வாஸ்து வழியாக பிரிந்த மனைவி

பூர்வீக வீட்டிற்கும் வாஸ்து

வாஸ்து வழியாக பிரிந்த மனைவி
வாஸ்து வழியாக பிரிந்த மனைவி

வாஸ்து வழியாக பிரிந்த மனைவி குடும்பம் நடத்த வருவாரா.?

காட்டு மிராண்டிக் காலத்திலிருந்து கம்ப்யூட்டர் காலத்தில் மனிதன் வாழ்ந்து வருகின்றான். இந்த மிகப்பெரிய பயணத்தில் அவன் கண்ட ஒப்பற்ற செயலே எதிரெதிர் பாலினங்கள் இணைந்து வாழ்க்கை நடத்தும் ஒரு கோட்பாடே குடும்பம் என்பது ஆகும். அதாவது கூட்டங்கள் என்பது , கும்பலாக மாறி அதுவே , தனித்தனி மனிதனாக பிரிந்துவிடாமல் குடும்பம் என்று வாழ்கிறார்கள். ஆக குடும்பம் குடும்பமாக வாழ வேண்டும் என்றால் இல்லறம் என்கிற நல்லறம் வேண்டும்.இதனையே அவ்வை பிராட்டி, இல்லற மல்லது நல்லற மன்று” என்று கூறியிருக்கிறார்.

குடும்பம் என்ற உன்னத அமைப்பில் நல்ல விசயங்கள் இருந்தாலும், அதிலும் சில குறைபாடுகள் உள்ளன. கொஞ்சம் அடிமைத்தனம், ஏறுக்கு மாறான துணை ஒருவருக்கு அமையும் போது அவரின் வாழ்வை சகித்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளக்கூடிம சூல்நிலை ஏற்படத்தான் செய்கிறது.

குறை என்று நாம் தேடிக்கொண்டு இருந்தால் வாழ்க்கை வாழ்வது என்பது கடினம். ஆக எதில் தான் குறைகள் இல்லை. குடும்பத்தில் மட்டும் குறை கண்டு பிடிப்பதற்கு, குடும்பம் என்ற கோயிலின் நோக்கம் என்பதே ஒருவருக்கு ஒருவரின் வாழ்க்கை பயணத்தில் பாதுகாப்பு என்கிற ஒரு மிகப்பெரிய விசயமாக அடங்கியுள்ளது.

எனது வாஸ்து பயணத்தில் கணவன் மனைவி உறவுகளில் பிரச்சனை சம்மந்தப்பட்ட நபர்களை எனது வாஸ்து பயணத்தில் சந்தித்திருக்கிறேன். அந்த வகையில் ஒரு நண்பர் என்னிடம்
சார், எனக்கும் என் மனைவிக்கும் சில மாதங்களுக்கு முன்பு ஒரே சண்டையா இருந்தது, சண்டை முற்றியதில் நான் கொஞ்சம் கோபப்பட்டு அதிக வார்த்தைகளை கொண்டு திட்டியதன் காரணமாக,எனது மனைவி கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். போனவங்க ஒரு வருடங்கள் கடந்த பின்பும் திரும்பி வரவில்லை. ஆக என்னோடு குடும்பம் நடத்த வருவாங்களா…? அவங்களை போனிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக எவ்வளவோ சமாதானம் படுத்த முயன்றும்..அவர்களின் மனநிலையில் மாற்றம் இல்லை.மிகவும் நம்பிக்கை இழந்து இருக்கின்றேன்..என்று என்னிடம் மிகவும் வருத்தப்பட்டு பேசினார்.

பிறகு அவரின் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்தை வாஸ்து ரீதியாக ஆய்வு செய்தேன். அப்பொழுது ஒருசில வாஸ்து குற்றங்கள் ஒரு மனிதனை தனிமை படுத்தும் விதமான அமைப்பின் படி இருந்தது. என்னோடு பேசிய நண்பர் அந்த வீட்டில் முதல் குழந்தை ஆவார். அவரின் திசையாக வடக்கு திசை அங்கம் வகிக்கிறது. அங்கு திசைக்குற்றம் இருந்தது கண்டுபிடிக்க படுகிறது.
அங்கு வடக்கு பகுதியில் எந்த விதமான திறப்பு என்பதே மருந்துக்கு கூட இல்லாது இருக்கிறது. இதுவே அவரின் வாழ்க்கையில் தனிமை என்கிற விசயத்தில் துணை செய்கிறது.

அதேபோல மனிதர்கள் அனைவரையும் பிரிக்க கூடிய செயலை செய்வது ஒரு இடத்தில் வடமேற்கு திசை ஆகும்.அது வீடாக இருந்தால் கணவன் மனைவி அல்லது அப்பா மகன் உறவுகளில் பிரிவினை ஏற்படுத்தி பிரச்சனைகளை கொடுக்கும். அதுவே தொழிற்சாலைகளாக இருந்தால், கூட்டாளிகள் பிரிவு அல்லது தொழிலாளர்கள் இடையே பிரச்சனை உண்டு பண்ணி ஒரே தொழிலாளர்கள் நிறந்தரமாக அமைய மாட்டார்கள்.

