பிலவ வருட தமிழ் புத்தாண்டு

சித்திரை_1

Apri_14
புதன்கிழமை

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பிலவ வருட #தமிழ்_புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ராசி மண்டலத்தில் மொத்தம் பன்னிரண்டு ராசிகள் உள்ளன. இந்த பன்னிரண்டு இராசியிலும் சூரியன் ஓராண்டில் சஞ்சரிக்கிறார்.

இராசிகளில் முதல் இராசியான மேஷ ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் நாளே வருட பிறப்பாகும். இதனை சமஸ்கிருதத்தில் மேஷ சங்கராந்தி என்று கூறுகின்றனர்.

தமிழர் கணக்கில் இது இளவேனிற்கால துவக்கமாகும். தமிழ் மாதங்களில் சித்திரை மாத பிறப்பாகும். சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் மொத்தமாக அறுபது வருடங்களுக்கு பெயர்கள் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு பெயரில் பிறக்கின்றது.

தமிழ்_மாத பிறப்புக் கணக்கீடு

பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என்பதை பார்த்தோம். மேலும் சூரியனின் சுற்று பாதையானது பூமியை மையமாக கொண்டு 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த 12 பகுதிகளும் 30 பாகை அளவுள்ளது. இதுவே 12 ராசிகள் கொண்ட ராசி மண்டலம் ஆகும். குறிப்பிட்ட காலங்கள் ஒவ்வொரு இராசியிலும் சூரியன் தங்குவதே சூரிய மாதங்கள் ஆகும்.

சூரிய மாதத்தில் சந்திரன் பூர்ணத்துவம் (பௌர்ணமி) அடையும் நாளை வைத்தே சந்திர மாதம் கணக்கிடப்படுகிறது.

சந்திரன் மேஷ மாதத்தில் சித்தரை நட்சத்திரத்தில் பூர்ணத்துவம் அடைகிறான். எனவே சந்திர மாதம் சித்திரை என குறிப்படுகிறது. தமிழகத்தில் இந்த சந்திர மாத பெயர்களையே தமிழ் மாத பெயர்களாக உள்ளன.

விஷூ புண்ணிய காலம்

விஷூ புண்ணிய காலம் என்பது பகல் பொழுதும் இரவு பொழுதும் சமமான அளவு நேரத்தை பெற்றிருப்பது விஷூ புண்ணிய காலம் எனப்படுகிறது.

இது மேஷ மாதமான சித்திரை மாதத்திலும் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் முதல் நாள் வருகின்றது. இதுவே விஷூ புண்ணிய காலமாகும். எனவே சித்திரை முதல் நாள் விஷூ கனி பூஜைகள் கோவில்களில் நடத்தப்படுகின்றது.

இந்த வருடம் #தமிழ்_புத்தாண்டானது 37-வது வருடமான பிலவ என்ற பெயரிலே ஏப்ரல் 14-ஆம் தேதி இன்று பிறக்கிறது.

மங்கலரகமான `பிலவ’ புத்தாண்டு, 13.4.21 அன்று நள்ளிரவுக்குப் பிறகு (14.4.21 அதிகாலை) 1:32 மணிக்கு சர லக்னமாகிய மகரத்தில், சனி ஹோரையில் பிறக்கிறது.

கிரக நிலைகள், பெயர்ச்சி நிகழ்வுகளின் அடிப்படையில் அனைத்து ராசியினருக்குமே ஏதோ ஒருவகையில் ஏற்றம் தரப்போகும் ஆண்டு இது. சிற்சில பாதிப்புகள் உண்டு என்றாலும் அவையும் சிறந்த அனுபவ பாடத்தைத் தருவதாகவே அமையும்.

புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் மற்றும் சுக்ர பகவான் இருக்கும் நிலைப்படி, நல்ல மழைப் பொழிவு உண்டு. எனினும் மழை நீரை வீணாக்காமல் சேமிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படவேண்டும். வெள்ளப் பெருக்கின் காரணமாக பாதிப்புகளும் ஏற்படலாம்.

கனிமச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படும். சுக்ர பகவான் இந்தப் புத்தாண்டில் சஸ்யாதிபதியாகவும், நீரஸாதிபதியாகவும் வருகிறார். ஆகவே, கல்வியில் நம் தேசம் முதன்மை பெற்றுத் திகழும்.

அதேபோல், பிலவ வருடத்தின் மந்திரியாக புதன் அமைகிறார். ஆகவே, அறிவுசார் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்; புதிய கண்டுபிடிப்புகள் வியக்கவைக்கும்.

புதிய விவசாய உபகரணங்கள் புழக்கத்துக்கு வரும். பழைய ஆலயங்கள் பலவும் பொலிவு பெறும். அதேநேரம் ஆன்மிகம் சார்ந்த துறைகளில் உள்ளோர் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு உண்டு.

