பயம், கோபம், மன அழுத்தம்

பயம் எனும் வியாதி

பயம், கோபம், மன அழுத்தம்
பயம், கோபம், மன அழுத்தம்

என்னோடு பயணப்படும் தொழில் சார்ந்த நண்பர்களில் ஒரு சில சினேக உறவுகளுக்கு உடல் நலம் பற்றிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. #உடல் நலம் பற்றி வருவது அனைத்தையும் விடாமல் தெரிந்து கொள்வார்கள். இந்த இடத்தில் எதற்காக எங்கே #வைத்தியம் பார்க்க வேண்டும்?எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் என்பது போன்ற விசயங்கள் அவர்களுக்கு அத்துபடியாக இருக்கும்.
பெரும்பாலும் உடல் நலம் என்றால் #வியாதிகள் பற்றிய செய்திகள்தானே? “அது சாப்பிட்டால் அது வரும்; இது சாப்பிட்டால் இது வரும்” என்று நிறைய #கட்டுப்பாடுகள் வைத்திருப்பார்கள். எங்காவது வெளியூர் #பயணங்கள் இருந்தாலும் மூன்று வேளைக்கும் உணவு கட்டிச் செல்வார்கள் . ஏன் அடுத்த இருவேளை உணவுகளை கூட கெடாத அமைப்பாக கொண்டு செல்வார்கள் அல்லது ஒரே நாளில் #வீடு வந்து விடுவார்கள்.அவர்கள் எப்போதும் தலைக்கு சாம்புகள் கூட உபயோகிக்க மாட்டார்கள். இயற்கை சார்ந்த #அரப்பு #தயிர் மற்றும் #சீகக்காய் போன்ற பொருள்களை உபயோகிப்பார்கள்.ஆனால் அவர்கள் தலை மட்டுமே நரைத்து இருக்கும். இது உடல் சார்ந்த கிரிகிரி தத்துவம் என்பது அவர்களுக்கு தெரியாது. அதாவது #மூலிகை வைத்தியரே பொறாமைப்படுமளவுக்கு அத்தனை அயிட்டங்கள் இருக்கும். சத்து மாவு, #மோர், வேக வைத்த கடலை, தினமும் ஒரு கீரை,மற்றும் தண்ணீர் கூட இயற்கை சார்ந்த சுத்திகரிப்பு செய்யாத விவசாய கிணறு சார்ந்த தண்ணீர் அதனை கொதிக்க வைத்த தண்ணீராக இருக்கும்.

#பயம் எனும் வியாதி

ஆனால், அவர்களுக்கு என்று ஏதாவது உடம்புக்கு வந்துகொண்டே இருக்கும். வருவதற்கெல்லாம் வைத்தியம் வைத்திருப்பார். “உங்களுக்கு எப்படி இதெல்லாம்?” என்று கேட்டால் சொல்வார்: “தவறுதலாக ஒரு நாள் வெளியே சாப்பிட்டாலோ தண்ணீர் குடித்தாலோ இதுதான் நிலை. கட்டுப்பாடாய் இருக்கணும். இப்போ தெரியுதா நான் ஏன் இவ்வளவு பயப்படறேன்னு?” என்பார்கள்.

என்ன நடக்கிறது நிஜத்தில்? உடல் நலம் அவர் கவனம் அல்ல. வியாதிகள் தவிர்ப்பில்தான் கவனம். காரணம், பயம் வியாதிகளை நினைக்க வைக்கும். நம்பிக்கையுடன் நலத்தை நினைக்க வைக்காது. வியாதிகளைத் தடுக்க வேண்டும் என்றால் வியாதிகளையே நினைக்க வேண்டும். எண்ணம், உணர்வு அனைத்திலும் வியாதி, வியாதி தடுப்புதான். ஆரோக்கியம் சுகம் என்பதை விட வியாதி தரும் வலியைத் தடுக்க வேண்டும். இதில்தான் கவனம்.

உள்ளத்தின் ஆற்றல்

பிரபஞ்ச சக்தியின் விதிகளின்படி அவர்களின் செய்கைகள் வியாதிகளை இழுத்து வரும். வியாதிகள் தடுக்கப்படுவதற்கான ஒருசில காரணங்களில் முக்கிய காரணம் மனம் ஒரு மிகப் பெரிய செயல் என என்று மனநல மருத்துவ உலகம் கூறுகிறது.

இன்னமும் சாதாரணமாக விளக்குவதென்றால் இப்படிப்பட்ட நபர்கள் எவ்வளவு கால தாமதம் ஆனாலும் வெளியில் தண்ணீர் மற்றும் உணவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் வயிற்றுக் கடுப்பு வரும். அதற்கு நன்கு சாப்பிட வேண்டும். எவ்வளவு ஆசையிருந்தாலும் கடையில் போட்ட வடையைச் சாப்பிட மாட்டார்கள்.

வெளிவேலை என்றால் கொலைப் பட்டினியாய்த்தான் வீட்டுக்கு வருவார்கள். இப்படி ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் ராணுவ ஒழுங்கில் கண்காணித்து உபாதைகளை வரவழைத்துக்கொள்கிறார்கள். எதற்குப் பயந்தாரோ அதுவே நடக்கும். ஆனால் தன் பயத்துக்குக் காரணம் தன் உடல் நிலை என்று அவர் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கும்.

