பெண்களின் ருது இரகசியம்!

பூமிக்காரகன் செவ்வாய் என்று சொல்வதில் மட்டும் அர்த்தம் இல்லை! பூமியின் மேற்பரப்பிலிருந்து அரை மீட்டர் ஆழம் வரைதான் செவ்வாயுடையது,பிறகு,ஆழமாய்ச் செல்ல அந்தப் பகுதி சனி பகவானுடையது,அதனினும் ஆழமாய்ச் செல்ல அது இராகு பகவானுடையது ஆகும்,..

பற்களின் இரகசியம்!
நமது வாயிலுள்ள பற்களின் மேல்வரிசையைச் சூரியனும்,கீழ்வரிசையைச் சனியும் ஆதிக்கம் செய்கிறது!…

பெண்களின் ருது இரகசியம்!
ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமானது பிறந்த ஜாதகமே ஆகும்,ருது ஜாதகம் எப்படி என்று என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்,ஒரு பெண்ணானவள் தாமதமாய் ருதுவானால் அந்தப் பெண்ணிற்கு ஏழைரைச் சனி அல்லது கேது திசை நடப்பில் இருக்கும் எந்தத் திசையாய் இருந்தாலும் சூரியன்,செவ்வாய்,குரு ஆகிய கிரகங்களின் புத்தியோ, அந்தரமோ நடைபெறும்போதுதான் ஒரு பெண் பூப்பெய்த முடியும்,..

பன்றி தரும் சகுனம்!
நாம் ஒரு காரியத்தை நினைத்துச் செல்லும் சமயம், பன்றி எதிர்நோக்கி வந்தால் நல்ல சகுனம், செல்லும் வேலை மிகச்சிறப்பாய் வெற்றி பெறும் ..

கிரகங்களும் இராகங்களும்!
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒர் இராகம் உள்ளது அந்த இராகத்தினால் அந்தக் கிரகங்களைச் சந்தோஷப்படுத்தலாம்,1,சூரியன்-ஹரிகாம்போதி
2,சந்திரன்-வனஸ்பதி3,செவ்வாய்-காமவர்த்தினி4,புதன்-சக்ரவாகம் 5,வியாழன்-கோசலம்6,சுக்கிரன்-தர்மவதி7,சனி-தடாகப் பிரியா,
விருத்தியாகாத வீடுகள்!…

1,கோபுரத்தின் நிழல் விழும் வீடும்,2கோபுரத்திற்கு நேரில் இருக்கும் வீடும் 3,விநாயகர்,சிவன் ஆகிய ஆலயங்களுக்கு முன்புள்ள வீடுகளும் 4,விஷ்ணு ஆலயத்தின் பின்புறமுள்ள வீடுகளும் விருத்தியம்சம் பெறா…
எனவே இத்தகைய வீட்டில் வசிப்பதைத் தவிர்க்கவேண்டும்,..

காந்திக்கு மரணம் நேரும் என முன்னரே கூறிய ஜோதிடம்!
காந்தி சுடப்பட்டடே மரணமாவார் என்பதை நமது ஜோதிடக்கலை முன்பே கூறியுள்ளது,..

அதுபற்றி,இந்தியாவிற்கான வெளிநாட்டுத் தூதராய் இருந்த “ஜான்கென்னட்” என்பவர் தாம் எழுதியுள்ள”இந்தியன் அஸ்ட்ராலஜி அண்டு பால்மிஸ்ட்ரி”என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்,…

அதனைத் தெரியப்படுத்தியவர் திருத்தணி கோவில் அருகே வாழ்ந்த ஜோதிடர் ஒருவர்,அவரைக் “காந்தி ஜோசியர்” என்றே வழங்கினார்கள் அவர் இறந்துவிட்டார் அவர் இறந்துவிட்டாலும் அவர் வீட்டை இன்றும் “காந்தி ஜோசியர் வீடு”என்றே குறிப்பிடுகின்றார்கள்…

சிறப்புப் பெறும் மழை நீர்!
சித்திரை மாதத்தில் அசுவினி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது பெய்யும் மழையின் நீருக்கு “கங்கோதகம்”ஹம்ஸோதகம்”என்னும் விசேஷப் பெயர்கள் உண்டு,..

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்!
இதன் அர்த்தம் என்ன? “சட்டியில் இருந்தால் அகப்பையில்ன்வரும்”என்பது நம்மிடையே வழங்கி வரும் ஒரு சாதாரணப் பழமொழி ஆகும் அதன் பொருளையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்,அதன் உண்மையான பொருள் என்ன? பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் முருகனைத் தியானித்து,”சஷ்டி திதி” அன்று விரதம் இருந்தால் “அகப்பையில்”அதாவது,”கருப்பையில்”குழந்தை உண்டாகும் என்பதுதான்!..

அனுபவிக்கக் கூடாதவை
1,சிவன்சொத்து2,பங்காளிசொத்து3,பிராமணர்கள் சொத்து 4,பிள்ளை இல்லாதவர் சொத்து5,கோவில் சொத்து6,கருமிகள் சொத்து ஆகியவற்றை அனுபவித்தால் பல வேதனைகளையும்,சோதனைகளையும் அனுபவிக்க நேரிடும்,..

எனவே எக்காரணத்தைக்கொண்டும் மேற்கண்ட சொத்துகளை அனுபவிக்கக்கூடாது எனவும்,அதற்குப் பரிகாரமே இல்லை எனவும்,நம் ஆன்மிக ஞானிகள் கூறி உள்ளார்கள்