தொழில் துறையைப் பொறுத்தவரையிலும் அந்நிய முதலீடுகள் எதிர்பார்த்தபடி அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதன் காரணமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் கணிசமான சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.

வேளாண்மைப் பொருள்களின் உற்பத்தி அதிகரிக்கும். தேயிலை, நறுமணப் பொருள்கள் அதிகம் விளைச்சல் காணும். கால்நடைகள் பாதிப்புகளைச் சந்திக்க நேரும். எண்ணெய் வித்துகள், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சாதனங்கள் – எலெக்ட்ரானிக்ஸ் உபகருவிகள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கலாம். பெண்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும்.

ராணுவம், காவல்துறை உட்பட பாதுகாப்புத் துறைகள் நவீனமயமாகும். விண்வெளி ஆய்வு தொடர்பான முயற்சிகளில் சிரமங்களும் தடைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அண்டை நாடுகள் கடும் வீழ்ச்சியையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும். பெட்ரோல் முதலான எரிபொருள்களின் விலை, ஒரு நிலையில் இல்லாமல் மக்களைச் சிரமப்படுத்தும். கட்டுமானப் பொருள்களின் விலை சற்று குறையும்.

செவ்வாய் மற்றும் ராகுவின் நிலையின் காரணமாக ரத்தம் தொடர்பான புதிய நோய்கள் உருவாக வாய்ப்பு உண்டு. தொற்று நோய் பாதிப்பும் உண்டு. மக்களுக்கான இலவச காப்பீடு திட்டங்களில் அரசாங்கங்கள் அதீத கவனம் செலுத்துவார்கள்.

பிலவ வருட வெண்பா பலன்

பிலவ_புத்தாண்டு குறித்து வெண்பா கீழ்க்காணும்படி அமைகிறது.

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்

சலமிகுதிதுன்பம் தருக்கும் நலமில்லை

நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை

பாலுமின்றிச் செயபுவனம் பாழ்!

கருத்து விளக்கம்:

பிலவ ஆண்டில் மழை குறைவாகவே பெய்யும். மழை நீர் வீணே கடலில் கலக்கும் நிலை உருவாகும். #ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர். மக்களுக்கு அதிக நன்மைகள் இல்லை. ஆடு, மாடு உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்களுக்குப் பாதிப்புகள் நேரும். பால்பொருள்கள் உணவு தானியங்களும் பாதிப்பு அடையும்.

நவநாயகர்களின் நிலை…

செவ்வாய் – ராஜ்ஜியாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி.

புதன் – மந்திரி

குரு – தான்யாதிபதி

சுக்கிரன் – ஸஸ்யாதிபதி, நீரஸாதிபதி

சூரியன் – ரஸாதிபதிராகு – கேது பெயர்ச்சி

இந்த வருடத்தில் கிரகப் பெயர்ச்சிகள்…

ராகு – கேது பெயர்ச்சி: பிலவ வருடத்தில் பங்குனி மாதம் ராகு-கேது பெயர்ச்சி நிகழ்கிறது. பங்குனி மாதம் 7-ம் தேதி (21.3.2022), திங்கள்கிழமை அன்று மதியம் 2:52 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்கிறார். கேது பகவான் விருச்சிகத்திலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்கிறார்.

குருப்பெயர்ச்சி: குருபகவானின் வக்ர பெயர்ச்சி இந்த பிலவ வருடம் ஆவணியில் நிகழ்கிறது. அதாவது, ஆவணி மாதம் 29-ம் நாள் (14.9.2021) செவ்வாய்க் கிழமை அன்று, இரவு 9:48 மணிக்கு அவிட்ட நட்சத்திரம் 2-ம் பாதம் மகர ராசிக்கு (வக்ர பெயர்ச்சி) குருபகவான் பெயர்ச்சி ஆகிறார்.

அதேபோல், ஐப்பசி மாதம்-27 (13.11.2021) சனிக்கிழமை அன்று மாலை 6:10 மணிக்கு, அவிட்டம் 3-ம் பாதம் கும்ப ராசிக்குப் பெயர்கிறார்.

அதேபோல், பங்குனி-30 (13.4.2022) புதன்கிழமை அன்று நள்ளிரவுக்குப் பிறகு (விடிந்தால் வியாழன்) 4:09 மணிக்கு பூரட்டாதி 4-ம் பாதம் மீன ராசிக்குப் பெயர்கிறார்.

இந்த #பிலவ_வருடத்தில் சென்ற ஆண்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மக்கள் அனைவரும் இன்புற்று வாழ இறைவனை பிராத்தனை செய்வோம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

chennai_vastu

#tamil_daily_calender #vasthu,#vastu_tips

வாஸ்து #ஜோதிடம் #எண்கணிதம்

தினசரிதமிழ்காலண்டர்

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்