பணப்பெட்டி வாஸ்து

ஆன்மீக இரகசியம்:

கேரள மாநிலம் மாவெளிகர அருகில் மானாவாரியில் பழாமரத்தில் மரவேலை செய்யும் மக்கள் இருக்கிறார்கள்.இவர்கள் பணப்பெட்டி பழா மரத்தை கொண்டு செய்வார்கள். இந்த இடத்தில் பணப்பெட்டியை தேக்கில் செய்ய வேண்டும், கருங்காலி மரத்தில் செய்ய வேண்டும்,செவான் மரத்தை கொண்டு செய்ய வேண்டும் என்று சொல்லுகிற வாஸ்து மற்றும் ஜோதிட மக்களை நான் பார்த்திருக்கிறேன். பணப்பெட்டி வேண்டும் என்றால் பழா மரத்தில் மட்டுமே செய்ய வேண்டும். பலாமரம் என்பது பணத்தை இருக்கக்கூடிய மரம் தேக்கு என்றால் பணம் தேங்கும் என்பது கிடையாது. பணத்தை வரவழைப்பதில் தேக்க வைக்கும்.

வாஸ்து ரகசியம்:

வீட்டின் தலைவாசல் என்பது கிழக்கு வடக்கு கதவுகளை கண்டிப்பாக பலம் பொருந்திய மரமாக பலா மரத்தில் அமைக்க வேண்டும். அதனை விடுத்து என்னுடைய அந்தஸ்தை காட்ட வேண்டும் என்னுடைய பணம் வலிமையை காட்ட வேண்டும் என்பதற்காக ராஜநிலை தலைவாசலை தேக்கு மரத்தில் அமைத்தால் நிச்சயமாக உங்கள் வாழ்க்கை தேக்கமடையும். பலா மரம் எங்கு அமைக்க வேண்டும், தேக்கு மரம் எங்கு அமைக்க வேண்டும், கருங்காலி மரத்தை எங்கு அமைக்க வேண்டும், ஈட்டி மரத்தை எங்கு அமைக்க வேண்டும், வேம்பு மரத்தை எங்கு அமைக்க வேண்டும், என்கிற பல வாஸ்து தத்துவார்த்த விதிகள் இருக்கின்றன. இதனை எனக்கு எல்லாம் தெரியும் என்று செய்தால் வாழ்க்கையில் கஷ்டம் தான் மிஞ்சும்.