பேய் பிசாசுகளின் நடமாட்டம்

வாஸ்து ரகசியம்;

இன்றைய காலகட்டங்களில் எதிர்மறை சக்திகளால் இருக்கக்கூடிய பேய் பிசாசுகளின் நடமாட்டம் என்பது ஏறக்குறைய குறைவாக உள்ளது எனலாம். ஆனால் மின்சாரம் இல்லாத அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் அதிகம் இருந்தது என்று எனது தகப்பனார் தெரிவித்திருக்கின்றார். ஆனால் இன்று மின்சாரம் என்கிற விஷயம் பரந்து விரிந்த காரணத்தால் பேய்கள் என்கிற ஒரு எதிர்மறை, நெகட்டிவ் சக்தி மின்சாரம் இருக்கக்கூடிய இடத்தில் அதன் வெளிச்சத்திற்கு வருவதில்லை. அந்த வகையில் வாஸ்து அடிப்படையிலும் இல்லத்திற்கு நேர்மறை சக்தியை கொடுக்கும் விதமாகவும், இல்லத்தில் ஒவ்வொரு அறைகளிலும் இரவு நேரத்தில் சிறிய விளக்கு ஒளிர விடவேண்டும். மின்சாரம் செலவாகும் என்பதற்காக மக்கள் இல்லாத அறைகளில் விளக்கு எரியவிடாது, கதவை மூடி வைக்கக்கூடாது. இதனால் பேய் என்கிற எதிர்மறை சக்தி எப்போதுமே இருண்ட இடங்களில் தான் தங்கும். இருட்டான இல்லத்தை தேர்ந்தெடுத்துக் தங்கும் என்று ஆவியுலக ஆராய்ச்சி மனிதர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் உண்மை என்று நினைத்தாலும், பொய் என்று நினைத்தாலும் சரி, கண்டிப்பாக நான் சொல்லக் கூடிய விஷயங்கள், இரவு நேரங்களில் விளக்கு ஒளி இல்லாமல் இருக்கும் இல்லங்களில் பலவித நிழல் சம்பந்தப்பட்ட கஷ்டங்கள் நடக்கிறது என்பது உண்மை.

பணம் ஈர்க்கும்
ஆன்மீக இரகசியம்:

உணவு வாழியே ஒருசில சூட்சுமங்கள் உள்ளன.உப்பு அதிகம் சேர்த்தால் ஆணவம் உண்டாகும். காரம் அதிகம் சேர்த்தால் கோபம் கொந்தளிக்கும். புளி அதிகம் சேர்த்தால் பொறாமை குணம் கூடும். தயிர் அதிகம் உண்டால் சோம்பேறித்தனம் ஏற்படும். மாமிசங்கள் சேர்த்துக் கொண்டால் காம சக்தியை அடக்க முடியாது. இப்படி பல்வேறு உணவு முறைகளை நாம் கட்டுப்படுத்தும் பொழுது வாழ்க்கையில் உங்களுடைய வெற்றி பிரகாசமாக இருக்கும்.இதற்கு காரணம் உங்கள் உயிர் சக்தி மேலை உயர்ந்து நிற்கும். இதனால் புத்திசாலி தனமும், சமயோசித புத்தியும் நன்றாக வேலை செய்யும். இதனால் புத்தியின் வழியாக பணம் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/phone

: +91 99418 99995