பிரபஞ்ச சக்தியின் ரகசியம்

மனிதனின் உணர்வுகள் தான் மிகப் பெரிய ஸக்தி.

பிரபஞ்ச சக்தியின் ரகசியம்
பிரபஞ்ச சக்தியின் ரகசியம்

 

 

 

 

 

 

 

அதிர்ஷ்டம்
அழைக்கிறது :

மனிதன் மிகப்பெரிய ஒரு ஸக்தியோடு விளையாடிக் கொண்டிருக்கிறான். அதுதான் மின்சக்தி. அதற்கு மேல் அணு ஸக்தி என்ற ஒரு ஸக்தியும் உண்டு.இந்த ஸக்தியை சுயமாக மனிதன் உற்பத்தி செய்வதற்கு எந்த விதமான முயற்சி கூட வேண்டியது கிடையாது. ஏனெனில் இந்த மாபெரும் சக்திகள் எல்லாம் நம்மிடத்தில் இருக்கின்றன.இவைகள் குறைவு இல்லாது எப்பொழுதும் நம்மிடத்தில் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

அதாவது மனிதனின் உணர்வுகள் தான் மிகப் பெரிய ஸக்தி. அந்த ஸக்தி கொண்டு அவர்களை உயர்த்தி வைத்துக் கொள்ளமுடியும் .அவர்களை தாழ்த்து கொள்ளவும் முடியும். இது பணம் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களில் கூட இயக்கமுடியும்.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதன் எண்ணங்கள் பால்வெளி என்று சொல்லக்கூடிய வெட்டவெளியில் பரவி விடுகிறது. அது திரும்ப உங்களுக்கு பல மடங்காக கிடைக்கிறது . ஒருவர் நினைக்கலாம், நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்வதில்லை. ஆனால் வாழ்க்கையில் நான் மிகப்பெரிய அளவில் கஷ்டப்படுகிறேன் என்று நினைக்கலாம். இந்த இடத்தில் அவர் மனதால் யாரோ ஒருவருக்கு கெடுதலை செய்கிறார் என்று அர்த்தம். அதனை உணராது இருப்பதால் அவர் கஷ்டப்படுகிறார் என்பதுதான் உண்மை.

பணம் சார்ந்த நிகழ்வுகளில் இந்த இடத்தில் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிரியாக இருந்தாலும் அவர்களை அழிக்க அல்லது கெடுதல் செய்ய முனைந்தால் அது உங்களுக்கே கெடுதலை தரும் இதுதான் பிரபஞ்சத்தின் சட்டம். இதுதான் ரகசியம் கூட, இந்த இடத்தில் உங்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள், விரோத மனப்பான்மை கொண்டு இருப்பவர்கள் அல்லது, கொண்டிருப்பதாக நினைக்கும் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களோடு நல்ல உறவாக இருக்கிறேன் என்ற எண்ணத்தை கொடுக்க வேண்டும்.அதாவது என்றும் அவர்களைப்பற்றி நல்ல எண்ணங்களை மனதில் எண்ணி வந்தால் நாளடைவில் உங்களைப்பொறுத்தவரை அவர் நல்லவர் ஆகி விடுவார், இதனால் உங்களுக்கும் நல்லதே நடக்கும்.

இந்த பிரபஞ்ச சக்தியின் ரகசியம் என்னவென்றால், நீங்கள் ஒருவரைப்பற்றி மனதில் என்னும் பொழுது, அது பிரபஞ்சத்திற்கு சென்று அங்கிருந்து கூடுதல் நல்ல சக்தியுடன் கொண்டு வருகிறது .
கெட்டதை என்னும் பொழுது கெடுதல் உங்களை நோக்கி வருகிறது என்பது உண்மை.
இதுதான் ரகசியம் இந்த உண்மையை நீங்கள் புரிந்துகொண்டால், உணர்ந்து கொண்டால் நீங்கள் வேண்டியதை உங்கள் மனதின் மூலமாக பிரபஞ்சத்திற்கு அனுப்பி, உங்கள் தேவைகளை விரும்பியவாறு அடையலாம்.
இன்றைய பதிவின் சுருக்கமான கருத்து என்னவென்று சொன்னால், உங்களுக்கு எதிரி என்பவர் ஒருவர் இருக்கின்ற பட்சத்தில், யாராக இருந்தாலும் சரி அவர் மிக நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டும். அதுபோல எங்கள் உங்கள் தொழில் மற்றும் உறவுகள் சரி இல்லாமல் இருக்கிறது என்றால், அந்த உறவை பேணுவதற்கு தினமும் நீங்கள் அந்த உறவு நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணத்தை வையுங்கள்.ஆக உறவு பலப்படும்.
கணவன் மனைவி உறவு சிறப்பு தன்மையாக இல்லாமல் இருக்கும் போது எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் உறவுகளோடு நன்றாக வாழ்கின்றோம் என்கிற எண்ணத்தை வையுங்கள். நேர்மறை சிந்தனை செய்யுங்கள். நீங்கள் நினைக்க நினைக்க உங்களுடைய உறவு பலப்படும்.ஒருவரை நீங்க எதிரியாக நினைக்க நினைக்க உறவு விட்டுப் போகும். ஆக எந்த எதிரியையும் எந்த மனிதர்களையும் மனதால் உடல் மொழியால் வெறுக்க வேண்டாம். நன்றி நண்பர்களே மீண்டும் ஒரு நல்ல கருத்தை சந்திப்போம்.