
பதினாறும் பெற்று பெருவாழ்வு வேண்டுமா?
வித்தியாரம்ப காலத்தின் போது,திருமண வைபவத்தின் போது,கிரக பிரவேச ஆரம்ப நிகழ்வுகள் சார்ந்த விழாக்களில் என்றும் உங்களுக்கு பதினாறு பேறுகளையும் பெற வேண்டும் என்றால் நீங்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும்.
எந்த வொரு காரியங்களிலும் தடை என்கிற விசயம் இருக்கும். இறை வழிபாட்டில் ஒரு பதினாறு நாமங்களை சொல்லி விட்டு காரியத்தில் ஈடுபடும் போது வெற்றி என்பது எளிதாக கிடைத்து விடும்
இந்த வகையில் பதினாறு பெயர்களை நீங்கள் உச்சரிக்கும் போது,அல்லது ஒருவர் சொல்ல நீங்கள் கேட்கும்போது, அல்லது படிப்பதையோ,அல்லது ஒருவர் சொல்வதையோ நீங்கள் கேட்கும்போது கூட சொல்லும் போது,கல்வி வித்தையிலும்,விவாஹ நிகழ்வு சார்ந்த, பிரவேசம் இப்படி சகல காரியங்களிலும் வெற்றி என்பது தின்னம்.
பதினாறின் பெருமை பற்றி பார்ப்போம்.
மிகவும் உயர்வு பொருந்திய எண்ணிக்கையே பதினாறு என்பது ஆகும். ஷோடச கலா பூர்ணிமா என்று அமாவாசை முதல் கொண்டு எண்ணி பெளர்ணமி வரை உள்ள மொத்த நாட்களையும்ம கூறுகின்றோம். இதில் பதினாறு கலைகளும் கூடிய நாளாக முழுநிலவு நாள் உள்ளது.ஆகவே அம்பாளை முழு நிலவின் வடிவமாக ஷோடசி என்று மற்றொரு பெயரும் உண்டு. அந்தவகையில் அம்பாளுக்கு பதினாறு சோடச அட்சரங்களும்,அம்பாளின் பிள்ளையான வினாயக பெருமானுக்கு பதினாறு சோடச நாமாக்களாலும் குறிப்பிடுகின்றோம்.
ஆக பேறுகள் பதினாறு பிள்ளையாருக்குப் பேர்கள் பதினாறு
1.ஸுமுகர்
2.ஏகதந்தர்
3.கபிலர்,
4.கஜகர்ணகர்,.
5.லம்போதரர்
6.விகடர்
7.விக்நராஜர்
8.விநாயகர்
9.தூமகேது
10.கணாத்யக்ஷர்
11.பாலசந்த்ரர்
12.கஜானனர்
13.வக்ரதுண்டர்
14.சூர்ப்பகர்ணர்
15.ஹேரம்பர்
16.ஸ்கந்தபூர்வஜர்.
இந்த பதினாறு பெயர்களை நீங்கள் தினமும் சொல்லி விட்டு எவ்விதமான காரியங்களையும் தொடங்கும் போது அக்காரியங்களில் ஏவ்விதமான இடையூறுகளும் ஏற்படாது.
முருகரின் அண்ணாவை அழைத்து விட்டு அனைத்து காரியங்களிலும் ஈடுபாடு செலுத்துவோம். ஷோடச நாமக்களில் ஸ்கந்த பூர்வஜர் என்கிற பெயரைச்சொல்லி முடிக்கும் போது மற்ற பிள்ளையின் ஞாபகத்தில் வந்து விடும்.
நாம் அனைவரும் பார்வதி பரமேஸ்வரரின் பிள்ளைகளே.ஆக பார்வதி பரமேஸ்வர கடவுளுக்கு மூத்த பிள்ளை நம் விநாயக பெருமான் ஆவார். ஆக நம் எல்லோருக்கும் மூத்த அண்ணணாக விநாயக பெருமான் விளங்குகிறார்.தினமும் காலை எழுந்தவுடன் காரியங்களை தொடங்குவதற்கு முன்பாக கீழுள்ள அவரின் ஷோடச நாமாவளிகளை ஒருதரம் சொல்லிவிட்டு செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி விநாயக பெருமான் அருளால் வெற்றியே.
ஸுமுகச் – சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக : l
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக : ll
தூமகேதுர் – கணாத்யக்ஷ : பாலசந்த்ரோ கஜாநந : l
வக்ரதுண்ட : சூர்பகர்ணோ ஹேரம்ப : ஸ்கந்தபூர்வஜ : ll
ஷோடசைதாநி நாமாநி ய : படேத் ச்ருணுயாதபி l
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேசே நிர்கமே ததா ll
ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷ§ விக்நஸ்தஸ்ய ஜாயதே.
ஆக அனைவரும் இந்த பதினாறு பெயர்களை சொல்லி பதினாறு பேறுகளை அடைவீர்களாக.