பொள்ளாச்சி வன்கொடுமை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

பொள்ளாச்சி வன்கொடுமை
பொள்ளாச்சி வன்கொடுமை

நண்பர்கள் அனைவருக்கும்
எனது நெஞ்சார்ந்த வணக்கம்.

பொள்ளாச்சியில் பல இளம் #பெண்கள் #பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் ஒரு இளம் பெண், “#அண்ணா என்ன விட்டுங்க, பெல்ட்டால் அடிக்காதீங்க ஆடையை கழற்றுகிறேன்” என கதறும் வீடியோ வெளியாகி, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இன்று நடந்த #பொள்ளாச்சி_பாலியல் வன்முறை சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மொத்தமாக உளுக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.அந்த நிகழ்வில் ஒன்று தான் இன்று பொள்ளாச்சியில் நடந்த வன்கொடுமை சம்பவம் ஆகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக “#சர்வதேச_மகளிர்_தினம்’ மற்றும் “பெண்களுக்கு எதிரான #வன்முறைகள் ஒழிப்பு தினம்’ இப்படி எந்த தினத்தை நாம் அனுசரித்து வந்தாலும், #ஆண்கள் உருவத்தில் இருக்கும் அரக்கர்களை திருத்த முடியாது.ஒவ்வொரு மகளிரையும் ஒவ்வொரு ஆண்களும் தனது தாயாக, சகோதரியாக பார்க்க தொடங்கும் போது இச்சம்பவம் நடக்காது.

ஆக பெண்களின் வன்முறைக்கு எதிரான போற்றும் தினங்கள் உருவாகிய வரலாறு மிகவும் கசப்பான ஒரு நிகழ்வாகும்.
டொமினிக் குடியரசில் 1960 நவம்பர் 25-இல் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல் ருஜிலோவின் உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டனர். இவர்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே குரல் கொடுத்தவர்கள்.
“மறக்க முடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று பின்னர் உலகில் பிரபலமான இந்த மிராபெல் சகோதரிகள், அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறை கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 1980-ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவுகூர்வதற்காகவும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது.

இந்தியாவில் இயல்பாக நடந்துவந்த பாலியல் வன்கொடுமை ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்தான் வெளிஉலகத்திற்குத் தெரியவந்தது. 1872-ஆம் ஆண்டில் தில்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த #பாலியல்_வன்கொடுமை பற்றி பஞ்சாபின் லெப்டினென்ட் கவர்னராக இருந்த சர் ஹென்றி டேவிஸ் என்பவர் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார்: “கோதுமை வயல்வெளியில் 12 வயது சிறுமையை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் அந்த சிறுமி அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டதாகவும் செய்தி கிடைத்தது.

