வாஸ்துவில் அதிர்ஷ்டம்

பணம் ஈர்க்கும்பழக்க வழக்கங்கள். , பணவளக்கலை

பணம் ஈர்க்கும்பழக்க வழக்கங்கள்.

🍓பணவளக்கலை🚩

அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கரண்டி இல்லாமல் கையால் பரிமாறக் கூடாது.பெண்மணிகள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது ஒட்டடை இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.விளக்கு ஏற்றிய பிறகு தைக்கும் ஊசியை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.கோலம் இட்ட வீட்டில் தாயார் தங்குவார்கள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாதுநகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

error: Content is protected !!