்கிறது.சராசரியாக மனிதவாழ்வில் மனித த உடலுக்கு மூன்றில் ஒரு பங்கு தூக்கம் என்பதற்காக ஒதுக்கி விடவேண்டும்.அப்போது உடலிலுள்ள லட்சக்கணக்கான செல்களை தினந்தோரும் புதுப்பித்து உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெற முடியும்.அதேபோல மனிதனின் முப்பது வயதுவரை உடல்வளர்ச்சி பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

 

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதற்கு வேறு காரணங்களையும் நாம் கூறமுடியும். இரவில் மரங்கள் விழித்திருந்து சுவாசித்து கரியமில வாயுவை விடுகிறது. அப்போது நாம் இரவில் அதிகம் வெளியில் நடமாடும் போது நல்ல காற்று கிடைக்காது. ஆகவே இரவு தூக்கம் மட்டுமே நன்மைதரும்.அந்த வகையில் வாஸ்து அமைப்பில் இருக்கும் நல்ல வீடு மட்டுமே நல்ல தூக்கத்தை வழங்கும்.தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

 

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும்,

புலத்தயக்க மெத்தனுக்கமைந்த

மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை

நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண் .

அதாவது,இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.அதேபோல எத்திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு,

ஓங்குயிர் தெற்கு,

மத்திமம் மேற்கு,

மரணம் வடக்கு,

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.இதனையே வாஸ்துவும் கூறுகிறது. தொடர்ந்து அதிகநாட்களுக்கு வடக்கு தலைவைத்து எக்காரணம் கொண்டும் தலைவைத்து படுக்க வேண்டாம் ஏனெனில் வடபுலத்தின் மின்காந்த அலைகள் ஒரு மனிதனின் ரத்த ஓட்டங்களை பாதித்து அவனை மரணத்திற்கு வழிவகுக்கும்.இதனை அறிவியல் ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

 

வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.மேலும் மேல்நோக்கி கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.அதேபோல குப்புறப் படுத்து தூங்கவும் கூடாது. எப்போதும் இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும்.

 

இது ஆண்,பெண் இருபாலருக்கும் பொருந்தும்.இந்த இடத்தில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் எக்காரணம் கொண்டும் ஆண் குப்புற படுப்பதும்,பெண் மல்லாக்க படுப்பதும் கூடவே கூடாது.வாஸ்து ரீதியாக தெற்கு தலைவைத்து படுப்பது முதல்தரமானது ஆகும். இதற்கு அடுத்த படியாக கிழக்கு மற்றும் மேற்கு தலைவைத்து படுப்பதும் சாலச்சிறந்தது. வாஸ்துவின் ரீதியாக வடக்கு என்பதை மனித உடலுக்கு அப்பார்பட்டு புறம் சார்ந்த விசயங்களுக்கு முதன்மை படுத்த வேண்டும். உடல் என்று சொல்லக்கூடிய அகம் சார்ந்த விசயங்களுக்கு அதாவது உணவு மற்றும் உறக்கம் சார்ந்த விசயங்களுக்கு புறம் தள்ள வேண்டும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
#chennaivasthu,#chennaivastu

error: Content is protected !!