பணம் பெருக்கும் ரகசியம்

ஒரு மனிதனை அடையாளம் காண்பிப்பதும் அளவீடு செய்வதும் அவர்களிடத்தில் உள்ள இந்த இரண்டு நிலைகள் தான்.
செல்வந்தனுக்கு இவ்வுலகில் மதிப்பும் கௌரமும் தரப்படுவதும், சொல்வந்தனுக்கு நாணயஸ்தன் என்ற மதிப்புடன் பாக்கியத்தை தரக்கூடியது என்பது சான்றோர்கள் கூற்று.
வாஸ்து பயணத்தில் எனக்கு அறிமுகம் ஆன ஒரு நண்பர் என்னிடம் கல் உப்பை ஒரு குவளையில் நிரப்பி வைத்து கொண்டால் எளிதாக நிறைவு பணம் சேரும் என்று சொல்கிறார்கள் இப்படி செய்யலாமா?என்றார்.
மற்ற ஒரு அன்பர் நெல்லிக்கனியில் விளக்கு ஏற்றினால் லட்சுமி ஆசிகள் கிடைத்து செல்வம் சேரும் என்று முகநூலில் தெரிந்து கொண்டோம் இப்படி செய்யலாமா?என்றார்.
இவர்களை போல சிலர் பணத்துடன் கிராம்பை வைத்து கொள்வதும் சிலர் மஞ்சள் குங்குமம் வைத்து பணத்தை வைத்து கொள்வதால் பணம் பெருகும் என்பதும் பணவோலையை நமது பர்ஸில் வைத்தால் செல்வம் பெருகும் என்பதும், அரிசி பானையில் பணத்தை வைப்பதும், பஞ்சலோகத்துடன் பணத்தை சேமிப்பதும் போன்ற செயல்களினால் பணம் பெருகும் என்றும் நாம் வளத்தில் மேன்மை பெற்று வாழ்வோம் என்பதும்,அவர்களின் நேரம் சார்ந்த செயல் என்றே சொல்வேன்.

செல்வச்செழிப்புடன் வாழ்பவர்கள் இதுபோல செயல்கள் செய்வதை நாம் கண்டது இல்லை கேள்விப்பட்டதும் இல்லை.தாந்த்ரீக செயல்களான இவைகள் ஒருபொழுதும் நமக்கு மேன்மை தருவது இல்லை என்று நாம் அனுபவத்தில் சில நண்பர்களை கவனித்த பின்பே இங்கு பதிகிறோம்.

சோதிட கணிதங்களில் குருவின் பரலை கணக்கிட்டு பணமதிப்பீட்டை அறியமுடியும்.சுக்ர அமைப்பை கணக்கிட்டு அந்த பணத்தில் சுகத்தை அடையமுடியுமா என்று அறிய முடியும்.இவைகள் கணிதங்கள் மட்டுமே. சோதிடமுறைகள் இல்லாமல் அனுபவத்தில் நாம் கவனிக்கவேண்டியது ஒரு மனிதனோ அவனது இருப்பிடமோ சுத்தமாக இருப்பது பணத்தின் மேன்மையை அவர்களிடத்தில் அதிகரித்து வரச்செய்யும் என்பது தான் செல்வவளத்தின் முதல் படிஎன்றே சொல்லவேண்டும்.
நம் சமயத்தில் இதை மையப்படுத்தியே ஆடைகளை சுத்தமாக அணியவேண்டும் வீட்டில் குப்பைகளை சேர்க்கக்கூடாது சமையல் அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் உதிர்த்த தலைமுடியை வீட்டில் பறக்க விடக்கூடாது பெண்கள் தலையை விரித்து அலையக்கூடாது உணவிற்கு பின் இருப்பிடத்தை சுத்தம் செய்யவேண்டும் . கிழிந்த உடைகளை செருப்பை தைத்து போடக்கூடாது என்றும், வெற்றிலை மாவிலை சந்தனமர கட்டை புனுகு கோரோசனை கஸ்தூரி ஜவ்வாது அகில் பச்சை கற்பூரம் குங்குமப்பூ போன்றது வீட்டில் இருப்பதும், இவைகளை பூசைகளுக்கு பயன்படுத்தி நாம் உபயோகிப்பது மிக மேன்மையான பலன்களை தரும். என்று நம் வழக்கத்திற்கும் நாம் வணங்க இவைகள் மங்கள பொருட்கள் என்றும் லட்சுமி தேவியின் அம்சம் என்று நம் ரிஷிகளும் சித்தர்களும் நமக்கு சொல்லிவைத்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
மஹாலக்ஷ்மியின் அம்சத்தில் நறுமணமும் சுத்தமும் ஒரு பாகம் என்றே சொல்லவேண்டும்.அந்த வகையில் உங்கள் இல்லம் மற்றும் உங்கள் உடல் எப்போதும் சுத்தமாக வைத்துககொள்ளும் போது பணம் என்றும் பற்றாக்குறை வாழ்க்கையாக இருக்காது.

பணம் பெருக்கும் ரகசியம் வாஸ்து
error: Content is protected !!