🌋🌋மனநிம்மதியாக
வாழ ஆலோசனைகள்.🎸🎸

தினமும் செய்த வேலையையே திரும்பத் திரும்பச் செய்யும்போது நம்மையறியாமல் சலிப்பும், வெறுப்பும், அலுப்பும் ஏற்படுவது இயல்பே.
வாழ்வில் உற்சாகம் உண்டாக வேண்டுமானால், புதிய விஷயங்களில் அக்கறை காட்டுங்கள்.
அலுவலகத்துக்கு வழக்கமாகச் செல்லும் பாதையை மாற்றி வேறு பாதையில் பயணப்படுங்கள்.
புதிய மனிதர்களுடன் வலியச் சென்று பேசுங்கள்.
புதிய ஓட்டலுக்குச் செல்லுங்கள்.
புதிய உணவு வகைகளை ருசி பாருங்கள்.
புதிய நூல்களைப் படியுங்கள்.
புதிய இசை நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்.
புதிய திரைப்படங்களைப் பாருங்கள்.
புதிய இடங்களுக்குச் சென்று திரும்புங்கள்.
அண்டை அயலார்களைப் பார்த்துக் காப்பி அடிக்காதீர்கள். அவர்களுக்குப் பெரிய பங்களா இருக்கிறதா? இருக்கட்டுமே!
பெரிய, இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள கப்பல் போன்ற கார் இருக்கிறதா? இருக்கட்டுமே!
பல கோடிக்கணக்கில் அவர்களுக்குப் சொத்து இருக்கிறதா? இருக்கட்டுமே!
நமக்கு உள்ளது போதும். வேண்டியது மனநிம்மதிதான். பிறரைப் பார்த்துப் ஏங்கும் போது பொறாமைப்படும்போது, நாம்தான் நமது இறக்கைகளை எரித்துக் கொள்வோம்.ஆக நமக்கும் கீழே உள்ளவர்கோடி ஆக நினைத்து பார்த்து நிம்மதியாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.