இது எல்லா மனநிலைகளுக்குப் பொருந்தும். உங்கள் வாழ்வில் உங்களுக்கு அதிகம் வரும் எண்ணம் என்ன?, உணர்வு என்ன? என்று பாருங்கள். அவைதான் அத்தனை நிகழ்வுக்கும் காரணங்கள். ஆனால், தங்கள் வாழ்வின் அனுபவங்களால் தான் அப்படி நினைப்பதாக, உணர்வதாக அவர்கள் சொல்வார்கள். அதுதான் மனம் செய்யும் மாயம்!

இந்த மனம் சார்ந்த நிகழ்வு காரணமாக தான் அறிவியல் வளர்ச்சி தோன்றியது என்று சொன்னால் மிகை ஆகாது. அந்தவகையில் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னால் ஒரு எதிர்வினை உண்டு என்பது #நியுட்டன் அவர்கள் கூறும் மூன்றாவது விதி.இந்த விதி மனித வாழ்வில் அனைத்து இடங்களிலும் இருக்கும். அதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு தீமை நடந்தால் மட்டுமே நடக்கும். அதாவது இன்று நம் அனைவருமே இயற்கை இயற்கை என்று கூறிக்கொண்டு வாழ்கிறோம்.இந்த இயற்கை என்பது சரியான முறையில் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி என்றால் இன்று நீங்கள் ஆடைகளை அணிகின்றிர்கள் என்றால் அப்படியே பருத்தியை தோட்டத்தில் பறித்துவந்து அப்படியே ராட்டையில் நூலாக மாற்றி எந்த விதமான சாயங்களை சேர்க்காது #வள்ளளார் அணிந்த தூய ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். #வர்ணம் என்பதே #வெள்ளைக்காரர்கள் அவர்கள் நாட்டில் இயற்கை அமைப்பு சார்ந்த வர்ணங்களை #பிரிட்டிஷ் #கலர் என்று உலகம் முழுவதும் அறிமுகம் செய்தார்கள்.இதனை இன்று #பணக்கார_உலகம் பிடித்துக்கொண்டு வாழ்கிறது. அதுபோல அவர்கள் அறிமுகம் செய்த உணவுப்பொருள்களில் சுத்திகரிப்பு என்பது இன்றைய அவசர உலகில் தேவையாக இருக்கிறது.எப்படி என்றால் உணவு எண்ணெய் சார்ந்த உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய முடியவில்லை. அதாவது நமது உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகிவிட்டது.ஏனெனில் இன்று எங்கே பார்த்தாலும் துரித உணவகங்கள் பெருகி விட்டன.இதுவும் தவறான பழக்க வழக்கம் ஆகும் .உணவு எண்ணெய் வித்துக்களை பொறுத்தவரை மழைக்காலத்தில் அறுவடை செய்யும் நிகழ்வு மட்டுமே 80 சதவீதம் இந்திய துணை கண்டத்தில் இருக்கிறது. அப்படி அறுவடை காலத்தில் எல்லா எண்ணெய் வித்துக்களிலும் அப்ளோடாக்ஸி என்று சொல்லக்கூடிய #பூஞ்சைகள் தாக்குதல் உண்டு. அதனை தனியாக பிரிப்பது என்பது நமது நாட்டில் இக்காலத்தில் நடக்காது.இதனை சுத்திகரித்து தருவதே ரிபைன்ட் ஆயில் ஆகும். அப்படி சுத்திகரிப்பு செய்யும் போது நல்ல சத்துக்கள் கூடவே சுத்தப்படுத்தும் செயலும் நடந்து விடும். இதனை நாம் ஏற்று கொண்டு தானே ஆக வேண்டும்.

ஆக மேற்சொன்ன உணவு சம்பந்தப்பட்ட விளக்கம் கூட கீழுள்ள வார்த்தைகளுக்கு பொருந்தும். சந்தேகப்படுபவருக்கு அவர் சந்தேகிப்பது சரி என்பது போன்ற சாட்சியங்கள் கிடைக்கும். அது அவர் சந்தேகத்தை உறுதி செய்யும். கோபம் கொள்பவரைக் கோபப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கும். தான் கோபம் கொள்வது இவற்றால்தான் என்று நியாயம் சொல்வார்.இந்த மாதிரியான செயல் அனைத்திலும் காரணம் பயமே.நோய்கள் மற்றும் உறவுகள் சார்ந்த பிரிவுகள் நடந்து விடுமோ என்கிற பயமே அனைத்து விசயங்களுக்கும் காரணம். முதலில் பயத்தை விடுங்கள். பயமின்றி நாயை போல வாழுங்கள். இந்த இடத்தில் நாய்களை உதாரணமாக எடுத்து கொண்டு வாழுங்கள். அதாவது நம்ம வீட்டில் உள்ள நாயைப்போல நன்றி உள்ள, எதற்காகவும் பயப்படாத உயிரினங்கள் எதுவும் கிடையாது. பயம் வருகிறதா?நாய்களை பார்த்து கற்று கொள்ளுங்கள். பயத்தை யார் ஒருவர் விடுகின்றனரோ அவர்களை சுற்றி பணமும், ஆரோக்கியமும் நாய் குட்டியை போல நம்மை நக்கிக்கொண்டே சுற்றிக்கொண்டு இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு

Arukkani Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp: 9965021122
www.chennaivasthu.com
youtube: https://www.youtube.com/user/jagannathan6666

error: Content is protected !!