நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா?

#பணம்ஈர்க்கும் #ரகசியங்கள்.

 

ஒரு விஷயத்தைச் சாதிக்கவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால், அதன்பிறகு எப்போதும், எதற்காகவும் நேரத்தை, வீணடிக்கக் கூடாது.விழித்திருக்கிற நேரத்தையெல்லாம், நம்முடைய லட்சியத்துக்குப் பயன்படும் வகையில் ஏதேனும் உருப்படியாகச் செய்வதில்தான் செலவிட வேண்டும் நண்பர்களே!!

 

உங்களது பிள்ளைப்பருவத்தில் அல்லது இளமைக் காலத்தில் விளையாட்டாக கற்றுக்கொள்கிற விசயங்களை, அலட்சியமாக நினைத்துவிடாதீர்கள். பின்னாளில் அவையே உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடும்.தீர்மானிக்கும். ஏனெனில் எனது வாழ்க்கையில் 15, 16 வயதுகளில் அதாவது1988,89 காலகட்டத்தில் #வாஸ்து சார்ந்த, #மனையடி சார்ந்த, #ஜோதிடம் சார்ந்த, புத்தகங்களில் மூழ்கி இருப்பேன்.

 

அதுவே இன்று எனக்கு வாழும் நிலையை அளித்துள ளது .பணம் சம்பாதிக்கிறவர்கள் எல்லோருக்குமே, அந்தப் பணம் இன்னொருவரிடமிருந்துதான் வந்தாக வேண்டும். ஆகவே அந்த இன்னொருவருக்கு என்ன பிரச்சனை, அதை எப்படித் தீர்க்கவேண்டும் என்பதில்தான் நமது முதல் கவனம், அக்கறை எல்லாம் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்களாக மனமுவந்து, நம் சட்டைப் பாக்கெட்டில் பணத்தை வைத்து விட்டுப்போவார்கள்.இந்த பழக்கம் அனைத்து தொழில்களுக்கும் பொருந்தும்.

 

மீண்டும் அற்புதமான கருத்துக்களோடு சந்திப்போம்.

என்றும் #பிரபஞ்ச சத்திகளின் துணையுடன்.

#சென்னை#வாஸ்து

#ஜெகன்.#Whatsapp_9965021122.