பூர்வீக இடத்தில் வாஸ்து

பூர்வீக இடத்தில் வாஸ்து

பூர்வீக இடத்தில் வாஸ்து
பூர்வீக இடத்தில் வாஸ்து

 பூர்வீக இடத்தில் வாஸ்துப்படி வீடு கட்டி குடியிருக்கலாமா?.

மக்கள் ஜோதிடரிடம் செல்லும் போது ஒருசில மக்களுக்கு பூர்வீகம் ஆகாது என்று ஜோதிடர்கள் சொல்லி விடுகின்றனர். அதற்கு பிறகு என்னைப்போன்ற வாஸ்து நிபுணரிடம் சென்று ஆலோசனை கேட்பார்கள். அதாவது பூர்வீகமாக வாரிசு அடிப்படையில் தாத்தா பெயரில் இருப்பதை மனைவி பெயரில் தான செட்டில்மென்ட் பதிவு செய்து விட்டேன்.இப்போது அந்த இடம் பூர்வீகமாக ஆகிவிடாது அல்லவா? ஆனாலும் எங்களுக்கு கஷ்டம் நிறைந்த வாழ்க்கை வாழ்கின்றோம். இதற்கு என்ன தீர்வு என்று என்னிடம் வருவார்கள்.

ஒருசில மக்கள் என்ன சொல்வார்கள் என்றால் , பூர்வீகம் சார்ந்த இடத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டு பிறகு அதையே ஓரு காலகட்டத்தில் திரும்ப பணம் கொடுத்து வாங்கி விட்டோம். இதனால் இதனை பூர்வீக சொத்தாக எடுத்து கொள்ள வேண்டுமா? ஆக இப்படிப்பட்ட இடங்களில் இருக்கலாமா என்று என்னிடம் கேட்பார்கள்.

இதற்கு எனது நேரடியான பதில் ஒருவர் தனது குடும்பத்தை கூண்டோடு தூக்கி வேறு இடத்திற்கு மாற்றி விடுகிறார்கள் என்றாலே அங்கு மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் இருக்கிறது என்பது எனது ஆராய்ச்சி முடிவு.

ஒருசில இடங்களில் இயற்கையாகவே பரிகாரமாக ஒருசில நடவடிக்கைகள் அவர்களை தவறான வாஸ்து உள்ள பூர்வீக வீட்டில் வெளியேற்றி காப்பாற்றி விடும்.

பணிகள் காரணமாக வெளியூர் அல்லது வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தங்கிவிடுவது.
தொழில் ரீதியாக பாம்பே போன்ற வெளிமாநில நகரங்களில் தங்ககவிடுவது. ஊர் திருவிழாவில் கலந்து கொள்ள மட்டுமே ஊருக்கு வருவது அதாவது வியாபாரம் சார்ந்த பயணமாக அடிக்கடி வெளியூர் போய் வருவது
மனைவியை பிரிந்து கணவன் மட்டும் வருடக்கணக்கில் பாஸ்போர்ட் அடகு வைத்துவிட்டு நமது நாட்டில் காலடி எடுத்து வைக்க வழி இல்லாமல் போய் விடுவது. மிகவும் மிகக்குறைந்த வயதில் வாரிசுகளை பள்ளி விடுதியில் தங்க வைத்து படிக்க வைப்பது.

ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் வாஸ்து என்பது இல்லாது மனைப்பொருத்த ஆயாதி மட்டும் இருக்கும் அமைப்பாக கட்டினார்கள். அக்காலத்தில் கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் வாஸ்து விதிகளை பின்பற்றாத அங்கண அளவுள்ள வீடுகளாக மட்டுமே இருந்தன.

அதே பூர்வீக இடத்தில் கட்டும் இல்லம் என்பது வாஸ்துவின் அடிப்படை விதிகளுடன் கூடிய ஆயாதி கணித அமைப்பின் படி கட்டும் போது அவை எந்த மாதிரியான பூர்வீக இடமாக இருந்தாலும் எந்த பாதிப்பும் ஒருவருக்கும் வழங்காது.

வாஸ்து விதிகளை பொருத்த அளவில் மனிதர்கள் வாழும் நிலப்பரப்பு மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளும்.. அவைகளில் பூர்வீகச் இடம், தாத்தா வாங்கிய விவசாய நிலம், மனைவிக்கு அவரின் பாட்டி கொடுத்த மனையிடம், அண்ணன் சீதனமாக தனது தங்கைக்கு கொடுத்த இடம் இந்த மனிதர்களின் பிரித்தாழும் விசயங்கள் வாஸ்துவில் வேலை இல்லை. ஒருவர் வாஸ்து படி கட்டக்கூடிய இல்லங்கள் மட்டுமே அவர்களுடைய வாழ்வை நிர்நயம் செய்யும்.

அடிப்படையில் இடம் சதுரமாகவும், செவ்வகமாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது 1:2 என்ற விகிதத்தில் மட்டுமே இருக்க வேண்டும் அதை தவிர்த்து மற்ற அளவுகள் தவறானவைகள்.
ஒரு நபருக்கு பூர்வீகமோ அல்லது சொந்த வீடோ எதுவானாலும், அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்றால் அந்த வீட்டில் வாஸ்து குறையுள்ளது என்பது அ

அன்றைய நாளில் கட்டிய கட்டிடங்கள் பெரும்பாலும் வாஸ்து விதிகளுக்கு உட்படாதவைகளே இருக்கும்.

இப்போது அதே இடத்தில் கட்ட கூடிய கட்டிடம் வாஸ்துவின் அடிப்படை விதிகளுடன் கட்டும் போது அவை எந்த மாதிரி சொத்தாக இருந்தாலும் உங்களுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.

இந்த பூமியை பொருத்த மட்டில் ஒரே ஒரு நிலப்பரப்புதான். அதில் பூர்வீகச் சொத்து, நான் வாங்கிய சொத்து, மாமியார் கொடுத்த சொத்து, மாமா கொடுத்த சொத்து என்றெல்லாம் எதுவும் கிடையாது. நீங்கள் கட்டக்கூடிய கட்டிடங்கள் மட்டுமே உங்களுடைய வாழ்வை தீர்மானிக்கும்.

error: Content is protected !!