chennai vasthu

பணம் வேண்டுமா?நிம்மதி வேண்டுமா

chennaivasthu
chennaivasthu

#பணம் வேண்டுமா?

உங்களுக்கு #நிம்மதி வேண்டுமா?

ஒருசில விசயங்களை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து பாருங்கள் #வெற்றி_நிச்சயம்.இந்த இடத்தில் சுத்தம் என்பது கூ மிகப்பெரிய விசயம்.பணத்திற்கும் சுத்தத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. என்னடா இவன் சுத்தத்திற்கும் பணத்திற்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று சொல்கிறானே என்று நினைக்கிறீர்களா? கட்டாயம் இதற்கும் அதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சாப்பிட்ட பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். எப்போதும் நம்மை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இது என்ன விஷயம் சாப்பிட்டபிறகு எல்லோரும் கையை கழுவத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். எனது அனுபவத்தில் அப்படி இல்லை என்று நினைக்கிறேன். முக்கியமாக சாதாரணத் தின்பண்டங்களை இடை நேரத்தில் அதாவது, சிறுசிறு உணவுப் பொருள்களையும் சாப்பிடும்போது நம் #குழந்தைகள் மற்றும் நாமும் கைகளை கழுவுவது ஏறக்குறைய இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்போ, தின்பண்டங்களை சாப்பிடுவதற்கு முன்பபோ, சாதாரணமாக குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, 50 சதவீத #மக்கள் கைகளை கழுவுவது இல்லை. நிச்சயமாக எந்த உணவுகளை எடுத்தாலும் கைகளை கழுவ வேண்டும். இது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவிலும், #கிழக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களும் இதனை செய்வதில்லை. அதேபோல கழிவறைகளை உபயோகப்படுத்தும் முறையும் சரியாக நிறைய மக்களுக்கு தெரிவதில்லை.கழிவறைகளுக்கு சென்று வந்த பிறகு கட்டாயமாக மற்றவர்களுக்கு சோப்பு போடுவதை தவிர்த்து நமது கைகளை நன்றாக #சோப்பு போட்டுத் கழுவிக்கொண்டு தான் எந்த பொருளையும் தொட வேண்டும்.சரி நண்பர்களே விஷயத்திற்கு வருவோம்.

சுத்தத்திற்கும் நமது வெற்றிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது .சுத்தமாக இருந்தாலே நமக்கு வரும் உடல் உபாதைகள் பாதியாக குறைந்து விடுகிறது .#நோய்க்கிருமிகள் உடலில் ஒட்டிக் கொள்வதில்லை. மற்றும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுவதில்லை. உடல்நலத்துடன் இருந்தால்தான் நம்மால் உற்சாகமாக செயல்பட முடியும்.ஆரோக்கியமான உடல் நிலை இருந்தால் மட்டுமே எங்கும் பயணப்பட முடியும். இதற்கு அடிப்படையான முதல் காரணம் சுத்தம். ஏற்கனவே நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் சுத்தம் #சோறு போடும் என்று,

மீண்டும் நல்ல பதிவோடு சந்திப்போம்.

மேலும் விபரங்களுக்கு

Arukkani Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp: 9965021122
www.chennaivasthu.com
youtube: https://www.youtube.com/user/jagannathan6666

error: Content is protected !!