பொறாமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம்

பொறாமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம்

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையிலான காலகட்டத்தில் பொறாமைப்படாமல் வாழ்ந்திருந்தால் அவன் கடவுளாவான். ஆனால் அதற்கு வாய்ப்பு என்பது அமைவதில்லை. ஏன் எனில் அவனின் மனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமையினாலும் மற்றும் மிருகத்தன்மைக்கு இடங்கொடுப்பதுமே காரணமாக இருக்கிறது.

உலகம் உறுவான காலத்திலிருந்தே பொறாமை என்னும் உணர்வின் காரணமாக எவ்வளவோ அட்டூழியங்கள் அழிவுகள் நடந்துள்ளதென்பதை வரலாறுகள் கூறுகின்றன.

ஏன் இராமாயணமும் ,
மகாபாரதமும் உருவாவதற்கு அடிப்படை காரணமே பொறாமையாகும். இப்படியாக பொறாமை ஏன் ஏற்படுகிறது என்று வளர்த்துக் கொண்டு செல்லாம்.

பொறாமை என்னவென்று அலசி ஆராய்ந்துபாருங்கள், பொறாமைக்கு அடைக்களம் கொடுத்தவரை அது எப்படி சித்திரவதைசெய்து படுகுழிக்குள் தள்ளிவிடுவதை பார்க்க முடியும்.

ஆகவே பொறாமை என்னும் உணர்வானது மனித பிறப்பிலிருந்தே இறப்பு வரைக்கும் வரும் உணர்வாகும் ,இப்பொறாமை உணர்வினால் ஏற்படும் காரணிகள் என்றால்,

பிறரை நோகடித்தல்,

எதிரியாக பார்த்தல்.

உறவுகளை மதியாமை,

உறவை நாசமக்கிவிடுதல்.

தன்னை தானே பெரிதாக எண்ணுதல்.

பொறாமையால் கோபம் வருதல்.

வாழ்க்கைக் காலத்தை கணிப்பிடாமை.

நோய்நொடிகள் உருவாதல். (நீரழிவு,உயர் குருதி அமுக்கம், இரத்தத்தில் நஞ்சு ,கொழுப்புக்கள் சேருதல்)

பொறாமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்க்கும் போது.

பணம் கொண்டு எடைபோட்டு மனித உறவுகளை பகையாக்கி கொள்வது.ஒருவரிடம் இருக்கும் செல்வநிலையை பார்த்து பொறாமைப் படுவது

ஒருவரின் அறிவைப் பார்த்து பொறாமை படுவது .
ஒருவரின் வளர்ச்சி மற்றும் அவரின் புகழை பார்த்து பொறாமைப் படுவது.

மேற்கூறிய விசயங்களில் ஆராய்ந்து அறிவுபூர்வமான முறையில் சிந்தித்து முடிவு செய்தால் அனைத்து விசயங்களிலும் வெற்றி என்பது உறுதி.