Bhoomi-pooja

புதிதாக வீடு கட்டும் பொழுது வாஸ்து பூஜை

Bhoomi-pooja
Bhoomi-pooja

புதிதாக வீடு கட்டும் பொழுது வாஸ்து பூஜை செய்வது எப்படி?.

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். பூமி பூஜை என்பது மொத்த இடத்தில் வடகிழக்குப் பகுதியில் மட்டுமே போட வேண்டும். வடகிழக்கு பகுதியில் பள்ளம் எடுத்துக்கொண்டு அக்குழி என்பது ஒரு அடிக்கு ஒரு அடி நீள அகலமும், ஆழமானது ஒரு அடியாக இருக்க வேண்டும்.பூஜை தொடங்குவதற்கு முன்பாக, இந்த இடத்தில் 5 சுமங்கலிப் பெண்கள் ஐந்து குடம் தண்ணீர் வடக்கு முகம் பார்த்து வடகிழக்கு பகுதியில் தோண்டியுள்ள பள்ளத்தில் மஞ்சள் குங்குமம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.
அதன் பிறகு அந்த பள்ளத்திற்கு மேற்கு பகுதியில் தலைவாழை இலை கொண்டு, உங்களுக்கு பிடித்த இறைவனின் படங்களை வைத்து, அவல், கடலை நாட்டுச்சர்க்கரை அனைத்தையும் கலந்து இலையில் வைக்க வேண்டும்.கூடவே நல்லெண்ணெய் அல்லது, நெய் விட்டு விளக்கு ஏற்றிக் கொள்ள வேண்டும். மற்றும் உங்களுக்கு பிடித்த ஐந்து கனிவகைகளை வைத்து வாழைப்பழத்துடன் சேர்த்து இரண்டு தேங்காய் உடைத்து அதன் நீரை ஒரு சொம்பில் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.கூடவே ஒன்பது செங்கல் அடுக்கி அதற்கும் வழிபாடு செய்ய வேண்டும்.
தண்ணீர் ஊற்றி உள்ள அந்த ஒரு அடி பள்ளத்தில் நவதானியங்கள் மற்றும் நவரத்தினங்கள் மற்றும் ஐம்பொன் வகைகள் கலந்த வெள்ளை துணி கொண்ட மஞ்சளால் நனைத்த துணி கொண்டு முடித்து வைத்துக் கொள்ள வேண்டும். முடிப்பை பாலை மரத்தின் இரண்டு கிளைகள் கொண்ட கோல் கொண்டு பாலக்கால் பிடித்க்க வேண்டும். இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து அந்தக் குழியில், ஒரு நல்ல முகூர்த்த நேரத்தில் நடவேண்டும்.

 

அதன் பிறகு அங்குள்ள அனைவரும் நாட்டு மாட்டு பால் கொண்டு நட்டிய பாலக்காலிற்கு பால் விட வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜை நிறைவு செய்ய வேண்டும். இதற்கு முன்பாக இதற்குப் பிறகு பூஜையில் வைத்த 4 எலுமிச்சம் பழத் துண்டுகளை நான்கு மூலைகளிலும் காப்பு கட்ட வேண்டும். ஏற்கனவே படையலாக வைத்துள்ள பொருள்களை அஷ்ட திக்குப் பாலர்களையும் உங்கள் குலதெய்வம் மற்றும் முன்னோர்களை மனதில் நினைத்து வழிபாடு நிறைவு செய்து அப்புறம் பிரசாதங்களை அனைவருக்கும் வழங்க வேண்டும்.
பூஜை செய்த செங்கற்களை கட்டடம் கட்டத் தொடங்கும் பொழுது கட்டிடத்தின் அருகில் வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கட்டிட வேலையை அந்த நாளிலோ அல்லது வேறு ஒரு நாட்களிலோ தொடங்க வேண்டும். அதே நாளில் தொடங்குவது என்பது கூட நல்ல ஒரு முகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில் வாஸ்து பகவான் விழிக்கும் நேரம் என்று சொல்லக்கூடிய அந்த இருபது நிமிடங்களில் பூஜை போடலாம். ஆனால் அந்நேரம் என்பது மிகச் சரியான ஒரு முகூர்த்தத்துக்கு உரியதாக இருக்கும் பொழுது, அந்த நேரத்தில் வாஸ்து பூஜை செய்வதில் தவறு கிடையாது. அந்த நாள் அதாவது ராகு காலம், எமகண்ட காலங்களாக இருக்கும் பொழுது, அந்த வாஸ்து நேரத்தை ஒதுக்கி வைத்து நல்ல முகூர்த்த நாளில் இந்த பூஜையை செய்வது சாலச் சிறந்தது.மேலும் எக்காரணம் கொண்டும் பூமி பூஜை என்பது ஒரு கட்டிடத்தின் வடகிழக்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் இந்த பூஜை என்பது பூமிக்கு செய்யக்கூடிய பூஜையாகும். இது மதம் சார்ந்த நிகழ்வாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. ஆக ஜைன, புத்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், அல்லது இந்து அல்லாது கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பூமி பூஜை செய்வது நல்லது. கிறிஸ்தவர்களாக இருந்தால் அவர்களின் தேவ ஊழியர்களை வரவழைத்து கிறிஸ்தவ முறைப்படி இயேசு கிறிஸ்துவின் படத்தை வைத்து நீங்கள் முறையாக பூஜை செய்து விட்டு வேலையைத் தொடங்கலாம். முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய குருமார்களை வேதம் ஓதி பூமிக்கு மரியாதை செய்த பிறகு, அவர்களும் வீட்டு வேலையை தொடங்கலாம்.

 

இப்படி செய்யும் பொழுது வீட்டு வேலையானது எவ்விதமான தடை மற்றும் தடங்கல்களை சந்திக்காமல், மிகச் சிறப்பான முறையில் வீட்டுவேலைகள் நிறைவு பெறும். அதுவும் ஒரு சரியான வாஸ்து விதிகளின்படி இல்லத்தை கட்டும் பொழுது அந்த வீட்டு வேலையை அந்த வீடு பார்த்துக் கொள்ளும் என்பது திண்ணம்.வீட்டு வேலைக்காக அந்த நேரத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ வாஸ்து விதிகளுக்கு கட்டிடம் கட்டும் பொழுது, மிகச் சரியான நேரத்தில் பணம் வந்து வீட்டு வேலைகளை நிறைவு செய்யக்கூடிய தன்மையை வாஸ்து என்கின்ற விஷயம் உங்களுக்கு வழங்கிவிடும்.

vastu consultant in kolapakkam,
vastu consultant in mudichur,
vastu consultant in sembarambakkam,
vastu consultant in urapakkam,
vastu consultant in kumananchavadi,
vastu consultant in irumbuliyur,
vastu consultant in Vandalur,
vastu consultant in thirumudivakkam,
vastu consultant in thiruneermalai,
vastu consultant in anakaputhur,
vastu consultant in kundrathur,
vastu consultant in kolappancheri,
vastu consultant in Poonamallee,
vastu consultant in Avadi,
vastu consultant in Ambattur,
vastu consultant in vallakottai,
past consultant in sunguvarchatram,
vastu consultant in Sriperumbudur,
vastu consultant in guduvanchery,
vastu consultant in singa Perumal koil,