மேற்கூறிய பிரச்சனைகளை கொடுக்கும் வடமேற்கு தவறுகளை பார்ப்போம்.

1.வடமேற்கு வடகிழக்கு விட அதிகமாக இடங்கள் இருப்பது.

2.வடமேற்கு மேற்கு பகுதியில் இடம் இருந்து கழிவுநீர் தொட்டியை வடமேற்கு தானே என்று அமைப்பது.

3 வடமேற்கு பகுதியில் சுற்றுசுவர் குறுகலான அமைப்பாவது.

4. 1999 க்கும் 2005 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளில் வடமேற்கு பகுதியில் வீட்டின் இடத்தில் வெளிப்புற பகுதியாக அமைத்து கார் நிறுத்தி வைக்கும் இடமாக அமைக்கக்கூடிய தவறுகள்.

மேற்கூறிய வாஸ்து தவறுகள் மிகுந்த வலி வேதனையை, அவமானங்கள், துக்கம், துரோகம், துரதிஷ்ட்டம், எதிர்பார விபத்துக்கள், குடும்ப சச்சரவு, பிரிவுன்னு ஏகப்பட்ட கஷ்ட்டத்தை தொடர்ந்து அனுபவிப்பார்கள்.மேற்கூறிய தவறுகளால் குடும்பத்தில் குடுமிபிடி சண்டை கூட நடந்தேறி விடும். சண்டை என்பது சாதாரண சண்டைமாக இல்லாமல், பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் என்று நில்லாது கோர்ட் வழக்கு விவாகரத்து வரைக்கும் ஒருசில இடங்களில் நடந்து விடும்.

ஒருவர் நீடித்த குடும்ப வாழ்வை நடத்தும் சாதக அம்சங்கள், வேண்டும் என்றாலும், கணவனும் மனைவியும் குடும்பத்தில் இணைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றால் ஒரு இல்லத்தில் வடமேற்கு மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும்.

அதேபோல் ஒரிரு மனிதர்கள் தனது குண இயல்பு பண்புகளில் உள்ள குறைகளை நிறைவு செய்து வாழும் போது, அதாவது தங்கள் மனைவியின் குண நலன்களுக்கு ஏற்ப அனுசரித்து வாழும் போது, திருமணம் எப்படி சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களோ அதுபோல சொர்க்கலோக வாழ்வாக இல்லற வாழ்வு அமையும்.அதற்கு ஒரு இல்லத்தில் வடமேற்கு மிகசிறந்த வாஸ்து அமைப்பு பெற்றிருக்க வேண்டும்.

வாரியார் சுவாமிகள் கூட இல்லறம் பற்றி மிக அருமையாக கூறியிருக்கிறார். “குடும்பத்தை சீரிய முறையில் நடத்தும் மனைவியைக், கணவன் சீரிய முறையில் நடத்த வேண்டும். ஆண்கள் மனைவியை அவ்வளவு எளிதாக எண்ணிட கூடாது. கணவனுக்கு ஆயுள் வளர்வதும் மனைவியாலேயே; செல்வம் வளர்வதும் மனைவியாலேயே; புகழ் வருவதும் மனைவியாலேயே; இன்பம், கல்வி, முத்தி முதலிய யாவும் கற்பின் ஒழுக்கத்தில் நிற்கும் மனைவியாலேயே .என்று சொல்லுகின்றார்.

ஆக வடமேற்கு வாஸ்து விதிகளுக்கு ஒரு இல்லத்தை பொருத்தம் செய்யும் போது கணவன் மனைவி உறவுகள் மட்டும் அல்ல, மற்ற உறவுகளான,அப்பா மகன் உறவுகளில் விரிசல்,மற்றும் காதல் திருமணம் செய்து ஒருவரின் மகள், அப்பா அம்மாவை பிரிந்து சென்று விடுவது. தாத்தா பேரன் உறவுகள் சார்ந்த பிரிவு மற்றும் தொழிற்கூட்டாளிகள் இடையே கருத்து வேறுபாடு சார்ந்த பிரிவினைகள் அனைத்தும் சரியாகிவிடும்.

 

நித்ரா தமிழ் 
vastu home,
vastu housing finance,
vastu horse statue,
vastu house plans,
vastu hindi,
vastu house facing east ,
vastu horse,
vastu house facing north,
vastu images,
vastu in tamil pdf,
vastu items for home,
vastu items,
vastu indoor plants,
vastu in tamil language ,
vastu in home,
vastu i feng shui,
i want vastu details,
vastu jyotish,
vastu jade plant,
vastu feet,
vastu jothidam,
vastu jothidam in tamil,
vastu kitchen,
error: Content is protected !!