pollachi issue

பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோகம்

ஓர் உண்மை கதை 1992-இல் ராஜஸ்தானிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் குஜ்ஜார் உயர் குடியை சேர்ந்த ராம் கரன் என்பவன் தன்னுடைய ஒன்பது மாதக் குழந்தைக்கு திருமணம் (ஒன்பது மாதம்தான் வருடம் அல்ல) செய்து வைக்க முயன்றான். அதே ஊரில் பெண்கள் முன்னேற்றத்திற்கு, ஏழை மக்களுக்கென்று சுய உதவிக்குழு நடத்திவந்த வந்த பன்வாரி தேவி என்ற தாழ்ந்த ஜாதிப்பெண் அதை போலீஸில் சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டாள் (ஆனால் மீண்டும் அடுத்த நாளில் அது போலீஸ் உதவியுடன் நடந்தது என்பது வேறு விஷயம்).
பின்னர் ராம் கரனும் அவன் கூட்டாளிகள் ஐந்து பேரும் பன்வாரி தேவியை அவள் வீட்டிலேயே அவள் கணவன் எதிரிலேயே கற்பழித்தனர். உடனே அங்கிருந்து தன் கணவனுடன் காவல்நிலையத்திற்கு சென்ற பன்வாரி தேவியை விசாரித்த போலீஸ், உண்மையாகவே அவள் கெடுக்கப்பட்டாளா என்று சந்தேகித்து அவளை மருத்துவமனைக்கு போய் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் வாங்கிவரச் சொன்னது.
மருத்துவமனையில் பெண் மருத்துவர் கள் வேலைக்கு வராததால் (சட்டப்படி ஆண் மருத்துவர்கள் பரிசோதனை செய்யக்கூடாது) அங்கிருந்து அவள் 55 கி.மீ. தூரத்தில் உள்ள சவாய் மான்சிங் (ஜெய்பூர்) மருத்துவமனைக்கு டெஸ்டிற்கு அனுப்பப்பட்டாள். அங்கே “மாஜிஸ்ட்ரேடின் அனுமதி வேண்டும்’ என்று கூறி காலம் கடத்தப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வேண்டிய சோதனை 52 மணி நேரம் கழித்துதான் செய்ய முடிந்தது.
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு போய் கீழ்கண்டவாறு தீர்ப்பு வந்தது: குஜ்ஜார் உயர் குடியை சேர்ந்தவர்கள் ஒரு தலித் பெண்ணை கற்பழித்திருக்க வாய்ப்பில்லை, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஒருவருக்கொருவர் சொந்தம் என்பதால் அவர்கள் சேர்ந்து இச்செயலில் ஈடுபட வாய்ப்பில்லை.
பல மணி நேரங்களுக்கு பிறகு செய்யப்பட்ட செர்விகல் சோதனை பொய்த்துப்போனதால் பன்வாரி பொய் சொல்கிறாள் என்று தீர்ப்பானது. விடுதலையான ஐந்து பேருக்கும் எம்.எல்.ஏ. தலைமையில் விழா எடுக்கப்பட்டது. அதன் பின் அந்த ஊரில் பன்வாரி குடும்பம் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டது.
பின்னாளில் பன்வாரி தேவியின் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டதால், இந்தியா முழுக்க பரவலாக அறியப்பட்டது. கற்பழிக்கப்பட்ட பெண் தானே முன் வந்து இவ்வளவு தைரியமாக நீதிமன்றம் வழக்கு என்று அலைந்து போராடியது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.
இதன் பின் ராஜஸ்தானில் பெண்கள் மத்தியில் நிறைய மாற்றங்கள் வரத்தொடங்கின. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிறைய பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முன்வந்தனர். பின்னாளில் பன்வாரி தேவி ஐ.நா. அரசின் பெண்கள் விருதை பெற்றார்.
ஆனால் கடைசி வரைக்கும் அவருக்கு நியாயம் கிடைக்கவே இல்லை. அன்று முதல் இன்று வரை பெண்களுக்கான கொடுமைகள் தொடர்கின்றன.

1998-ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள ஒரு பெண்கள் கல்லூரி மாணவி சரிகா ஷா, கல்லூரியின் அருகிலேயே அவ்வழியில் சென்ற வன்மம் மிகுந்த வாலிபர்கள் சிலரால் ஈவ் டீசிங் என்ற பெயரால் நசுக்கப்பட்டு உயிரை விட்டார்.
தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், கடுமையாக தாக்கப்பட்டும், அந்த பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தனது காதலை நிராகரித்த வினோதினி என்ற 23 வயது இளம்பெண் மீது, சுரேஷ் என்பவர் 2012 நவம்பர் மாதம் 14-ஆம் தேதி #ஆசிட் வீசப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது. இதில் முகம் முழுவதும் வெந்து கண் பார்வை பறிபோன நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய வினோதினி, 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தனியார் நிறுவன மென்பொறியாளர் சுவாதி ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மிக வேகமாகப் பெருகிக் கொண்டிருக்கும் குற்றங்களில் பெண்களுக்கு எதிரான வன்
முறைக்கே முதலிடமாம். இது வருடத்துக்கு 12 சதவீதம் அதிகரிக்கிதாம். அந்தக் குற்றங்களிலும் ஈவ் டீசிங் எனப்படுகிற கிண்டல், கேலி அத்து மீறல்களே முன்னணியில் இருக்கின்றனவாம்.

