வாஸ்து புருஷ மண்டலம்

பணம் பெருக்க வாஸ்து

ஆயாதி பொருத்தம்
ஆயாதி பொருத்தம்

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் என்று எம்ஜிஆர் தன்னுடைய படத்தில் இதனை நம் முன்னோர் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொல்லி வைத்துள்ளனர். அப்படி ஓடி ஓடி உழைத்தும் பணத்தை சேமிக்க முடிவதில்லை. பல பேருக்கு பணம் வருவதிலேயே பற்றாக்குறை இருக்கிறது. இதற்கு காரணம் வாஸ்து ரீதியாக அடிப்படையான வீட்டின் அமைப்புதான். சரியான வாஸ்து கட்டிட இடங்களில் நீங்கள் இருந்தால் இயல்பாகவே உங்களுக்கும் அந்த பணம் என்கிற விஷயம் நிரந்தரமாக உங்களிடம் புரளும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்ய முடியும்.

ஒரு வீடு கீழ்க்கண்டவை போல இருந்தால் பணம் என்பது எப்பொழுதுமே பற்றாக்குறை இல்லாத மனிதர்களை உருவாக்கும்.அல்லது வாழவைக்கும்.

வடக்கும், கிழக்கும் அதிக இடங்கள். மற்றும் திறந்தவெளி உள்ள அமைப்புகள். வடகிழக்கு சார்ந்த வடக்குப் பகுதியிலுள்ள ஜன்னலையும் கிழக்குப் பகுதியிலுள்ள சாரளங்களை திறந்தால் வானம் தெரியும் படியான கட்டிடம்.வடகிழக்கில் உச்ச பகுதியில் தலைவாசல் அமைப்பு. அல்லது மொத்த இடத்திற்கு புதன் சார்ந்த உச்ச வாசல்.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மதில் சுவருக்கும், வீட்டிற்கும் இடைப்பகுதியில் அதிக காலியிடங்கள் இருப்பதும்,
வடகிழக்கு ஈசான தெருப்பார்வை அல்லது தெருக்குத்து போன்ற அமைப்புகள் மற்றும்
வடமேற்கு, மேற்கு பகுதியில் தெரு பார்வை அல்லது தெருக்குத்து இருப்பது.தென்கிழக்கு, தெற்கு தெரு பார்வை அல்லது தெருக்குத்து இருப்பது.
வீட்டினுள் வடகிழக்கு பகுதியை வரவேற்பறையாக உபயோகிப்பது.
தரை தளம் மற்றும் முதல் தளம் பிரமிடு போல் இல்லாமலும், ஒரு பக்கம் சரிந்து இல்லாமலும் இரண்டும் சமமாக இருப்பது.

வீட்டைச் சுற்றிலும் உள்ள இயற்கை சூழ்நிலைகளான மலை, குன்று போன்ற அமைப்புகள் நமக்கு சாதகமாக இருந்தது
வீட்டின் வெளிப்புறத்தில் நீச்சமான பகுதியில் பள்ளம் குழி தாழ்வான அமைப்புகள் போன்றவை இல்லாமல் இருப்பது
மதில் சுவரின் உச்சமான பகுதியில் முக்கியமான கேட் வைத்திருப்பது. ஆறு ஓடை குளம் குட்டை போன்ற எதிர்மறையான விஷயங்கள் நம்முடைய வீட்டிற்கு மிக அருகில் வராமல் இருப்பது
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சிறிய அளவில் தாழ்வாரங்கள், பந்தல், போர்டிகோ அமைத்து இருப்பது. கார் பார்க்கிங், காவலர்கள் அறை, நாய் கூண்டு, போன்றவைகளுக்கு என்று பிரத்தியோகமான இடத்தை உருவாக்கி இருப்பது
மதில் சுவருக்கும் வெளிப்புறத்திலும் தரை தளம் தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு சற்று தாழ்வாகவும் இருப்பது எந்த ஒரு மூளையையும் வளர்ச்சியும், தளர்ச்சியும் இல்லாமல் கட்டிடங்களை உருவாக்கி இருப்பது. திசைகாட்டிக்கு சரியான திசையில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இயற்கையாகவே கட்டிடங்கள் இல்லாதிருக்கும்போது சரியான திசையை பார்க்கும் வாயில் அமைத்துக் கொடுப்பது அதாவது வாயில் இருப்பது .

error: Content is protected !!