புதிய நகர் வாஸ்து/வீடுகள் வாஸ்து/வாஸ்து என்பது பொய்

புதிய நகர் உருவாகி அதில் அனேக வீடுகள் ஆகியிருக்கும். சாலைக்கு முன் பகுதிகளில் எல்லோரும் விரும்பி கட்டிடங்களை கட்டி குடியிருப்பார்கள். கொஞ்ச காலத்திற்கு பிறகு ஒருவர் இடம் வாங்குகிறார் என்று சொன்னால் பின்பகுதியில் தான் வாங்க வேண்டும். பின் பகுதிகளில் அப்படி வீடு அமைக்கும் போது கண்டிப்பாக வாஸ்து அமைப்பில் அமைக்க வேண்டும் .. ஏனெனில் அந்த இல்லங்களுக்கு பின்புற பகுதிகளில் காலி நிலங்களாக அல்லது விவசாய நிலங்களாக இருக்கும் .அப்பொழுது வாஸ்துவின் படி அந்த நகருக்கு பிரதான சாலை தெற்கு மேற்காக இருந்தால் அங்கு இடம் வாங்கி வீடு கட்டும் மனிதர்கள் வாஸ்து அமைப்பாக கட்டிடம் கட்டவில்லை என்றாலும், மிகுந்த பணக்கார வாழ்க்கை அமையும்.நல்லது நடக்கும் .அதே பிரதான சாலை கிழக்கு வடக்கு இருந்தால் அப்படி பின்பகுதியில் வரும் வீடுகள் வாஸ்துவில் பெரிய தவறுகள் இல்லாமல் இருந்தாலும் நடுத்தர வாழ்க்கை வாழும் நிலையே அமையும். இதனைத்தான் அவர்கள் நேரம் கர்மா என்பேன். மேற்கூறிய விசயம் தான்ஒருசில மக்கள் பார்வையில் வெளியே இருந்து பார்த்தால் அவர்களுக்கு வாஸ்து என்பது பொய் போல தெரியும்.