கடந்த ஆண்டுகளில் 2011-ஆம் ஆண்டில் 677, 2012-ஆம் ஆண்டில் 528, 2013-ஆம் ஆண்டில் 1019, 2014-ஆம் ஆண்டில் 2300, 2015-ஆம் ஆண்டில் 1,854, 2016-ஆம் ஆண்டில் 34,651 பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக தேசிய குற்றப்பிரிவு புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு நாடு, #இனம், மதம், மொழி, வயது, பொருளாதார நிலை என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து நிலைகளிலும் வன்கொடுமை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
“மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வைர வரிகள் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும். இருந்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் நீடிக்கும் எனில், இதுபோன்ற நம்பிக்கை வார்த்தைகள் வெறும் அலங்கார வாக்கியங்களாக மாறிவிடாதா?

பொதுவாக பெண் குழந்தைகள் பிறந்தால், தாய்மார்கள் கவலைப்படுவது வழக்கம். ஆனால் அந்த கவலை, குழந்தை பெண்ணாகப் பிறந்து விட்டதே என்பதற்காக அல்ல… இந்த சமுதாயத்தில் நாம் பட்டபாட்டை நம் குழந்தையும் பட வேண்டுமே என்ற கவலையினால்தான். இந்த கவலையில் இருந்து பெண்ணைப் பெற்ற தாய்மார்கள் விடுபட வேண்டும் என்றால், ஆண் குழந்தையைப் பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு, பெண்கள் குறித்து மரியாதையை ஏற்படுத்த வேண்டும்.
அனைத்துத் தாய்மார்களும், தங்களது பிள்ளைகளை இந்திய சமுதாயத்தின் சொத்துக்களாக மாற்ற வேண்டும். பெற்றோர் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் முதல் சொத்தே, அவர்கள் சமுதாயத்தில் பெறும் நல்ல பெயர்தான் என்பதை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் என்றாலே ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை ஊட்டி ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர். ஆனால் அந்த எண்ணைத்தை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தக் கூடாது.
சமுதாயம் என்பது ஆணும் – பெண்ணும் சேர்ந்ததே. பெண்ணுக்கு இந்த சமுதாயத்தில் அனைத்து உரிமைகளும் உள்ளது. அவற்றை ஆண் எந்த வகையிலும் தடை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிள்ளைகளிடத்தே வருவதற்கு தாய்தான் வழி செய்ய வேண்டும்.
தங்கள் பெண்களை வெளியே செல்ல பெற்றோர் தடை விதிக்கக் கூடாது. மாறாக, உங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

மீண்டும் பொள்ளாச்சியில் நடந்தது போல ஒரு சம்பவம் வேறு எங்கும் மீண்டும் நடக்க கூடாது.ஒரு தவறு நடந்தால், அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த சமுதாயம் கட்டுப்பாடு விதிப்பது சரியா? தவறு செய்பவர்களுக்கே கட்டுப்பாடுகள் தேவை.
“எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்கிற ஓளவையின் வாக்கை நாம் மறத்தலாகாது.

நம்முடைய இந்த வாழ்க்கை சூழலை நினைத்து வெட்கபட வேண்டும். எப்படியாவது பெண்களை அடைய முடியும் என்று நினைக்கும் ஆணாதிக்கவாதிகள் கூட தாயின் கருவறையில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்று உணர வேண்டும்.

என்றும் வாஸ்து சார்ந்த சமூக பணியில்,உங்கள்
அருக்காணி ஜெகன்னாதன்.
whatsapp 9965021122

error: Content is protected !!